விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு

விக்டோரியா மகாராணியாக இருந்தாலும் அவருக்கு நம்பிக்கையானவராக அரண்மனையில் யாருமில்லை. அவர் மனம் விட்டுப் பேச ஒரு ஆணை தேடினார். இந்திய முஸ்லீமான கரீம் அந்த இடத்தை நிரப்பினார். ஆனால் அரச குடும்பத்தில் இருந்த மற்ற எல்லாரும் ஒருமனதாக கரீமை வெறுத்தனர். என்ன நடந்தது அவருக்கு?
விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு?
விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு?Twitter
Published on

19ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளை இங்கிலாந்து காலணி ஆதிக்கம் செய்துகொண்டிருந்த போது மகாராணியாக இருந்தவர் ராணி விக்டோரியா.

இங்கிலாந்தை ஆண்ட அரசகுடும்பத்தினரில் மிகவும் பிரபலமானவரும் அதிகம் பேசப்பட்டதும் இவரே ஆவார்.

இங்கிலாந்து ராணிக்கும் அவருக்கு துணையாக இருந்த இந்தியரான அப்துல் கரீம் என்பவருக்கும் இருந்த உறவு கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கும் மேலாக மறைக்கப்பட்டு இருந்தது.

மகாராணியாக இருப்பவர் ஒரு நட்பை பேணுவது சாதாரண விஷயமல்ல. அதுவும் இங்கிலாந்து போன்ற பாகுபாடு மிகுந்த அரச குடும்பத்தின் மகாராணி இந்திய முஸ்லீமுடன் நட்புகொள்வது அரண்மனையையே கலங்கப்படுத்துவதாக பார்க்கப்பட்டது.

முன்னதாகவே மகாராணிக்கு அவரது பணியாளான ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜான் பிரௌன் என்பவருடன் தொடர்பு இருந்தது ஊரறிந்த விஷயமாக இருந்தது. இதனால்தான் அப்துல் கரீமை இந்தியன் ஜான் பிரௌன் எனவும் குறிப்பிடுகின்றனர் வரலாற்றாசிரியர்கள்.

1861ம் ஆண்டும் அரசர் ஆல்பர்ட் மறைந்தார். அதற்கு பின்னர் தான் மகாராணிக்கும் ஜான் பிரௌனுக்கும் இடையிலான காதல் சலசலப்புகள் ஏற்பட்டது.

1883ம் ஆண்டில் ஜான் பிரௌனும் எரிசிபெலாஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

ஜான்பிரௌனின் மறைவு விக்டோரியாவை தனிமைபடுத்தியிருந்தது. அவர் மகாராணியாக இருந்தாலும் அவருக்கு நம்பிக்கையானவராக யாருமில்லை. அவர் மனம் விட்டுப் பேசக்கூடிய ஒருவரும் அரண்மனையில் இல்லை.

நான்கு ஆண்டுகள் கழித்து விக்டோரியா 1887ல் விக்டோரியா அரியணையேறி 50 ஆண்டுகள் நிறைவானது.

அதனைக் கொண்டாடும் வகையில் அரண்மனையில் ஏற்படுத்தப்பட்டிருந்த விழாவில் சேவை செய்வதற்காக அழைத்துவரப்பட்டவர் தான் ஹாசிப் அப்துல் கரீம்.

அவர் விக்டோரியா மகாராணியின் மேசைக்கு அருகில் நின்று இந்திய இளவரசர்கள், மன்னர்களை அறிமுகப்படுத்தும் வேலையை செய்துகொண்டிருந்தார்.

ஒரு சாதாராண சிறை எழுத்தாளாராக இருந்த கரீம் தனது சிறை கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் ஆங்கிலம் கற்றுக்கொண்டு, பாதி உலகைக் கடந்து பயணம் செய்து இங்கிலாந்துக்கு வந்தடைந்தார்.

அரச குடும்பத்துக்கு சேவையாற்றுவதைப் பற்றி எதுவும் அறியாதவர் கரீம். ஆனால் அவரது மாயக் கண்கள் மகாராணியின் கவனத்தைப் பெற்றன.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சியில் பிறந்தவரான அந்த 23 இளைஞன் வசீகரிக்கும் விதமாக இந்தியாவின் கலாச்சார பெருமைகளை கூறினான்.

