பிரேசில் : வயாக்ரா பயன்படுத்தும் இராணுவம் - கொதித்து எழுந்த மக்கள்

பிரேசில் அதிபர் பொல்சனாரோவின் அரசாங்கம் ஆயுதப் படைகளுக்கு 35,000 விறைப்புச் செயல் மாத்திரையான வயாக்ராவை ஆர்டர் செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறது.
வயாக்ரா
வயாக்ரா Twitter
Published on

வயக்ரா என்ற பிராண்டு மாத்திரையின் மூலப்பொருள் சில்டெனாபில் ஆகும். இது இரத்த நாளங்களின் சுவர்களில் காணப்படும் தசைகளைத் தளர்த்துகிறது. இதனால் உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

வயாக்ரா ஆண்மைக் குறைவு உள்ள ஆண்களின் விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கு சிகிச்சையாக்கப் பயன்படுகிறது. வயாக்ராவின் மூலப்பொருளான சில்டெனாபிலினின் மற்றொரு பிராண்ட் ரேவதியோ ஆகும். இது நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையாக்கவும், ஆண்கள் மற்றும் பெண்களின் உடற்பயிற்சி திறனை மேம்படுத்தவும் பயன்படுகிறது.

வயாக்ரா சர்ச்சையில் சிக்கிய பிரேசில் இராணுவம்

கடந்த திங்களன்று பிரேசிலின் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர் எலியாஸ் வாஸ் பிரேசில் இராணுவம் வயாக்ரா மாத்திரைகளைக் கொள்முதல் செய்த தகவலை வெளியிட்டார். இதையடுத்து சமூக ஊட்டங்களில் கேலியும் கிண்டலும் குவிந்தன.

Brazil Army
Brazil Army

பிரேசில் அதிபர் பொல்சனாரோவின் அரசாங்கம் ஆயுதப் படைகளுக்கு 35,000 விறைப்புச் செயல் மாத்திரையான வயாக்ராவை ஆர்டர் செய்ய ஒப்புதல் அளித்திருக்கிறது. இது தகவல் அறியும் உரிமையில் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் காங்கிரஸ் உறுப்பினர் எலியாஸ் கூறினார்.

நாட்டின் மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை. இந்நிலையில் போல்சனாரோவும் அவரது நிர்வாகமும் வயாக்ரா எனப்படும் இந்த சிறிய நீலமாத்திரைகளை வாங்கப் பொதுப்பணத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சி உறுப்பினர் எலியாஸ் தெரிவித்தார். மேலும் இந்த கொள்முதல் ஒழுக்கமற்ற ஒன்று என்றார்.

அவர் பெற்ற தகவல் அறியும் ஆவணங்களில் வயாக்ராவின் பெயர் இல்லை. ஆனால் மருந்தின் மூலப்பொருளான சில்டெனாஃபிலுக்கான ஆர்டர் என்று உள்ளதாக அவர் கூறினார்.

அதிபர் பொல்சனாரோ
அதிபர் பொல்சனாரோTwitter

பிரேசில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையாக்க இது பயன்படுகிறது. மேலும் இது வயாக்ராவின் மூலப்பொருளான சில்டெனாபிலினின் மற்றொரு பயன்பாடாகும்.” என்று கூறியிருக்கிறது. இதனால் சமூக ஊடகப் பயனர்களின் காமடியை குறைக்க முடியவில்லை.

பிரேசிலின் டிவிட்டரில் வயாக்ரா ஹேஷ்டேக்கில் டிவிட்டுகள் குவிந்தன. கார்ட்டூன்கள், மீம்கள், கமெண்டுகள், நகைச்சுவைகள் என்று மக்கள் புகுந்து விளையாடினர்.

அதிபர் பொல்சனாரோவை இராணுவம் ஏன் ஆதரிக்கிறது?

அதிபர் பொல்சனாரோவை இராணுவம் ஏன் ஆதரிக்கிறது என்பதை இது விளக்குவதாக ஒரு பயனர் கேலி செய்தார். வலது சாரி அதிபரோடு இராணுவம் விரைப்பான உறவைக் கொண்டிருப்பதாகவும் அவர் போட்டுத் தாக்கினார்.

முன்னாள் இராணுவ தளபதியான பொல்சனாரோ தனது நிர்வாகத்தை இராணுவ உறுப்பினர்களால் நிரப்பியுள்ளார். இப்போதே அவரது நிர்வாகம் பல உரிமை மீறல்களைச் செய்திருக்கிறது. இந்நிலையில் பிரேசிலில் 1964 முதல் 1985 வரை இருந்த இராணுவ சர்வாதிகாரத்திற்கான ஏக்கம் அதிபரிடம் வெளிப்படையாகவே உள்ளது.

வயாக்ரா
ஆண்கள் உச்சக்கட்டத்தை அடைந்த பின் என்ன நிகழும்?

வயாக்ரா மூலம் ஜனநாயகத்தை பிரேசில் இராணுவம் ரேப் செய்யுமா?

இந்த மாத்திரைகள், பிரேசிலின் ஜனநாயகத்தை இராணுவம் ரேப் செய்ய உதவும் என்று சிலர் கூறுகிறார்கள் என்று சென்சாசனலிஸ்டா எனும் நையாண்டி செய்தித்தளம் எழுதியது.

இதற்கிடையில் இடதுசாரி காங்கிரஸ் உறுப்பினர்களான மார்செலோ ஃப்ரீக்சோ மற்றும் எலியாஸ் வாஸ் ஆகியோர் வேறு ஒன்றைக் கேட்கின்றனர். இந்த மாத்திரை கொள்முதல் வேறு எதையாவது ‘வீங்க’ வைத்திருக்கிறதா என்று அவர்கள் வழக்கறிஞர்களைப் புலனாய்வு செய்யுமாறு கோரியிருக்கின்றனர். குறிப்பாக மாத்திரிகளின் விலை.

வயாக்ரா மாத்திரிகளைக் கொள்முதல் செய்த அரசாங்கம், அதற்காக 143% அதிக விலை செலுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாக அவர்கள் கூறினர். இது ஊழலின் அடையாளம் என்றும் அவர்கள் மேலும் கூறினர்.

ஆக அதிபரின் வயாக்ரா கொள்முதல் ஆணுறுப்பை விரைக்க வைக்கிறதோ இல்லையோ ஊழலின் வீக்கத்தையும், நெட்டிசன்களின் நையாண்டி பெருக்கத்தையும் வெட்ட வெளிச்சமாகக் காட்டுகிறது.

வயாக்ரா
Sex Tourism : பாலியல் சுற்றுலாவிற்கு பிரபலமான 7 நாடுகள் இவைதான்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள். Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com