UAE: புதிய 1,000 திர்ஹம் கரன்சியை வெளியிட்ட ஐக்கிய அரபு அமீரகம்; என்ன சிறப்பு?

2023ஆம் ஆண்டில் முதல் அரையாண்டு காலத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கிக் கிளைகள், ஏ டி எம் எந்திரங்களில் இந்த புதிய கரன்சி கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய 1,000 திர்ஹாம் கரன்சியை வெளியிட்ட ஐக்கிய அரபு அமீரகம்
புதிய 1,000 திர்ஹாம் கரன்சியை வெளியிட்ட ஐக்கிய அரபு அமீரகம்ட்விட்டர்
Published on

ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி நேற்று (டிசம்பர் 2ஆம் தேதி) புதிய 1,000 திர்ஹம் மதிப்புள்ள கரன்சி நோட்டுகளை வெளியிட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் 51ஆவது தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய கரன்சி வெளியிடப்பட்டுள்ளதாக கல்ஃப் நியூஸ் வலைதளத்தில் செய்தி பிரசுரமாகியுள்ளது.

இந்த புதிய கரன்சி நோட்டு, பாலிமரில் உருவாக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் முதல் அரையாண்டு காலத்துக்குள் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கிக் கிளைகள், ஏ டி எம் எந்திரங்களில் இந்த புதிய கரன்சி கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் பழைய (தற்போது புழக்கத்தில் இருக்கும்) 1,000 திர்ஹம் கரன்சி நோட்டுகளும் வழக்கம் போல செல்லுபடியாகும் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய 1,000 திர்ஹம் நோட்டின் முன் பக்கத்தில் மறைந்த முன்னாள் ஐக்கிய அரபு அமீரக உயர் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் அவர்களின் படத்தோடு ஒரு ராக்கெட் மற்றும் விண்களத்தின் படம் உள்ளது.

புதிய 1,000 திர்ஹாம் கரன்சியை வெளியிட்ட ஐக்கிய அரபு அமீரகம்
பைடன் செளதி பயணம்: அரபு இளவரசருக்கு சங்கடத்தை ஏற்படுத்திய அமெரிக்க அதிபரின் ஒற்றைக் கேள்வி

ஐக்கிய அரபு அமீரகமும், விண்வெளித் ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்க வேண்டும் என்பதற்காக,

1976ஆம் ஆண்டு சயீத் பின் சுல்தான் நாசாவின் முன்னோடிகளைச் சந்தித்துப் பேசியதை நினைவுகூரும் படம் அமைந்துள்ளது.

சயீத் பின் சுல்தான் கண்ட கனவு, "ஹோப் பிராப்" என்கிற எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன் திட்டத்தின் மூலம் கடந்த 2021ஆம் ஆண்டு நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து, பாதுகாப்பு இழையில் ஒரு விண்வெளி வீரரின் படமும் உள்ளது. அது ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் விண்வெளி வீரர் விண்ணுக்குச் சென்றதை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

புதிய 1,000 திர்ஹாம் தாளின் பின்பக்கத்தில், அபுதாபியில் உள்ள பராகா அணுசக்தி மின்சார நிலையத்தின் படம் உள்ளது.

இது ஐக்கிய அரபு அமீரகம், கார்பன் உமிழ்வைக் குறைப்பதிலும், நாட்டின் மின்சார உற்பத்தியை பரவலாக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்த புதிய 1,000 திர்ஹம் கரன்சி நோட்டை யாரும் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில், இண்டாகிலோ (intaglio) அச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கல்ஃப் நியூஸ் வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய 1,000 திர்ஹாம் கரன்சியை வெளியிட்ட ஐக்கிய அரபு அமீரகம்
ஐக்கிய அரபு அமீரகம் செல்ல முயற்சி செய்கிறீர்களா? - இந்தக் கட்டுரை உங்களுக்கானது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com