மகாராணிக்கு கரீமின் இயல்பு மிகவும் பிடித்துப்போனது. தன்மையான பேச்சும் சிறிதும் எரிச்சலூட்டாத பணிவும் அவரை தூரம் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று சிந்திக்க வைத்திருக்கிறது.

ஒருமுறை தனது நண்பர் ஒருவரிடம் மகாராணி, "எதாவது தவறாக நடந்தால் கரீம், "கடவுளின் கட்டளையாக இருக்கலாம்" என்றுதான் கூறுவான்" எனப் பெருமையாக பேசியிருக்கிறார்.

மகாராணிக்கு எப்படி கரீமைப் பிடித்ததோ அதே அளவு அரச நீதிமன்றம் கரீமை வெறுத்தது. யார் இந்த கரீம் என்ற கேள்வி உங்கள் மனதைத் துளைக்கத் தொடங்கியிருக்கும்.

கரீம் முன்னதாக கூறியதைப் போல ஜான்சியில் உசாரிதீன் என்பவரின் 6 குழந்தைகளில் 2வது குழந்தையாவார்.

உசாருதீன் மருத்துவத்தில் கைத் தேர்ந்தவராக இருந்தார். தனது மகன்களுக்கு கல்வியறிவு வழங்கினார்.

சிறுவயதிலேயே பெருசியா மற்றும் உருது மொழியைக் கற்றறிந்தார் கரீம். அவருக்கு ஆக்ராவில் சிறை எழுத்தராக வேலை கிடைத்தது.

ஒரு ஆண்டுக்கு முன்னர் அதாவது 1886ல் லண்டனில் ஒரு காலனிய கண்காட்சி நடந்தது. அதில் இந்தியர்கள் நெய்த போர்வையைப் பார்த்து வியந்து விசாரித்தார் மகாராணி.

அந்த போர்வைகள் ஆக்ராவில் கரீமின் மேற்பாற்வையில் கைதிகளால் தயாரிக்கப்பட்டது. இந்த போர்வைகளை உருவாக்கிய இருவர் தனது பொன்விழாவில் உதவிக்கு வேண்டும் என மகாராணி கேட்டுக்கொண்டார்.

அந்த உத்தரவின் பெயரிலேயே கரீம் மாகாராணியிடம் வந்து சேர்ந்தார். அவரின் மனதையும் வென்றார். விரைவிலேயே மகாராணி கரீமுக்கு ஆடம்பரமான தங்குமிடத்தை வழங்கினார்.

கரீமின் மனசாட்சிக்கு அஞ்சும் சுபாவம் மகாராணியை ஈர்த்தது. அது, இந்தியர்கள் மீதான அவரின் மதிப்பைக் கூட்டியது எனலாம். இந்தியர்கள் குறித்து அதிகம் தெரிந்துகொள்ள விரும்பியவர் இந்துஸ்தானி கற்றவும் தொடங்கினார்.

கரீமை பிடித்துப்போனதால் கரீமிடமே இந்துஸ்தானி கற்கவும் தொடங்கியுள்ளார். கரீமிடம் அவர் பார்த்திடாத உலகின் மற்றொரு பக்கம் பற்றிய கதைகளை கேட்பது மகாராணிக்கு பிடித்தமானதாக இருந்திருக்கிறது.

கோடையில் மகாராணி ஓய்வெடுக்கும் இல்ஸ் ஆஃப் வைட் என்ற தீவுக்கும் கரீமை அழைத்துச் சென்றிருந்தார்.

அப்போது ஆக்ராவிலிருந்து எடுத்துவந்த மசாலாக்களைக் கொண்டு மகாராணிக்கு இந்திய பாணியில் பருப்புடன் சிக்கன் கறி செய்துகொடுத்துள்ளார் கரீம்.

உணவின் சுவையில் மெய்மறந்த மகாராணி அந்த உணவை தனது தினசரி மெனுவிலும் சேர்க்கச் சொன்னாராம்.

