புதின்: அதிபரை மாற்ற ரஷ்ய ராணுவம் திட்டம்? - சமீபத்திய தகவல்கள் சொல்வதென்ன?

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு வரும் வரை புதின் ரஷ்யாவின் அதிபராக நீடிக்கப்போவதில்லை. அவரை மாற்றுவது குறித்து ரஷ்யாவின் ராணுவ உயரதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்twitter
Published on

ரஷ்ய அதிபர் புதினின் இடத்தை நிரப்ப ரஷ்ய அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆங்கில பத்திரிக்கையான மிரர் கூறுவதன் படி, உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு போர் முடிவுக்கு வரும் வரை புதின் ரஷ்யாவின் அதிபராக நீடிக்கப்போவதில்லை. அவரை மாற்றுவது குறித்து ரஷ்யாவின் ராணுவ உயரதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். உக்ரைன் ராணுவ அதிகாரி கைரிலோ புடானோவ் இதனை தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைன் ராணுவ அதிகாரி கைரிலோ புடானோவ்
உக்ரைன் ராணுவ அதிகாரி கைரிலோ புடானோவ் ட்விட்டர்

ஆக்கிரமிப்பு போரின் தொடக்கத்தில் ரஷ்யா கைப்பற்றிய கெர்சன் என்ற பகுதியை மீட்கும் முனைப்பில் உக்ரைன் ராணுவம் செயலாற்றி வரும் சூழலில் இந்த விவாதம் நடந்து வருவதாக கைரிலோ கூறியுள்ளார்.

அவரது கூற்றுப்படி ரஷ்ய இராணுவம் தொடர்ந்து தாக்கும் நிலையில் இருந்து தாங்கள் ஆக்கிரமித்த பகுதியை தக்கவைக்கும் நிலைக்கு பின்னடைந்திருக்கிறது.

"புதின் இதிலிருந்து தப்பி பிழைப்பது எளிதல்ல. ரஷ்ய அதிகாரிகள் புதினுக்கு பதிலாக யாரை நியமனம் செய்வது என தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்" என்று கைரிலோ கூறியிருக்கிறார்.

ரஷ்ய அதிபர் புதின்
விளாடிமிர் புதின் : உளவாளி, கொலைகாரர், பெரும் பணக்காரர் - யார் இந்த Putin?

மேலும் உக்ரைன் நவம்பர் இறுதிக்குள் கெர்சனை பிடிக்கும் என்றும், 2014ம் ஆண்டு ரஷ்யா ஆக்கிரமித்த கிரிமியா பகுதியையும் கைப்பற்றும் என்றும் கூறியுள்ளார். இந்த போரின் முடிவுரையாக அது இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

செப்டம்பர் முதல் ரஷ்யா போரில் பின்னடைந்து வருகிறது. புதின் படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தார், ஆக்கிரமித்த பகுதிகளை இணைத்துக் கொள்வதாக அறிவித்தார், தொடர்ந்து அணு ஆயுதங்களை உபயோகிப்பதாக அச்சுறுத்தி வருகிறார்.

சமீபத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் மூலம் 40% வரை உக்ரைனின் மின்சார உற்பத்தியை தடுத்துள்ளது. இதனால் வரும் குளிர்காலம் உக்ரைனுக்கு இருண்ட குளிர்காலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்
ஆறாவது முறையாக கொலை முயற்சி; உயிர் தப்பிய ரஷ்ய அதிபர் புதின் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com