ஒவ்வொருவருக்கும் பட்டம் பெறுவது வாழ்வில் மிக முக்கியநாளாக இருக்கும்.
3,4 ஆண்டுகள் படித்ததின் பலனை பலரும் கொண்டாடியிருப்போம்.
வளர்ந்த மனிதராக நாம் பெறும் முதல் வெற்றி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதாக தான் இருக்கும்.
பெரும்பாலும் 20களின் தொடக்கத்தில் நாம் பட்டம் பெறுவோம். சிலருக்கு இது கொஞ்சம் தாமதமாக நடக்கலாம்.
ஆனால் பிரேசில் நாட்டில் ஒருவருக்கு 78 வயதில் தான் கல்லூரிப்பட்டம் கிடைத்திருக்கிறது.
படிப்பு என்பது எல்லாருக்கும் கிடைத்துவிடாத பொக்கிஷம். வாழ்வில் அது எப்போது கிடைத்தாலும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே இவரது கதை உணர்த்துகிறது.
அந்த 78 வயது நபர் தனது 98 வயது தாயுடன் பட்டம் பெற்றதைக் கொண்டாடும் வீடியோ காண்போரை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.
இணையத்தில் பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.
இவர் பொருளாதார மேலாண்மையில் இரண்டு ஆண்டுகள் படிப்பை நிறைவு செய்து இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார் என இந்த வீடியோவை பதிவு செய்துள்ள பிரபல இன்ஸ்டாகிராம் பக்கம் கூறுகிறது.
அவரது தாயார் பல்கலைக்கழகத்துக்கு வரமுடியாதபடியால் பட்டமேற்கும் உடையிலேயே அவரைச் சென்று சந்தித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
வீட்டுக்கு உள்ளே நுழைந்தது அவரது தாயாரைக் கட்டியணைத்து மகிழ்ந்தார்.
அவரது பட்டமேற்பை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கொண்டாடுவதை பார்க்க முடிகிறது.
கல்விக்கு எல்லையே இல்லை எந்த வயதில் படித்தாலும் நமக்கு சந்தோஷம் தரக் கூடிய விஷயம் கல்வி தான்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust