உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு 120 நாட்களை நெருங்குகிறது. இதுவரை பல்லாயிரம் மக்களை, இராணுவ வீரர்களை இழந்திருக்கிறது உக்ரைன். உக்ரைனின் சில முக்கிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியிருக்கிறது. உக்ரைன் மக்கள் அகதிகளாக போலந்து உள்ளிட்ட அண்டை நாடுகளில் அடைக்கலம் ஆகியிருக்கின்றனர். உக்ரைனில் இருக்கும் பெண்கள் ரஷ்ய ராணுவ வீரர்களின் சித்திரவதைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் உக்ரைன் மக்களின் மொத்த வாழ்கையையும் புறட்டிப்போட்டுள்ளது. அதுவரை சாதாரண வாழ்கையை வாழ்ந்து கொண்டிருந்த மக்களில் பலர் இன்று துப்பாக்கிகளுடன் நாட்டுக்காக போராடும் வீரர்களாக மாறியுள்ளானர்.
போரில் ஈடுபட்டுள்ள உக்ரேனியர்கள் மனி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ் மூலம் நமக்கு அறிமுகமான Bella Ciao பாடலைப் பாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கேட்பதற்கு ஒரு காலை வேளையின் உற்சாகத்தைக் கொண்டிருக்கும் இந்த பாடல் உண்மையில் ஒரு துயர கீதமாகும். இத்தாலியில் நாட்டுப்புற பாடலாக இருந்த இந்த பாடல் முசோலினி எனும் சர்வாதிகாரியின் காலத்தில் கம்யூனிச போராளிகளின் கீதமாக இருந்தது.
நாட்டுப்புற பாடலாக,
‘காலையில் எழுந்தேன். நெல் வயல்களுக்கு நான் செல்ல வேண்டும். பூச்சிகளுக்கும் கொசுக்களுக்கும் இடையில் கடின வேலை காத்திருக்கிறது. முதலாளி கையில் பிரம்புடன் நின்று கொண்டிருக்கிறான். எங்களின் முதுகு ஒடிய நாங்கள் வேலை பார்க்கிறோம். ஒவ்வொரு காலையும் புலம்புவதைப் போலவே புலம்புகிறேன். என்ன வேதனை கடவுளே! இங்கு கழிக்கும் ஒவ்வொரு மணி நேரத்திலும் எங்களின் இளமையைத் தொலைக்கிறோம். ஆனாலும் ஒருநாள் வரும். நாங்கள் எல்லாரும் விடுதலையுடன் வேலை பார்க்கும் ஒரு நாள் வரும். அதுவரை விடைபெறுகிறேன் அழகே!’
என தொழிலாளர்களின் துயரைப் பாடியது இந்தப்பாடல்.
கம்யூனிச போராளிகள்,
‘ஒரு காலை நான் விழித்தேன். படையெடுத்து வந்த எதிரியை கண்டேன். மரணம் நெருங்கி வருவது தெரிந்துவிட்டது. ஓ போராளிகளே... என்னையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். போராளியாக நான் இறந்து போனால், என்னை புதையுங்கள். ஒரு மலையின் மேல் என்னை புதையுங்கள். அழகிய மலரின் நிழலில் என்னை புதையுங்கள். கடந்து போகிறவர்கள் ‘எத்தனை அழகான மலர்?’ எனச் சொல்வார்கள். விடைபெறுகிறேன் அழகே! இது போராளியின் மலர். விடுதலைக்காக போராடி உயிரிழந்தவனின் மலர் ’
என இந்த துயர கீதத்தைப் பாடினர். இப்போது இதனை உக்ரைன் வீரர்களும் பாடுகின்றனர். கம்யூனிச போராளிகளின் கீதத்தை கம்யூனிச நாடாக இருந்த ரஷ்யாவை நோக்கியே பாடவைத்திருக்கிறது காலம்.
பெல்லா சாவ்... பெல்லா சாவ்..
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn: https://www.newssensetn.com/
Nalam360 : https://www.newssensetn.com/health
Newsnow: https://www.newssensetn.com/wow-news
Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu