ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல்களுக்கு 1 கோடி டாலர்கள் - அமெரிக்கா அறிவிப்பு

ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வெகுமதியாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
America
AmericaTwitter
Published on

உக்ரைன் ரஷ்ய இடையேயான போர் இன்னும் ஓயாத நிலையில்,அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்ய ராணுவ உளவுத்துறை செயல்படுவதாக அமெரிக்கா குற்றச்சாட்டியுள்ளது.


இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்கா, ரஷ்ய இராணுவ உளவுத்துறை அதிகாரிகளை அடையாளம் காட்டுவது அல்லது அவர்கள் குறித்த தகவல்களைத் துப்பு கொடுத்தால் 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், மற்ற நாட்டு அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவின் முக்கியமான உள்கட்டமைப்பிற்கு எதிராகச் சதியில் ஈடுபடும் நபரின் அடையாளம் அல்லது அவர்களின் இருப்பிடம் குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 1 கோடி அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

America
Ukraine Russia War: ரஷ்ய டாங்கிகளை துவம்சம் செய்யும் உக்ரைன் - சாத்தியமானது எப்படி?

மேலும், அமெரிக்காவுக்கு எதிராக குற்றவியல் சதியில் பங்கேற்றதாகக் கூறப்படும் ரஷ்யாவை சேர்ந்த யூரி செர்ஜியேவிச் ஆண்ட்ரியென்கோ, செர்ஜி விளாடிமிரோவிச் டெடிஸ்டோவ், பாவெல் வலேரிவிச் ஃப்ரோலோவ், அனடோலி செர்ஜியேவிச் கோவலேவ், ஆர்டெம் வலேரிவிச் ஓச்சிச்சென்கோ மற்றும் பீட்ர் நிகோலாயெவிச் பிளிஸ்கின் என்ற 6 பேர் குறித்த தகவல்களைக் குறிப்பாகத் தேடுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

America
அமெரிக்கா ஏரியா 51 மர்மங்கள் : இங்கு ஏலியன்கள் ஆய்வு நடக்கிறதா? US எதனை மறைக்கிறது?

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com