மகாராணி இந்துஸ்தானி கற்றுக்கொண்டதை விட இரட்டிப்பு வேகத்தில் ஆங்கிலத்தை முழுமையாக கற்றுக்கொண்டார் கரீம்.

அதுவரை சில வார்த்தைகளை கரீமிடம் கூற மொழிப்பெயற்பாளரை நாடிய மகாராணி இனி கரீமுடன் நேரடியாக மட்டுமே பேசினார்.

சில நாட்களில் கரீமுக்கு முன்ஷி பட்டமும் வழங்கினார். அதுவரை சேவகன் என்றிருந்த அவரது நிலையை உயர்த்தி அதிகாரப்பூர்வ இந்திய எழுத்தராக நியமித்தார்.

மகாராணிக்கும் கரீமுக்கும் இடையிலான உறவு வலுவடைந்தது அரச நீதிமன்றத்தையும் அரச குடும்பத்தின் பிற உறுப்பினர்களையும் கோவப்படுத்தியது.

ஏனெனில் முன்னதாக ஜான் பிரௌன் மற்றும் மகாராணிக்கு இடையிலான உறவே அரசகுடும்பத்தை அச்சப்படுத்தியது.

பலரும் ஏளனமாக மகாராணியை திருமதி.பிரௌன் என்றனர்.

அந்த இடத்துக்கு கரீம் வருவது குறித்து அரண்மனைகள் எல்லாம் கவலையடைந்தன. கரீமுக்கு ஜான் பிரௌனின் பழைய படுக்கையறை ஒதுக்கப்பட்டபோது எல்லாருமே நெற்றியை சுருக்கினர்.

விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு?
ஆங்கிலம் பேசும் நாடுகளில் மொழிச் சம உரிமைக்கு போராடும் பூர்வக்குடிகள் - விரிவான தகவல்கள்

ஜான் பிரௌனுடன் ஸ்காட்லாந்தில் க்ளசட் ஷீல் என்ற கோட்டையில் தங்கியிருப்பது மகாராணிக்கு பிடித்தமான ஒன்றாக இருந்திருக்கிறது.

ஆனால் அவரது மறைவுக்கு பிறகு அந்த கோட்டைக்கு இனி வரப்போவதில்லை என சத்தியம் செய்திருந்தார் ராணி.

ஆனால் சத்தியத்தை மீறி கரீமுடன் பல இரவுகளை அங்கு செலவிட்டார். கரீமின் டைரி, மகாராணியின் குறிப்புகள் மற்றும் வரலாற்றாசிரியர்களின் பதிவுகள் எதிலும் கரீம் மற்றும் மகாராணி இடையே காதலுறவு இருந்ததாக கூறப்படவில்லை.

அவர்கள் நெருக்கமாக இருந்தனர். அது ஒரு ஆழமான நட்பு என்றே கூறப்படுகிறது. சில கடிதங்களில் விக்டோரியா "உன் அன்புக்குரிய அம்மா" என்றும் கையெழுத்திட்டதாக வரலாற்றாசியர்கள் தெரிவிக்கின்றனர்.

கரீமுக்கு சொந்தமாக வாகனம் வழங்கப்பட்டது. அவரது மனைவியும் அவருடன் கோட்டையில் தங்க அனுமதிக்கப்பட்டார். கரீமின் குடும்பத்தினருக்கு மகாராணி விக்டோரியா விருந்தளித்து மகிழ்ந்தார்.

தனது சௌகரியங்களை அனுபவித்துக் களித்தார் கரீம். மறுபக்கம் அரச நீதிமன்றமும் பிற அதிகார வர்கத்தினரும் அவரை மனதுக்குள் எரித்து சாம்பலாக்கிக்கொண்டிருந்தனர்.

இந்தியாவிலும் பிரிட்டிஷின் ஆட்சிதான் என்பதனால் கரீம் தனது தந்தைக்கு ஓய்வூதியம் வழங்குதல், தனது சிறை கண்காணிப்பாளருக்கு பதவி உயர்வு போன்றவற்றை மகாராணியிடம் கேட்டுப்பெற்றுக்கொண்டார்.

