Ukraine : 9/11 இரட்டை கோபுர தாக்குதலுடன் ஒப்பிட்ட உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி

”1941ஆம் ஆண்டு நடந்த பேர்ல் துறைமுக தாக்குதலையும், 2001ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலையும் நினைத்து பாருங்கள், உக்ரைனின் மக்கள் இம்மாதிரியான சூழலலை தினமும் எதிர்கொண்டு வருகிறார்கள்.”
Twin Tower

Twin Tower

NewsSense

இருபது நாட்களாக உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளனர் ரஷ்ய படையினர். உக்ரைன் தரப்பிலும் அதற்கு ஈடுகொடுத்து சண்டையிட்டு வருகின்றனர்.

இந்த போரில் தங்களுக்கு உதவ வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ மற்றும் அமெரிக்காவிடம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார் உக்ரைன் அதிபர் விளாதிமிர் செலன்ஸ்கி.

இந்நிலையில் இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் வீடியோ மூலம் பேசிய செலன்ஸ்கி அமெரிக்காவின் கறுப்பு பக்கங்கள் குறித்து அதன் உறுப்பினர்களுக்கு நினைவூட்டினார்.

<div class="paragraphs"><p>Twin Tower</p></div>
Volodymyr Zelenskyy Profile : காமெடி நடிகர் டூ உக்ரைன் அதிபர் - வியக்க வைக்கும் பயணம்

NewsSense

ரஷ்யா – யுக்ரேன் போரில் அமெரிக்காவின் வரலாறு எங்கிருந்து வந்தது என்று நீங்கள் யோசிக்கலாம்.

வீடியோ மூலம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பு உரையாற்றிய செலன்ஸ்கி, “9/11 சம்பவத்தை போலதான் தற்போதைய உக்ரைனின் நிலையும்” என்று தெரிவித்தார்.

”1941ஆன் ஆண்டு நடந்த பேர்ல் துறைமுக தாக்குதலையும், 2001ஆம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதலையும் நினைத்து பாருங்கள், உக்ரைனின் மக்கள் இம்மாதிரியான சூழலலை தினமும் எதிர்கொண்டு வருகிறார்கள்,” என்றார். அமெரிக்காவிடம் மேற்கொண்டு ராணுவ உதவிகளை கோரியபோதுதான் இந்த ஓப்பீட்டை கூறியுள்ளார் செலன்ஸ்கி.

“உங்களின் ஆகச்சிறந்த வரலாற்றில் உக்ரைனின் வரலாற்றைப் புரிந்துகொள்ளும் பக்கங்கள் உள்ளன” என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே அவர் அமெரிக்காவிடமும், நேட்டோ கூட்டணி நாடுகளிடமும் உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பரக்க தடை விதிக்கப்பட்டுள்ள மண்டலமாக அறிவிக்க கோரியிருந்தார். இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தின் முன் மீண்டும் அந்த கோரிக்கையை வைத்த செலன்ஸ்கி, “நான் வானை பாதுகாக்க விரும்புகிறேன்” என்றார்.

அமெரிக்க சிவில் உரிமை போராளி மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற “ஐ ஹேவ் ஏ ட்ரீம்” உரை குறித்து குறிப்பிட்ட செலன்ஸ்கி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூடியிருந்தவர்களை நோக்கி, உங்களில் ஒவ்வொருவருக்கும் இந்த வாக்கியங்கள் பரிட்சையமானதுதான். இன்று எனக்கு ஒரு தேவை உள்ளது என்று சொல்கிறேன்; இந்த வானை நான் காப்பாற்ற வேண்டும்,” என்றார்.

ஆங்கிலத்தில் ஜோ பைடன் குறித்து பேசும்போது, “இந்த உலகிற்கு நீங்கள் தலைவராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உலகின் தலைவர் என்றால் அமைதிக்கான தலைவர் என்று பொருள்” என்று தெரிவித்தார்.

செலன்ஸ்கியின் இந்த உரைக்கு நாடாளுமன்றத்தில் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்றி கைத்தட்டினர்.

<div class="paragraphs"><p>Twin Tower</p></div>
உக்ரைன் போர்: ரசிய ஆக்கிரமிப்பின் 17 வது நாளில் என்ன நடந்தது ?

NewsSense

இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு மேலும் 800மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ராணுவ உதவிகளை அனுப்புவதற்கான ஒப்புதலை அளிக்கவுள்ளார்.

தனது காணொளி காட்சியில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் உக்ரைனின் நகரங்கள் சேதமடைந்திருப்பதையும், அதனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்த காட்சியையும் காட்டினார்.

இதேபோல சில தினங்களுக்கு முன்னதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய செலன்ஸ்கி, இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனை வெற்றியின் பாதையில் அழைத்து சென்றவர் என்று பிரிட்டிஷ் மக்களால் கருதப்படும் வின்ஸ்டன் சர்ச்சிலின் புகழ்பெற்ற உரையின் வரிகளை குறிப்பிட்டார்.

செலன்ஸ்கியின் பேச்சு மனதை நெகிழச் செய்ததாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்தார்.

இதுமட்டுமல்ல அன்றாடம் வீடியோவில் தோன்றி தனது நாட்டு மக்கள் குறித்தும், ரஷ்ய படைகள் குறித்தும், உக்ரைனின் துணிச்சல் குறித்தும் பேசி வருகிறார் செலன்ஸ்கி.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com