சூப்பர் ஹீரோ போல மாஸ்க் அணிந்து விமானத்தில் சண்டையிடும் குழந்தை - வைரல் புகைப்படம்

இணையவாசி ஒருவர், குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காற்று தேவை, இப்படி சுவாச துளைகளை மூடுவது ஆபத்தானது எனக் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கான மாஸ்குகளை அதிகம் உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
baby
babyTwitter
Published on

நியூசிலாந்து விமான நிலையத்தில் சூப்பர் ஹீரோ போல மாஸ்க் அணிந்துள்ள குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் தற்போது பல நாடுகளில் மீண்டும் தலை தூக்கி வருகிறது. இரண்டு தவணை தடுப்பூசிகளை பொது மக்கள் செலுத்தியிருந்தாலும், எச்சரிக்கையுடன் இருக்க வலியுறுத்தி வருகின்றனர்.

எனவே பல்வேறு நாடுகளில் முகக் கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Flight
FlightTwitter

இந்த நிலையில் நியூசிலாந்தில் ஆக்லாந்திலிருந்து வெலிங்டனுக்கு செல்லும் விமான நிலையத்தில் பயணித்த ஒரு குழந்தை மாஸ்க் போட்டுள்ளார். அதில் என்ன அதிசயம் என்று தானே கேட்கிறீர்கள்?

அந்த குழந்தை அணிந்த மாஸ்க் பெரிதாக இருந்த காரணத்தால் முகத்தை முழுவதும் மூடி கண்கள் இருக்கும் பகுதியில் துளைகளைப் போட்டுள்ளனர்.

baby
காணாமல் போன விமானம் 37 ஆண்டுகளுக்கு பின் தரையிறங்கியதா? - டைம் ட்ராவல்
baby
babyTwitter

இதனைப் புகைப்படமாக எடுத்துள்ள ஜான்ட்ரே ஓப்பர்மேன், என்பவர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் இதனைப் பகிர்ந்து இது ஒரு "சூப்பர்- ஸ்வீட் இன்டராக்ஷன்" என்று கூறியுள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக இணைய வாசிகள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அதில் இணையவாசி ஒருவர் ஒரு சூப்பர் ஹீரோ உருவாக பயிற்சி வேண்டும் ஆனால் உலகம் இன்னும் சூப்பர் பேபிக்கு தயாராகவில்லை எனக் கூறியுள்ளார்.

baby
விமான விபத்து : 33 ஆயிரம் அடி உயரத்திலிருந்து விழுந்து உயிர் பிழைத்த பெண் - ஆச்சரிய தகவல்

மற்றொரு இணையவாசி குழந்தைகளின் வளர்ச்சிக்குக் காற்று தேவை, இப்படி சுவாச துளைகளை மூடுவது ஆபத்தானது எனக் கூறியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கான மாஸ்குகளை அதிகம் உருவாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

நியூசிலாந்து அரசின் விதிமுறைகள் படி 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து விமானப் பயணிகளும் உள்நாட்டு விமானங்களில் முககவசம் அணிந்திருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் மூக்கு மற்றும் கன்னம் ஆகியவற்றை எந்த இடைவெளியும் இல்லாமல் மறைக்கும் வகையில் நன்கு பொருத்தப்பட்ட முகமூடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நியூசிலாந்து அரசு கூறியுள்ளது.

baby
வயலின் வாசித்த பெண்; மெய் மறந்து உருகிய குழந்தை - வைரல் வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com