ஆனால் அதிகார வர்கத்தின் வெறுப்புக்கு இவையெல்லாவற்றையும் விட கருப்பாக இருக்கும் ஒருவர் வெள்ளை சேவர்கர்களுக்கு இணையாக நடந்தப்படுவது தான்.

வெள்ளையர்களுடன் இணைந்து ஒரு கருப்பினத்தவம் சாப்பிடுவதா? சரிக்கு சமமாக நடந்துகொள்வதா என்றே கொந்தளித்தது இங்கிலாந்து அரசியல் வட்டம்.

விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு?
Mir Jafar: ஆங்கிலேயர்களிடம் இந்தியாவை விற்ற நபர் - துரோகத்தின் வரலாறு

கரீம் மீதான பிற அரச குடும்பத்தினரின் வெறுப்பை ராணி அறிந்தார். அவர் கரீமுக்கு பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கினார்.

தான் இறந்த பிறகு அரசு வளாகத்தில் கரீமுக்கு இப்போதிருக்கும் மரியாதையில் சிறிதும் கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டு, தனது நண்பன் பின்னாட்களில் கஷ்டப்படக் கூடாது என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மகாராணி மேற்கொண்டார்.

கரீமுக்கு விண்ட்சர், பால்மரல் மற்றும் அஸ்பார்ன் உள்ளிட்ட இடங்களில் வீடுகள் இருந்தன. ஆனாலும் ஆக்ராவில் அவருக்காக ஒரு மாளிகையை வாங்கினார் விக்டோரியா.

மேலும் தனது இறுதி அஞ்சலியில் அரச குடும்பத்தினருக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் இடம் கரீமுக்கும் வழங்கப்பட வேண்டும் என விக்டோரியா கேட்டுக்கொண்டாராம்.

ஆனால் மகாராணி இறந்ததற்கு பிறகு அவரது ஒரு வார்த்தைக்கு கூட துளி மரியாதைக் கொடுக்கப்படவில்லை.

உடனடியாக கரீம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ராணியின் மூத்த மகனான ஏழாம் எட்வர்ட் தனது வீரர்களை கரீமின் வீட்டுக்கு அனுப்பி மகாராணி எழுதிய அத்தனை கடிதங்களையும் உடனடியாக கிழித்து எரித்தனர்.

அவர்கள் உடனடியாக கரீம் இந்தியாவுக்கு திரும்புமாறு எச்சரித்தனர். கரீம் என்ற நபர் அரண்மனையில் இருந்ததையே மறைக்க விக்டோரியாவின் மகன்கள் முயன்றனர். ஆனால் அது முடியவில்லை.

விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு?
மஹுவா: பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட இந்திய பாரம்பரிய பானம் - ஒரு வரலாற்றுப் பார்வை!

முடிந்தவரை கரீம் பற்றிய பதிவுகளை மாற்றியமைத்தனர். கரீம் விக்டோரியா மகாராணி இறந்த 8 ஆண்டுகள் கழித்து ஆக்ராவில் 1909ம் ஆண்டு இறந்தார்.

அவருக்கு குழந்தைகள் இல்லை. கரீமின் கதை இப்போது நமக்கு தெரிய வந்திருப்பதற்காக நாம் வரலாற்று ஆர்வலரான ஷ்ரபானி பாசு என்பவருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும்.

எட்வர்டின் நெருப்பில் சிக்காத கரீமின் டைரியை கடந்த 2010ம் ஆண்டு அவரது உறவினரின் வீட்டில் இருந்து மீட்டவர் இவர்தான்.

நிறம், இனம், நாடு என்ற பாகுபாடுகளை கடந்த கரீம், விக்டோரியா நட்பு 100 ஆண்டுகள் கழித்து தான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தது.

விக்டோரியா மகாராணியின் இந்திய காதல்? யார் இந்த அப்துல் கரீம் - ரகசிய வரலாறு?
திருமணத்துக்காக இந்தியாவை படையெடுத்த பிரிட்டிஷ் இளம்பெண்கள்: ஏன் எப்போது..?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com