துருக்கி, சிரியா : அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள், உயரும் பலி எண்ணிக்கை - என்ன நடக்கிறது ?

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிப்பு அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்துக்குள் 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 16500க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.
துருக்கி நிலநடுக்கம் : 4,300 பேர் மரணம் - முன்னரே கணித்த நபர்
துருக்கி நிலநடுக்கம் : 4,300 பேர் மரணம் - முன்னரே கணித்த நபர்Twitter

துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் இந்த ஆண்டின் மிகப் பெரிய பேரழிவாக கருதப்படுகிறது.

துருக்கியில் 3,531 பேரும், சிரியாவில் 1,451 பேரும் இறந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நாடுகளிலும் சேர்த்து 4,300க்கும் மேற்பட்ட மனிதர்கள் பலியாகியுள்ளனர்.

இந்த பேரழிவை முன்னமே கணித்துள்ளார் டச்சு ஆராய்ச்சியாளர் ஃப்ராங்க் கூகர்பீட்ஸ்.

துருக்கி, சிரியா எல்லைக்கு அருகில் இருக்கும் காசியாபாத் நகரில் தான் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 40க்கும் அதிகமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் பாதிப்பு அதிகரித்தது. கடந்த 24 மணி நேரத்துக்குள் 4 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இதில் 16500க்கும் மேற்பட்ட மக்கள் பலத்த காயமடைந்துள்ளனர்.

கடந்த 1939ம் ஆண்டு இதே அளவிலான நிலநடுக்கத்தில் 30000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர்.

துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை கணித்த ஃப்ராங்க் கூகர்பீட்ஸ் (frank hoogerbeets) மூன்று நாள்களுக்கு முன்பே, மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் ஆகிய பகுதிகளைக் குறிப்பிட்டு 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக வரைபடத்துடன் கூறியிருந்தார்.

துருக்கி நிலநடுக்கம் : 4,300 பேர் மரணம் - முன்னரே கணித்த நபர்
துருக்கி முதல் இலங்கை வரை : பெயர் மாற்றம் செய்து கொண்ட 7 நாடுகள் - காரணம் என்ன?

இவரது கணிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மறுபக்கம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டுகின்றன. 43க்கும் மேற்பட்ட நாடுகள் உதவுவதாக நேற்று துருக்கி அதிபர் கூறியிருந்தார்.

துருக்கி நிலநடுக்கம் : 4,300 பேர் மரணம் - முன்னரே கணித்த நபர்
துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் : ஆயிரக்கணக்கானோர் பலி - தற்போதைய நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com