Russia Ukraine போர் : விண்வெளித் துறையிலும் தொடருமா?

விண்வெளியில் நடக்கும் போரும் பூமியில் நடக்கும் போர் போல பெரும் பாதிப்புகளைக் கொண்டு வரும். அதே நேரம் உக்ரைன் போர் இருந்தாலும் விண்வெளியில் இரு தரப்பும் ஒத்துழைப்போடு பணியாற்றும் அவசியம் இருக்கிறது. இதைத் தவிர வேறு வழியில்லை.
ரஷ்ய செயற்கைகோள்
ரஷ்ய செயற்கைகோள்Twitter
Published on

உலகளாவிய விண்வெளித் துறையில் ரஷ்யாவும் உக்ரைனும் முக்கியமான பங்களிப்புகளைச் செய்கின்றன. சமீபத்திய போராலும், அதைத் தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளாலும் இந்த பங்களிப்புகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பல ராக்கெட்டுகளின் புறப்பாடுகள் ரத்து செய்யப்பட்டன. செவ்வாய் கிரத்திற்கு அனுப்ப இருந்த ரோவர்கள் தரையிறக்கப்பட்டன. அதற்கான எந்திரங்கள் வழங்கப்படவில்லை.

ரஷ்யா தனது சோயுஸ் ராக்கெட்டுகளில் தொடர்ந்து மனிதர்களையும், செயற்கைக் கோள்களையும் அனுப்பி வருகிறது. மனிதர்களின் விண்வெளிப் பயணத்தில் ரஷ்யாவின் நிபுணத்துவம் சிறப்பு வாய்ந்தது. இதோடு ஒப்பிட்டால் உக்ரைனின் பங்கு குறைவு என்றாலும் அங்கும் விண்வெளித் துறை முக்கியமான செயல்பாட்டில் உள்ளது. உக்ரைனில் வடிவமைக்கப்பட்ட செனிட் ராக்கெட்டினை தனக்கு பிடித்தமானது என்று எலென் மாஸ்க் கூறியிருக்கிறார்.

Putin
PutinTwitter

ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பால் இலட்சக்கணக்கான மக்கள் மட்டுமல்ல விண்வெளித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்வெளியில் நீண்ட காலம் இருந்து சாதனை படைத்துள்ள அமெரிக்க வீரர் மார்க் வந்தே ஹெய் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவிக்கிறார். தன் மீதான பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்கும் முகமாக அவரை தரையிறக்கத் தனது ராக்கெட்டை அனுப்பப் போவதில்லை என்று ரஷ்யாவின் அறிக்கை முன்னர் தெரிவித்தது. இறுதியில் ரஷ்யா தான் ஏற்கனவே ஒப்புக் கொண்டது போல அவரை தரையிறக்கச் சம்மதித்திருக்கிறது. வந்தே ஹெய் மார்ச் 30 அன்று பூமிக்குத் திரும்புவார் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.

ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் விண்வெளித் துறையில் உலக அளவில் பல நிறுவனங்கள், அரசுகள், விஞ்ஞானிகள் மற்றும் திட்டங்களைப் பாதித்துள்ளன. பிரிட்டனின் விண்வெளி ஆலோசனை நிறுவனமான ஒன்வெப் தனது சாட்டிலைட்டுகளை ரஷ்ய ராக்கெட்டில் அனுப்புவதை ரத்து செய்தது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் செவ்வாய் கிரக ரோவர் திட்டம் ரஷ்யாவுடனான கூட்டை ரத்து செய்தது. அதே போன்று ரஷ்யாவும், போயிங் மற்றும் லாக்ஹீட்டின் கூட்டு நிறுவனத்திற்கு ராக்கெட் என்ஜின்களை அனுப்புவதை நிறுத்தி வைத்தது.

ரஷ்யா மிகவும் மலிவான ராக்கெட் ஏவுதள சேவைகளை வழங்கி வருகிறது. இப்போது அதை மேற்கத்திய நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது.

Spire நிறுவனம்
Spire நிறுவனம்Twitter

விண்வெளித் துறையில் உள்ள உலக ஒத்துழைப்பு நீக்கப்பட்டது

அமெரிக்காவின் ஸ்பைர் குளோபல் நிறுவனம் பூமியைக் கண்காணிக்கும் வண்ணம் 100க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்களை வைத்திருக்கிறது. இதற்கு முன் இந்நிறுவனம் ரஷ்யாவின் சோயுஸ் ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக் கோள்களை ஏவி வந்தது. தற்போது அந்த வாய்ப்பு இல்லை. ஸ்பைர் நிறுவனத்தைப் போல பிற மேற்கத்திய நிறுவனங்களும் ரஷ்யாவின் சேவைகளை நிறுத்திவிட்டன. தற்போது இதற்கு உடனடியாக மாற்று இல்லை.

தற்போது உக்ரைன் போர் காரணமாக செயற்கைகோள் தரவுகளுக்கு பெரும் கிராக்கி இருக்கிறது. ஸ்பைர் நிறுவனத்தை நோக்கி அத்தகைய தேவைகள் நிறுவனங்கள், அரசுகள், தன்னார்வ நிறுவனங்களிடமிருந்து வந்த வண்ணம் இருக்கின்றன.

