தென் ஆப்ரிக்காவின் சடாரா பகுதியில் வாழ்ந்து வரும் மூன்று கால்கள் கொண்ட யானை பலரது கவனத்தை பெற்று வருகிறது.
டிலன் பான்ஸ் என்கிற இணைவாசி ஒருவர் பகிர்ந்த வீடியோவில், மூன்று கால்களுடன் மகிழ்ச்சியாகவும் குதூகலமாகவும் வாழ்ந்து வரும் வுடோமி என்ற பெண் யானையின் கதை நம் மனதை கனக்கச் செய்கிறது.
தென் ஆப்ரிக்காவின் க்ரூகெர் தேசிய பூங்காவில் தனது குழுவுடன் வாழ்ந்து வருகிறது வுடோமி யானை. மூன்று கால்களில் மட்டும் நடக்கும் இதற்கு நான்காவது கால் மற்ற கால்களை விட சிறியதாக இருக்கிறது. இதனால் தத்தி தத்தி தான் வுடோமியால் நடக்க முடியும்.
வுடோமி, தனது காலை கண்ணிவெடி வெடித்ததால் இழந்திருக்கக்கூடும், அல்லது காட்டு விலங்குகள் எதனுடனாவது சண்டையிடும் போது இழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது
வுடோமி யானை சிறிது நேரம் தண்ணீரில் அமர்ந்து இளைப்பாறிவிட்டு, கரையேறுகிறது. வுடோமியின் நண்பர்கள், அதாவது மற்ற யானைகள், அதனை வரவேற்று தங்களுடன் இணைத்துக்கொள்ளும் காட்சி பார்ப்பவர் மனதை நெகிழச் செய்வதாக டிலன் கூறுகிறார்.
இந்த யானைக் கூட்டம் வுடோமி மீது காட்டும் அன்பு தான் அதனை இத்தனை நாட்கள் உயிர்வாழ ஊக்குவிக்கிறது என்கிறார் டிலன்
அதன் கூட்டத்துடன் விளையாடிக்கொண்டும், மெல்ல தனது மூன்று கால்களினால் நடந்து காட்டுக்குள் செல்லும் வுடோமி யானை, தன்னம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது எனவும் அவர் கூறினார்.
என்ன தான் காட்டு விலங்குகள் அச்சமூட்டும் வகையில் இருந்தாலும், அவைகளுக்கும் கஷ்டங்கள் இருக்கும் என இது போன்ற நிகழ்வுகளை நாம் காணும்போது தான் தெரிகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust