உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்குத் துரித உணவுகளின் மீது அலாதி பிரியம். சில நிமிடங்களில் தயாரிக்கப்படும் இந்த துரித உணவுகள், மலிவான விலையில், தரமானதாகக் கிடைத்தால் மக்களுக்கு சொல்லவா வேண்டும்?
பல துரித உணவுகளின் ஊழியர்கள் குறித்து புகார்கள் அவ்வப்போது வருவதைப் பார்த்திருக்கிறோம். போதிய ஊதியம் அல்லது சலுகைகள் இல்லாமல் நீண்ட நேரம் பணியாற்றும் நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் அத்தனை சவால்களை எதிர்கொண்டு 27 ஆண்டுகள் பணியாற்றிய ’பர்கர் கிங்’ ஊழியரை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங்கில் ஊழியராக பணியாற்றி வருபவர் கெவின் போர்டு. இவர் 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பணி செய்துள்ளார்.
இவரின் பணியை அவ்வப்போது பாராட்டி, பிளாஸ்டிக் சிப்பர், சாக்லேட்டுகள், திரைப்பட டிக்கெட் என பலரும் இவருக்கு வெகுமதி வழங்கியுள்ளனர். ஆனால் இதெல்லாம் போதாது என எண்ணிய கெவினின் மகள், தனது தந்தைக்காக ஏதாவது செய்ய வேண்டும் என தன் தந்தை 27 வருடங்களில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலைக்கு சென்றார் என்ற விஷயத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.
அவரது மகள் வெளியிட்ட பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் பலர் போட்டிப் போட்டுக் கொண்டு கெவினுக்கு பணத்தை அள்ளி வழங்கினர். 'கோ-பண்ட்-மீ' (Co-Fund Me) என்ற அமைப்பின் மூலம் செரினா இந்த தொகையைத் திரட்டினார்.
கெவினின் சேவையைப் பாராட்டி நெட்டிசன்கள் தாராளமாக நன்கொடை அளித்ததில் ரூ.1 கோடி வரை சேர்ந்துவிட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மகள் செரினா மிகுந்த உணர்ச்சி வசப்பட்டார்.
அவருடைய 27 வருடங்களில் ஒரு நாள் கூட லீவு போடாமல் சென்றதற்கு, நெட்டிசன்கள் அவரது உழைப்பைப் பாராட்டி ரூ.1 கோடிக்கும் மேல் நிதி திரட்டியுள்ள சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust