Cannibalism: போதையில் கொலை செய்து உடலை சமைத்து சாப்பிட்ட நபர் - எங்கே?

ஆயுள் தண்டனை துவங்கியதும், விளாடிமிரை கஜகஸ்தானில் உள்ள K-6 பிளாக் டால்ஃபின் சிறைக்கு மாற்றினர். இங்கு மாற்றப்பட்ட பிறகு நேஷனல் ஜியோகிராஃபி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் போது தான் திடுக்கிடும் தகவல் ஒன்றைப் பகிர்ந்தார்.
Vladimir
VladimirTwitter
Published on

சண்டையில் கொலை செய்த நபரை தான் சாப்பிட்டது மட்டுமல்லாமல், கங்காரு இறைச்சி என சொல்லி ஒருவர், தன் குழந்தைகளையும் உட்கொள்ளவைத்த சம்பவம் ரஷ்யாவில் நிகழ்ந்துள்ளது.


ரஷ்யாவை சேர்ந்த விளாடிமிர் என்ற 63-வயது நபர் இருவரைக் கொலை செய்த வழக்கில் 1997ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். முதலில் மரண தண்டனை என கொடுக்கப்பட்ட தீர்ப்பு, பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

Prison
PrisonPexels

ஆயுள் தண்டனை துவங்கியதும், விளாடிமிரை கஜகஸ்தானில் உள்ள K-6 பிளாக் டால்ஃபின் சிறைக்கு மாற்றினர். இங்கு மாற்றப்பட்ட பிறகு நேஷனல் ஜியோகிராஃபி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் போது தான் திடுக்கிடும் தகவல் ஒன்றைப் பகிர்ந்தார்.

ஒரு முறை பார்ட்டி முடித்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது, விளாடிமிருக்கும் சாலையில் இன்னொருவருக்கும் கைகலப்பு நடந்துள்ளது. அதில் தன்னுடன் சண்டைக்கு வந்த நபரை விளாடிமிர் கொன்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்த போது இருவரும் போதையிலிருந்தது குறிப்பிடத்தக்கது.

Vladimir
Cannibalism : நர மாமிச சுவையில் தயாரிக்கப்பட்ட பர்கர் - என்ன, எங்கே, ஏன் ? - விரிவான தகவல்

அதன் பின்னர் பாத்ரூமிற்கு அந்த உடலை எடுத்து சென்று விளாடிமிர் அதை துண்டாக்கிக்கொண்டிருக்கையில் தான் மாமிசத்தைச் சுவைத்துப்பார்க்கும் எண்ணம் அவருக்குள் தோன்றியுள்ளது. தொடைப்பகுதியை வேகவைத்து, விளாடிமிர் முதலில் சுவைத்துள்ளார். அதன் சுவை பிடிக்காததால், அதை இன்னும் சிறு துண்டுகளாக வெட்டி, வறுத்து உண்டதாக அவர் தெரிவித்தார்.


இத்துடன் சேர்த்து அவர் சொன்ன மற்றொரு விஷயம் தான் இன்னும் அதிர்ச்சிகரமாக இருந்தது. மாமிசத்தை தன் வீட்டிற்கு எடுத்து தன் மனைவியிடம் கொடுத்துள்ளார். அதில் டம்ப்லிங்க்ஸ் செய்து அவர்களது குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளனர். அதை கங்காருவின் மாமிசம் என்று சொல்லி கொடுத்ததால், குழந்தைகளும் விஷயம் தெரியாமலே சாப்பிட்டுள்ளனர்.

Murder
MurderPexels

மேலும் இவர் மனித இறைச்சியை கங்காருவின் இறைச்சி என்று சொல்லி 5 கிலோ வரை விற்றுள்ளார். இறைச்சியை வாங்கிய பெண் ஒருவர், அதன் சுவையில் வித்தியாசம் இருந்ததால், அதை மருத்துவரிடம் எடுத்து சென்று சோதித்துள்ளார்


அப்போது தான் அது மனித மாமிசம் என்று கண்டறிந்துள்ளனர். அதன் பின்னர் தான் போலீஸிடமும் சிக்கியுள்ளார் விளாடிமிர்.


கொலை செய்த குற்றத்திற்காகவும், மனித இறைச்சியை விற்றதற்காகவும், குழந்தைகளை ஏமாற்றி சாப்பிடவைத்ததற்காகவும் அவருக்கு முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Vladimir
Cannibalism : தன் இனத்தையே உண்ணும் விலங்குகள்; 7 விசித்திர உண்மைகள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com