வியட்நாமில் மாரியம்மன் கோவில் இருக்கா? வியக்க வைக்கும் வரலாறு!

வியட்நாமில் இருக்கும் இந்த மாரியம்மன் கோவிலுக்கு கெமர் இன அர்ச்சகர் தினமும் பூஜை செய்கிறார். மாரியம்மன் கோவிலுக்கும் வியட்நாமிற்கு என்ன சம்பந்தம்? இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
Vietnam : most famous Mariamman Hindu temple in Saigon
Vietnam : most famous Mariamman Hindu temple in SaigonTwitter
Published on

இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருக்களுக்கும் ஒரு அம்மன் கோவில் இருக்கும். அதனை மாரியம்மன், காளியம்மன் என பல்வேறு பெயர்களில் பக்தர்கள் வழிபடுவார்கள்.

ஆனால் இந்தியாவை தாண்டிய இந்த மாரியம்மன் கோவிலின் பெருமை வெளிநாடு வரை சென்றிருக்கிறது.

வியட்நாமில் இருக்கும் இந்த மாரியம்மன் கோவிலுக்கு கெமர் இன அர்ச்சகர் தினமும் பூஜை செய்கிறார். மாரியம்மன் கோவிலுக்கும் வியட்நாமிற்கு என்ன சம்பந்தம்? இங்கே விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

சைகோன் (saigon) என்று அழைக்கப்படும் தெற்கு வியட்நாம் நகரில் தான் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

வியட்நாமில் எப்படி மாரியம்மன் கோவில் என்ற உங்களுடைய மைண்ட் வாய்ஸ் கேட்கிறது.

வியட்நாமுக்கும் தமிழ் வம்சங்களுக்கும் இடையே பல நூற்றாண்டுகளாக கலாச்சார மற்றும் வர்த்தக உறவுகள் இருந்தன. ஆனால் 1860 களில் பிரெஞ்சு படையெடுப்பு வரை அங்கு தமிழர்கள் குடியேறவில்லை.​​

Vietnam : most famous Mariamman Hindu temple in Saigon
வியட்நாம் : மனித காலடி தடமே பதியாத உலகின் மிக பெரிய குகை - உள்ளே இருக்கும் தனி ஒரு உலகம்!

வியட்நாமின் தெற்குப் பகுதியை பிரெஞ்சுக்காரர்கள் காலனித்துவப்படுத்திய சில தசாப்தங்களுக்குப் பிறகு, காரைக்கால் மற்றும் பாண்டிச்சேரியைச் சேர்ந்த தமிழர்கள் காலனியில் வேலை செய்யவும் குடியேறவும் வரவேற்கப்பட்டனர்.

செப்டம்பர் 1881 இன் பாண்டிச்சேரி ஆணை பிரெஞ்சு காலனியில் உள்ள இந்தியர்களுக்கு உள்ளூர் மேயர் அலுவலகத்தின் அறிவிப்பின் மூலம் அவர்களுக்கு பிரெஞ்சு குடிமக்களாக அந்தஸ்து வழங்கப்பட்டது.

பின்னர் அவர்கள் பிரெஞ்சு சிவில் சட்டத்திற்கு உட்பட்டு, அவர்கள் முழு பிரெஞ்சு குடிமக்களாக மாற்றப்பட்டனர்.

பிரெஞ்சு நடுத்தர பள்ளிகளில் படித்த இந்த புதிய குடிமக்களை, இந்தோசீனாவில் புதிய காலனிகளை ஆள உதவக்கூடிய சொத்துக்களாக பிரெஞ்சுக்காரர்கள் பார்த்தனர்.

பிரெஞ்சு மொழி பேசும் தமிழர்களும் தங்கள் காலனித்துவத்துடன் சமமாக வாழ ஆர்வமாக இருந்தனர்.

சைகோனில் உள்ள காலனித்துவ அதிகாரிகள் ஒரு காலனித்துவ மக்களை மற்றொரு காலனியில் உள்ள ஆட்சியாளர்களுக்கு இணையாக நடத்த தயங்கினார்கள். 1900 களில் அவர்களுக்கான உரிமையும் வழங்கப்பட்டது.

தமிழர்கள் வியட்நாமிற்குச் சென்று ஒரு இடத்தை பிடித்த பிறகு அங்கே கடைகளைத் திறந்தனர்.

இதற்கு இடையே 1880 களின் முற்பகுதியில், சைகோனில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு சிறிய வீட்டைக் கட்டி அங்கு அவர் தேவி மாரியம்மன் சிலையை வைத்திருந்தார். அந்த அறை நகரத் தமிழர்களுக்கான தற்காலிகக் கோவிலாக மாறியது. பின்னர் சில ஆண்டுகளில் வியட்நாமில் உள்ள தமிழர்களிடம் இருந்து நிதி சேகரித்து கோவில் கட்டப்பட்டது.

ஆண்டுக்கு ஒருமுறை மாரியம்மனின் வருடாந்திர திருவிழா கொண்டாடப்படுகிறது. மாரியம்மன் சிலையை சைகோன் முழுவதும் சிம்ம வாகனம் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. கோவிலில் தமிழர்கள், வியட்நாம் மக்கள் என்று அனைத்து பக்தர்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

இங்கு தமிழர்கள் மட்டுமல்லாது வியட்நாமியர்களும் மாரியம்மனை வணங்குவதை பார்க்கலாம்.

Vietnam : most famous Mariamman Hindu temple in Saigon
வியட்நாம் போர் வரலாறு - "அமெரிக்காவின் பயங்கரவாதம்" | பகுதி - 1
Vietnam : most famous Mariamman Hindu temple in Saigon
வியட்நாம் போர் வரலாறு : அமெரிக்காவை வீழ்த்திய அமெரிக்க மக்கள் | பகுதி 2

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com