கடல் அலையில் தோன்றிய பெண் முகம் - நீர் கடவுளின் வடிவமா? நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?

12 மணி நேரம் நீண்ட இந்த ஃபோட்டோஷூட்டில், கிட்ட தட்ட 4000 புகைப்படங்களை இவர் எடுத்திருக்கிறார். கடலலைகளில் உருவாகும் வித்தியாசமான வடிவங்களை புகைப்படமாக எடுப்பது இவரது பேஷன் என் இந்தியா டுடே தளம் கூறுகிறது.
கடல் அலையில் தோன்றிய பெண் முகம் - நீர் கடவுளின் வடிவமா? நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?
கடல் அலையில் தோன்றிய பெண் முகம் - நீர் கடவுளின் வடிவமா? நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?இன்ஸ்டாகிராம்
Published on

கடலலை, கச்சிதமாக ஒரு பெண்ணின் முகம் போல தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார் இங்கிலாந்தை சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர்.

இந்த புகைப்படத்தை தன் சமூக வலைத்தள பக்கத்தில் , “நீரின் கடவுள்” என தலைப்பிட்டு பகிர்ந்திருந்தார். இது இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இங்கிலாந்தின் வடக்கு டைனிசைட் மாகாணத்தை சேர்ந்த புகைப்படக் கலைஞர் இயான் ஸ்ப்ரோட். இவர் சமீபத்தில் சண்டர்லாண்ட் பகுதியில் கடலுக்கு மத்தியில் அமைந்திருக்கும் லைட் ஹவுஸில் ஒரு ஃபோட்டோஷூட் நடத்தினார்.

12 மணி நேரம் நீண்ட இந்த ஃபோட்டோஷூட்டில், கிட்ட தட்ட 4000 புகைப்படங்களை இவர் எடுத்திருக்கிறார். கடலலைகளில் உருவாகும் வித்தியாசமான வடிவங்களை புகைப்படமாக எடுப்பது இவரது பேஷன் என் இந்தியா டுடே தளம் கூறுகிறது.

இவர் எடுத்த புகைப்படங்களை பார்த்துக்கொண்டு இருக்கும்போது எதேர்ச்சியாக புகைப்படம் ஒன்று சிக்கியது.

கடல் அலையில் தோன்றிய பெண் முகம் - நீர் கடவுளின் வடிவமா? நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?
Christ the Redeemer: மீட்பர் இயேசு சிலையை தாக்கிய மின்னல் - இணையத்தில் புகைப்படம் வைரல்

அந்த புகைப்படத்தில், கடல் அலை ஒரு பெண்ணின் முகவடிவம் கொண்டுள்ளதை அவர் கவனித்திருக்கிறார். அதனை, “நீரின் கடவுளாக இருக்குமோ? அல்லது மறைந்த நம் அரசி எலிசபெத்தின் வடிவமா?” என தலைப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்

“முதலில் இதை பார்த்து நானும் சற்று அதிர்ச்சியடைந்தேன்” என பிபிசி தளத்திடம் கூறியவர், மற்ற புகைப்படங்களுடன் ஒப்பிடும்போது இது சிறந்த புகைப்படமாக இல்லை என்றாலும், தன்னை சந்தோஷப்படுத்தியது என்றார்.

கொரோனா பெருந்தொற்று பாதிப்பினால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த இயான், அதிலிருந்து வெளிவர போட்டோகிராபியை தேர்வு செய்ததாக கூறினார்.

“போட்டோகிராபி எனக்கு மன அமைதியை கொடுத்தது. நாம் அந்த குறிப்பிட நொடியில் வாழலாம், தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்க இது சிறந்த வழி என்று கருதினேன்.” என்கிறார் இயான்

ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ள இணையவாசிகள் இவரது இந்த புகைப்படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

கடல் அலையில் தோன்றிய பெண் முகம் - நீர் கடவுளின் வடிவமா? நெட்டிசன்கள் ரியாக்‌ஷன் என்ன?
2022 -ன் நகைச்சுவையான புகைப்படங்கள் - விருதை தட்டி சென்ற இந்தியர்! ஒரு க்யூட் தொகுப்பு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com