ஸ்பைர் நிறுவனம் ரேடியோ அதிர்வெண் தரவுகள் மூலம் கப்பல் மற்றும் விமான இயக்கங்கள் பற்றிய தரவுகளை வழங்குகிறது. இது போக வானிலை, துருப்புகளின் நடமாட்டம், பொருளாதார நடவடிக்கைகள், அகதிகளின் இடம்பெயர்வு போன்றவற்றின் தரவுகளையும் அளிக்கின்றன. கடந்த சில வாரங்களாக இத்தேவைக் கடுமையாக அதிகரித்துள்ளது.

NASA
NASATwitter

கிழக்கு மற்றும் மேற்கத்திய விண்வெளித் தொழில்களின் தற்போதைய இணைப்பு நீண்ட செயல்முறையின் ஒரு பகுதியாகும். நாசா 2014 இல் அதன் ரஷ்ய உறவுகளைத் துண்டித்தது. இதற்கு ஜிகாதி பயங்கரவாதிகளான ஐஎஸ்எஸ் பிரச்சினை தவிர, ரஷ்யா ஏற்கனவே கிரிமியாவை ஆக்கிரமித்து இணைத்தது தொடர்பான பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு ராக்கெட் என்ஜின்களின் ஏற்றுமதியைச் சிறிது காலத்திற்கு நாசா தடை செய்தது. சமீபத்திய உக்ரைன் படையெடுப்பிற்கு முந்தைய ஆண்டுகளில் பல நிறுவனங்கள் தங்கள் ரஷ்ய உறவுகளை முடித்துக்கொண்டன.

தற்போதைய போர் ரஷ்யாவைச் சார்ந்திருப்பதை விடுத்து வேறு வழிகளைத் தேடுமாறு பல நாடுகளைப் பணித்திருக்கின்றன. தற்போது நாடுகள் தங்களது சொந்த ராக்கெட் ஏவுதல்களை உருவாக்கவோ அதிகரிக்கவோ செய்யும் வண்ணம் ஏற்பாடுகளைச் செய்கின்றன. இந்தியா கூட தற்போது தனது ஏவுதல் ராக்கெட்டுகளின் திறமையை அதிகரித்திருக்கிறது. ஜப்பானின் H-IIA ராக்கெட்டுகள் சந்தையில் சிறப்பாகச் செயல்படுகின்றன. புதிய நிறுவனமான ராக்கெட் லாப் போன்றவையும் வேகமாக வளர்கின்றன.

செயற்கைகோள்
செயற்கைகோள்Twitter

எனவே உக்ரைன் போர் காரணமாக விண்வெளித் துறையில் மந்தநிலை வருவதற்குப் பதிலாக வளர்ச்சிதான் இருக்குமென்று நிபுணர்கள் கணிக்கிறார்கள். விண்வெளித் துறையில் தனியார் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவை நம்பியிருப்பதை விடுத்து மற்ற நாடுகள் தமது முதலீடுகளை அதிகரிக்கும். போர்க்காலங்களில் விண்வெளித்துறையில் பங்களிப்பு காரணமாக அரசாங்கங்கள் தமது விண்வெளி பட்ஜெட்டை இரட்டிப்பாக்க முனைகின்றன.

போர் அல்லது ராஜதந்திரம்

உக்ரைன் போர் பல பொருளாதார தொந்தரவுகளுக்குக் காரணமாக இருந்தாலும் இதுவரை அது விண்வெளித்துறைக்கு நீட்டிக்கப்படவில்லை. ஆனால் அதற்கும் வாய்ப்பிருக்கிறது. ரஷ்யாவும், அமெரிக்காவும் விண்வெளியில் உள்ள செயற்கைக் கோள்களை அழிக்கும் ஆயுதங்களை சில மாதங்களுக்கு முன்புதான் சோதித்துப் பார்த்திருக்கின்றன. அப்படி ஒரு செயற்கைக்கோளை அழித்தால் கூட அது பெரும் குப்பை மேட்டை விண்வெளியில் உருவாக்குவதோடு மற்ற செயற்கைக்கோள்களையும் பாதிக்கும். நேட்டோ அல்லது ரஷ்ய செயற்கைக்கோள்கள் அப்படித் தாக்கப்பட்டால் அது ஒரு பெரும் மோதலுக்கு வழி வகுக்கும்.

ரஷ்ய செயற்கைகோள்
வெளிநாடுகளுக்கு குடிபெயரும் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் - ஏன்?

விண்வெளியில் நடக்கும் போரும் பூமியில் நடக்கும் போர் போல பெரும் பாதிப்புகளைக் கொண்டு வரும். அதே நேரம் உக்ரைன் போர் இருந்தாலும் விண்வெளியில் இரு தரப்பும் ஒத்துழைப்போடு பணியாற்றும் அவசியம் இருக்கிறது. இதைத் தவிர வேறு வழியில்லை. இதை உறுதிப்படுத்த ராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தொடரப்படவேண்டும். பூமி மாசடைவதை விட விண்வெளி மாசடைவது அதிக ஆபத்தானது. மேலும் இன்றைய பூமியின் பாதுகாப்பான வாழ்விற்கு விண்வெளித் துறையின் பங்களிப்பு அவசியம். உக்ரைன் போர் அந்த அவசியத்தைக் கெடுத்து விடக்கூடாது என்பதே விஞ்ஞானிகளின் விருப்பம்.

ரஷ்ய செயற்கைகோள்
உக்ரைன் போர் : 48 நாடுகளுக்கு செக் வைத்த ரஷ்யா - என்ன நடந்தது?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com