8 அடி 6 அங்குலம்: உலகின் மிக அகலமான விக் - கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்

கின்னஸ் உலக சாதனைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அகலமாக விக்கை டேனி ரெனால்ட்ஸ் அணிந்திருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தது. 8 அடி 6 அங்குலம் இருக்கும் அந்த விக்கை ஒரு கிரேனை பயன்படுத்தி அவரது தலையில் வைக்கின்றனர்.
8 அடி 6 அங்குலம்: உலகின் மிக அகலமான விக் - கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்
8 அடி 6 அங்குலம்: உலகின் மிக அகலமான விக் - கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்இன்ஸ்டாகிராம்
Published on

உலகின் மிகப் பெரிய விக் தயாரித்து புதிய கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர். இவர் தயாரித்துள்ள விக்கின் நீளம் 8 அடி 6 அங்குலம்.

தற்போதெல்லாம் தங்களிடம் இருக்கும் பல்வேறு திறன்களை வெளிப்படுத்தி பலரும் கின்னஸ் சாதனைகள் பட்டியலில் இடம்பெற்று வருகின்றனர். நீளமான காது முடி, நீளமான தாடி, நீண்ட நாக்கு என இந்த பட்டியல் நீள்கிறது.

அந்த வகையில், உலகின் மிக அகலமான விக் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார் டேனி ரெனால்ட்ஸ் என்கிற கலைஞர்.

GWR தளத்தின் படி, இதற்கு முன் ட்ரூ பெரிமோர் என்ற ஹாலிவுட் நடிகைக்கு சொந்தமாக இருந்தது இந்த சாதனை. அவர் அணிந்திருந்த விக்கானது 7 அடி அகலம் இருந்தது.

கின்னஸ் உலக சாதனைகள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அகலமாக விக்கை டேனி ரெனால்ட்ஸ் அணிந்திருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தது. 8 அடி 6 அங்குலம் இருக்கும் அந்த விக்கை ஒரு கிரேனை பயன்படுத்தி அவரது தலையில் வைக்கின்றனர்.

இந்த தலைமுடிக்கான வடிவமைப்பை உருவாக்கிய பின்னருள்ளூர் கலைஞரானமெக் வில்சன் என்பவரின் உதவியோடு, இந்த செயற்கை முடியை அவர் தைத்து ஒன்றிணைத்திருக்கிறார். மேலும் தலைமுடியில் அலங்காரத்திற்காக வைக்கப்படும் Bow வடிவ ரிப்பன்களையும் மெக்குடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.

8 அடி 6 அங்குலம்: உலகின் மிக அகலமான விக் - கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்
Guinness: 11 நாட்கள், 13,500 கி.மீ - இடைவிடாது பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை - எங்கே?

”இதற்கு முன் உலகின் மிக அகலமான விக்கை அணிந்திருந்த ஹாலிவுட் நடிகை ட்ரூ, அந்த விக்கை அணிய மட்டுமே செய்தார் ஆனால் அதனை தயாரிக்க அவருக்கு நாட்டின் தலைச்சிறந்த கலைஞர்கள் அவருடன் இருந்தனர். ஆனால் இந்த விக்கை நான் தயாரித்திருக்கிறேன். எனக்கு மெக் உதவியாக இருந்தார்.” எனக் கூறியிருந்தார் டேனி

இந்த விக்கை தயாரிப்பதில் தனக்கு இருந்த மிகப்பெரிய சவால், அது சமநிலையில் இருப்பது தான் என்றார். டேனி மற்றும் மெக் இருவரும் இணைந்து இந்த பிரம்மாண்டமான ஹேர்பீசை தயாரிக்க இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. மேலும் இதனை தயாரிக்க அவர்களுக்கு 4000 ஆஸ்திரேலிய டாலர்கள் செலவாகியுள்ளது. இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய்க்கும் மேல்.

8 அடி 6 அங்குலம்: உலகின் மிக அகலமான விக் - கின்னஸ் சாதனை படைத்த ஆஸ்திரேலிய பெண்
Guinness: 203 யூனிட் ரத்த தானம் செய்து சாதனை படைத்த பெண் - ஒரு நெகிழ்ச்சி பதிவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com