Samosa: இங்கிலாந்து இளைஞர்களை கவர்ந்த இந்தியாவின் ஸ்நாக் - ஆய்வுகள் சொல்வதென்ன?

நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வல்லுநர்கள் கூறியுள்ளதாவது, 1980, 90 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிறந்த இளைஞர்கள் தான் அதிகமாக டீயுடன் சமோசாவை சாப்பிட தேர்ந்தெடுக்கின்றனர்.
Samosa: இங்கிலாந்து இளைஞர்களை கவர்ந்த இந்தியாவின் ஸ்நாக்! ஆய்வுகள் சொல்வதென்ன?
Samosa: இங்கிலாந்து இளைஞர்களை கவர்ந்த இந்தியாவின் ஸ்நாக்! ஆய்வுகள் சொல்வதென்ன?canva
Published on

இங்கிலாந்தில், தேநீருடன் சேர்த்து சாப்பிட இளைஞர்கள் அதிகமாக சமோசாவை தேர்ந்தெடுப்பதாக புதிய ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாட்டவர்களும் அதிகம் விரும்பும் ஒரு சிற்றுண்டி, டீ டைம் ஸ்நாக் சமோசா. இது பல சுவைகளில் கிடைக்கிறது. உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம், கூடவே இனிப்பு சமோசாக்களும் பரவலாக உண்ணப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் மிண்ட்டெல் என்ற சந்தை ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில் இங்கிலாந்து இளைஞர்கள், தேநீருடன் சாப்பிட சமோசாவை அதிகம் விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில், தேநீர் அல்லது காபியுடன் பெரும்பாலும், இனிப்பு வகை ஸ்நாக்குகளே பரிமாறப்படும். பிஸ்கட்டுகள், கேக்குகள், டோனட் போன்றவை இதில் அடங்கும்.

இந்தியாவில் இது அப்படியே எதிர்மறையாக இருக்கும். சூடான டீ காபியுடன், பஜ்ஜி, போண்டா, பகோடா, சமோசா என காரமான உணவு வகைகளையே நாம் விரும்பி உண்வோம். இந்த பழக்கம் பல காலங்களுக்கு முன்னரே வெளிநாட்டவர்களுக்கும் தொத்திக் கொண்டுவிட்டது தான்.

நடத்தப்பட்ட இந்த ஆய்வில், வல்லுநர்கள் கூறியுள்ளதாவது, 1980, 90 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் பிறந்த இளைஞர்கள் தான் அதிகமாக டீயுடன் சமோசாவை சாப்பிட தேர்ந்தெடுக்கின்றனர். இணையத்தில் இவர்கள் பார்க்கும் சமையல் சம்பந்தமான வீடியோக்களே இதற்கு காரணம் எனவும் அந்த அய்வு குறிப்பிடுகிறது.

Samosa: இங்கிலாந்து இளைஞர்களை கவர்ந்த இந்தியாவின் ஸ்நாக்! ஆய்வுகள் சொல்வதென்ன?
பிரியாணி டூ சமோசா : இந்தியா, அரபு நாடுகள் இடையிலான உணவுப் பரிமாற்றம் - உணவு சரித்திரம்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில், 16 முதல் 24 வயது வரை இருப்பவர்களில் பாதி பேர் தான் டீயுடன் இனிப்பான பிஸ்கட்களை சாப்பிட தேர்ந்தெடுக்கின்றனர்.

யுனைட்டட் கிங்டம் டீ அண்ட் இன்ஃப்யூஷன்ஸ் அசோசியேஷன்ஸ் மற்றொரு ஆய்வை நடத்தியது. 1000 பேர் கொண்டு எடுக்கப்பட்ட இந்த சர்வேவில், 10ல் ஒருவர் ஊட்டச்சத்து நிறைந்த granula barsஐ தேர்ந்தெடுத்துள்ளனர்.

(கிரானுலா பார் என்பது கடலை, பாதாம் போன்ற ஊட்டச்சத்துமிக்க நட்ஸ்களால் தயாரிக்கப்படும் பர்பி வகைகள்)

இந்த கிரானுலா பார்களை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் சமோசாக்கள் இருக்கிறது. 8 சதவிகிதத்திற்கும் மேல் இளைஞர்கள் சமோசாவை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த கிரானுலா பார்கள் மற்றும் சமோசா சுவையை தாண்டி, வயிறு நிறையவும் செய்கிறது என்கின்றனர்

Samosa: இங்கிலாந்து இளைஞர்களை கவர்ந்த இந்தியாவின் ஸ்நாக்! ஆய்வுகள் சொல்வதென்ன?
சமோசா முதல் நெய் வரை: இந்தியாவின் பிரபலமான 5 உணவுகளுக்கு மற்ற நாடுகளில் தடை - ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com