பபுல்கம் கூடாது , புத்தரோடு செல்ஃபி கூடாது - சில நாடுகளின் விசித்திர விதிமுறைகள்

ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனித்த அடையாளங்களையும், கலாச்சாரங்களையும் கொண்டிருப்பது போல தனித்த சட்டத்தையும் கொண்டிருக்கிறது. அப்படியான சட்டங்களில் மிகவும் வித்தியாசமானவற்றைக் காணலாம்.
world
worldcanva
Published on

உலகில் உள்ள பல நாடுகளில் பல வித்தியாசமான விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. அதில் நம் ஆச்சர்யப்பட வைக்கும் சில விஷயங்களை இங்கே பட்டியலிட்டு இருக்கிறோம்.


1. டி என் ஏ சோதனை

இத்தாலி நாட்டில் உள்ள கப்ரி நகரத்தில் முழு தீவையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கில், வீட்டு நாய்கள் சாலைகளில் மலம் கழிக்கக்கூடாதென ஒரு விதி உள்ளது. அதை மீறி நாய்கள் சாலையில் மலம் கழித்தால், அதன் உரிமையாளர்கள் அதைச் சுத்தப்படுத்த வேண்டும். மீறிச் சுத்தப்படுத்தாமல் போனால், மரபணு சோதனை செய்யப்பட்டு 2,000 யூரோ (2,400 டாலர்) வரை அபராதம் விதிக்கப்படும்.

2. பபுல்கத்துக்கு தடை

சிங்கப்பூரில் 1992ஆம் ஆண்டு பபுல்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதை மீறி பபுல்கம் வைத்திருந்தால் இரண்டு ஆண்டுகள் சிறை + 1,00,000 டாலர் அபராதம் வேறு விதிக்கப்படுமாம். பபுல்கத்தினால் ஏற்படும் உடல்நலம் சார்ந்த அபாயங்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு என அனைத்தும் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாம். 2004ஆம் ஆண்டு இந்த கடும் விதி சற்றே தளர்த்தப்பட்டு, மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் மட்டுமே பபுல்கம்கள் விற்கப்பட்டு வருகின்றன.

3. ஃப்லஷ் அழுத்துவது கூட இரைச்சல் மாசுபாடு

இரவு நேரத்தில் சிறுநீர் கழிக்கவோ, அதிகம் சாப்பிட்டதனால் மலம் கழிக்கவோ எழுந்திருத்திருப்போம். வழக்கம் போல எல்லாம் முடிந்து ஃப்ளஷ் அழுத்தி கழிவை முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் படுக்கைக்கு வருவோம். சுவிட்சர்லாந்தில் அப்படி, இரவு 10 மணிக்கு மேல் ஃப்ளஷ் பயன்படுத்தினால் அது இரைச்சல் மாசுபாடாகக் கருதப்படும் என அந்நாட்டுச் சட்டதிட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சுவிட்சர்லாந்துக்குப் போனால் இரவில் கழிவறை பக்கம் சென்றுவிடாதீர்கள். அதை மீறி சென்றால் கூட ஃப்லஷ் பட்டனில் கை வைக்காதீர்கள்.

4. Camouflage சீருடை அணிவது குற்றம்

ராணுவம் சார்ந்த படங்களைப் பார்த்துவிட்டோ அல்லது நடிகர் ஜான் ஆபிரகாமின் ரசிகர்களோ ராணுவத்தில் பயன்படுத்தப்படும் Camouflage சீருடைகள் அணிவதைப் பார்த்திருப்போம் அல்லது நாமே கூட அணிந்திருப்போம். அப்படி சில ஆப்பிரிக்க மற்றும் கரீபிய நாடுகளில் பயன்படுத்த முடியாது. மீறிப் பயன்படுத்தினால், ராணுவ சீருடையைத் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக, ஒரு பெரிய குற்றச்சாட்டு வைக்கப்படும்.

world
பிரேசில் : வயாக்ரா பயன்படுத்தும் இராணுவம் - கொதித்து எழுந்த மக்கள்

5. புத்தரோடு நோ செல்ஃபி

புத்தர் இன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரின் இருக்கையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். பெரிய புத்தர் சிலை என்றால் ஒரு ஆசையில் அல்லது மரியாதை நிமித்தமாக அதோடு செல்ஃபி எடுத்துக் கொள்வர். ஆனால், அழகான இயற்கை வனப்பு கொண்ட இலங்கையில் புத்தருக்கு நம் பிருட்டத்தைக் காட்டியபடி செல்ஃபி எடுப்பது பெருங்குற்றமாகக் கருதப்படுகிறது. புத்தரை வணங்கும்படி, புத்தரின் முகத்தைப் பார்க்கும் படி செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம்.

6. மரம் ஏறத் தடை

பொது இடங்கள், பூங்காக்கள், சதுக்கங்களில் மக்கள் நிம்மதியாக அமர்ந்து பேசுவதற்கும், குழந்தைகள் விளையாடவும் பயன்படுத்துவார்கள். சிலர் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடுவர், மரம் ஏறி பழம் பறிப்பர். ஆனால் கனடாவில் ஒஷாவா நகரத்தில் மக்கள் மரம் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

world
பானிபூரி விற்க தடை : தண்ணீரில் கண்டறியப்பட்ட காலரா பாக்டீரியா

7. நாயை மூன்று வேளை Walking அழைத்துச் செல்லவில்லை எனில் குற்றம்

உலகப் புகழ்பெற்ற Gianduiotto சாக்லேட்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த பிட்மாண்ட் மாகாணத்தில் தயாரிக்கப்படுகின்றன. அம்மாகாணத்தைச் சேர்ந்த டுரின் நகரத்தில் வாய் வளர்த்தால், தினமும் 3 வேளையாவது அதை நடைக்கு வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில் அது குற்றமாகக் கருதப்பட்டு 500 யூரோ அபராதம் விதிக்கப்படும்.

அரச குடும்பங்களுக்காகத் தயாரிக்கப்பட்ட ஓர் சாக்லெட்டின் வியக்க வைக்கும் ரகசியம் தெரியுமா?

8. மனைவியின் பிறந்தநாள் மறந்தால் சிறைத் தண்டனை

சமவோ நாட்டில் மனைவியின் பிறந்தநாளை மறப்பது கூட மிகப்பெரிய குற்றமாம். அதையும் மீறி மறந்தால், கணவர் சிறை வரை செல்ல வேண்டி இருக்கும்.

9. பல்ப் மாற்றுவது கூட சட்ட விரோதம்

ஆஸ்திரியா நாட்டில், உரிய உரிமங்கள் அனுமதிக் கடிதங்கள் இல்லாமல், பல்ப் மாற்றுவது கூட சட்ட விரோதமான காரியம். சான்றளிக்கப்பட்ட எலெக்ட்ரீஷியன்கள் மட்டுமே பல்புகளை மாற்றுவதற்கு அனுமதி என்கிறார்கள். இதை மீறி பல்ப் மாற்றினால் அபராதம் செலுத்த வேண்டி வரும்.

world
Qimat Rai Gupta : பள்ளி ஆசிரியர் டூ பில்லியனர் - கிமத் ராய் குப்தாவின் வியக்க வைக்கும் கதை

10. புறாவுக்கு உணவு கொடுக்கத் தடை

உலகின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வெனிஸ் நகரத்தில் புறாக்கள் ஆயிரக்கணக்கில் பறப்பதைச் சாதாரணமாகப் பார்க்கலாம். அது எதார்த்தத்தில் நகரத்தில் உள்ள புராதன கட்டடங்களைப் பராமரிக்க ஏகப்பட்ட சிரமங்களை ஏற்படுத்துவதால், கடந்த 2008ஆம் ஆண்டு வெனிஸ் நகரத்தில், புனித மார்க் சதுக்கத்தில் புறாக்களுக்கு உணவளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதை மீறி புறாக்களுக்கு உணவு கொடுத்தால் 700 யூரோ அபராதம் விதிக்கப்படுமாம்.

11. கனடா இசை

கனடாவில் இயங்கும் ரேடியோக்களில் ஒளிபரப்பப்படும் பாடல்களில், குறைந்தபட்சமாக 35% பாடல்கள் கனடிய இசைக் கலைஞர்களுடையதாக இருக்க வேண்டும் என ஒரு விதி இருக்கிறது. கனடா நாட்டின் கலாச்சாரத்தைப் பாதுகாக்க இந்த ஏற்பாடாம்.

world
மைக்கேல் ஜாக்சனின் வரலாறு : இசை சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி ?| Video | Part 1

12. ஓடிடி பாஸ்வேர்ட் பகிர்வது குற்றம்

அமெரிக்காவில் உள்ள டென்னஸி மாகாணத்தில், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களின் கடவுச் சொற்களை மற்றவர்களோடு பகிர்வது குற்றம் என ஒரு விதி இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்திலேயே நான்கு பேர் ஒரே கணக்கைப் பயன்படுத்தும் வகையில் திட்டங்கள் இருக்கும் போது இப்படி ஒரு விதி இருப்பது சற்றே வேடிக்கையானது.

13. வெளிநாடுகளுக்கு அழைத்துப் பேசுவது குற்றம்

வடகொரியாவில் வாழும் மக்கள், வெளிநாடுகளுக்கு அழைத்துப் பேசுவது குற்றம். கடந்த 2007ஆம் ஆண்டு, சுமார் 1.5 லட்சம் மக்கள் முன்னிலையில் ஒரு தொழிற்சாலை உரிமையாளர் தன் ஆலையின் கீழ்ப் பகுதியில் நிறுவி இருந்த தொலைப்பேசி மூலம் வெளிநாட்டுக்குப் பேசியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டார்.

world
வட கொரியா: கிம் ஜாங் உன் வம்சத்தின் விறுவிறுப்பான கதை | பகுதி 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com