Morning News Today: உக்ரைனுக்கு ரூ.22 கோடி அமெரிக்க டாலர் ஐரோப்பிய ஆணையம் நிதியுதவி

நெருக்கடிகளைக் குறைப்பதற்காக ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியாக வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
European Commission
European CommissionTwitter
Published on

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 107 நாள்களாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஐ.நா. சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள், பல நாடுகள் முயன்றும் போரை நிறுத்த முடியவில்லை.

இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. போர் தாக்குதல் மட்டுமின்றி ஏற்றுமதியைத் தடுத்து நிறுத்தி, அந்நாட்டின் பொருளாதார சூழலிலும் ரஷ்யா பாதிப்பு ஏற்படுத்திவருகிறது.

இதனால், லட்சக்கணக்கானோர் பட்டினிக்குச் செல்ல நேரிடும் என்ற அதிபர் ஜெலன்ஸ்கி, கோதுமை, சோளம், எண்ணெய் மற்றும் பிற பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை எனவும் தெரிவித்தார். இந்த நெருக்கடிகளைக் குறைப்பதற்காக ஐரோப்பிய ஆணையம் கூடுதலாக 22 கோடி அமெரிக்க டாலர் நிதியுதவியாக வழங்குவதாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

European Commission
கத்தார் விவகாரம் : சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்படும் கங்கனா ரனாவத் - என்ன நடந்தது?

அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து இயங்கும்

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிகளில் இயங்கும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அதை நிறுத்துவதாக முடிவெடுத்தது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அரசு பள்ளிக்கூடங்களில் இந்த வகுப்புகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். பள்ளி கல்வித்துறைக்கு இதுதொடர்பான பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்தன.இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

Election Commission
Election CommissionTwitter

ஜூலை 18-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் - இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இந்தியாவின் குடியரசுத் தலைவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களால் வாக்களித்து தேர்வு செய்யப்படுகிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 2017-ம் ஆண்டு, இந்தியாவின் 14-வது ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்டார். அவரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பதவிக்காலம் முடிவடைவதற்குள் புதிய ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்நிலையில் புதிய ஜனாதிபதி தேர்தலுக்கான தேதியை டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் அறிவித்தார். இதன்படி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் வருகிற 15-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வருகிற 29-ம் தேதி கடைசி நாள்.

MK Stalin
MK Stalin Twitter

ரூ.1,627 கோடி மதிப்பில் பாரத் நெட் திட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக தலைமைச் செயலகத்தில் நேற்று தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் ரூ.1,627.83 கோடி மதிப்பீட்டிலான பாரத்நெட் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரியின் தக்கலை முத்தலகுறிச்சி கிராம பஞ்சாயத்தில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் பணியைத் தொடங்கி வைத்தார். பாரத்நெட் திட்டம், தமிழகத்தில் உள்ள 12, 525 கிராம பஞ்சாயத்துகளையும் கண்ணாடி இழை கம்பி வடம் மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்குகிற திட்டம்.

இத்திட்டம் 'டான்பிநெட்' நிறுவனம் என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 1 'ஜிபிபிஎஸ்' அளவிலான அலைக்கற்றை மேற்சொன்ன அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் கிடைக்கும்.

European Commission
கத்தாரை வீழ்த்திய இந்தியா : எதில் தெரியுமா? - இந்தக் கட்டுரையை படியுங்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com