வயலின் வாசித்த பெண்; மெய் மறந்து உருகிய குழந்தை - வைரல் வீடியோ
இசை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இளையராஜா, எஸ்பிபி, ஜேசுதாஸ், ரகுமான், அனிருத், சந்தோஷ் நாராயணன், பிரதீப் குமார், சித் ஶ்ரீராம் என இசைக்கலைஞர்கள் மீது நமக்கு எப்போம் தனித்துவமான ஈர்ப்பு இருக்கும்.
இசை மனித குலத்தின் அனைத்து கலாச்சாரங்களுடனும் பிணைந்திருப்பதற்கு காரணம் அது தரும் அலாதியான உணர்வு தான்.
அது உடலிலிருந்து மனதை பிரித்தெடுப்பது போன்று, வானில் பறப்பது போன்று உணர்வளிக்கும். சிறியவர் பெரியவர் வித்தியாசமின்றி இசை அனைவரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதற்கு சிறந்த உதாரணம் இந்த வீடியோ தான்.
ஒரு விழாவில் வயலின் இசைக்கலைஞர் வாசிக்க அதனைப் பார்த்துக்கொண்டிருந்த குழந்தை மெய்மறந்து நின்றது. சிறிது நேரத்துக்கு பின் அந்த வயலின் வாசித்த பெண் அருகில் சென்று கட்டி அணைத்தது.
இந்த வீடியோவை வயலின் கலைஞரான மெலிசா வோயியாஸ் பகிர்ந்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவு 10,000 லைக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவுக்கு "க்யூட்டான பார்வையாளரை அறிமுகப்படுத்துகிறேன்" என அவர் தலைப்பிட்டுள்ளார். அதில் ஒரு இதய எமோஜியும் அழுவது போன்ற எமோஜியும் வைத்துள்ளார்.
இந்த குழந்தை மெய்மறக்கும் அளவு அவர் வாசித்தது Wake Me Up எனும் பாடலாம்.
தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாக இருக்கும் ஏஸ்தெடிக் எடிட்டாக இந்த வீடியோவையும் விரைவில் எதிர்பாக்கலாம்!
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust