Rishi Sunak: அபராதம் செலுத்திய பிரிட்டன் பிரதமர் - என்ன காரணம்?

100 பவுண்டுகள் அபராதத்தை செலுத்திய ரிஷி சுனக், தனது தவறிற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.
Rishi Sunak
Rishi Sunaktwitter

கார் ஓட்டும்போது சீட் பெல்ட் அணியாததால் அபராதம் செலுத்தியுள்ளார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்.

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பது போல, சாமியனின் ஆனாலும், நாட்டின் பிரதமர் ஆனாலும், விதிமுறைகளை மீறினால் நிச்சயம் தண்டனை என சொல்லாமல் சொல்லியிருக்கிறது பிரிட்டன் நாட்டு காவல்துறை.

என்டிடிவியின் அறிக்கையின்படி வடக்கு இங்கிலாந்து நோக்கி பயணித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதற்காக வீடியோ ஒன்றை தனது காரில் அமர்ந்தபடி எடுத்துள்ளார்.

அப்போது அவர் சீட் பெல்ட் அணியாமல் இருந்ததாக தெரிகிறது

Rishi Sunak
ரிஷி சுனக் பெயரை தவறாக உச்சரித்த ஜோ பைடன் - நெட்டிசன்களின் ரியாக்ஷன் என்ன?
Rishi Sunak
Rishi SunakTwitter

இதனை கவனித்து ரிஷி சுனக்கின் காரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள், சீட் பெல்ட் அணியாத குற்றத்திற்காக அவருக்கு அபராதம் விதித்தனர்.

சீட் பெல்ட் அணியாமல் பயணிப்பது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். நாட்டின் பிரதமர் என்ற பொறுப்பில் இருப்பவரே இவ்வாறு செய்வது சிறந்த உதாரணம் அல்ல எனக் கூறி இவருக்கு அபராதம் போடப்பட்டது.

100 பவுண்டுகள் அபராதத்தை செலுத்திய ரிஷி சுனக், தனது தவறிற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார்.

”தன் தரப்பில் சிறு பிழையாகிவிட்டது (brief error of judgement) என்று குறிப்பிட்டவர் இனி இதுபோன்று நடைபெறாது எனவும் தெரிவித்திருந்தார்.

இது ரிஷி சுனக் மீது விதிக்கப்படும் இரண்டாவது அபராதம் ஆகும். இதற்கு முன்னர் கடந்த 2020ல் ரிஷி சுனக் கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாகக் கூறி அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு அப்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் மீதும் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Rishi Sunak
Rishi Sunak : குச்சிபுடி நடனமாடிய பிரிட்டன் பிரதமரின் மகள் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com