கொரோனா : ரக்கூன் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதா வைரஸ்? ஆய்வுகள் கூறுவதென்ன?

சீனாவின் வுகான் நகரில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்று சர்வதேச நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
What Are Raccoon Dogs And How Are They Linked To Coronavirus Pandemic?
What Are Raccoon Dogs And How Are They Linked To Coronavirus Pandemic?Twitter

சீனாவின் வுகான் நகரில் உள்ள கடல் உணவுபொருட்கள் சந்தையில் ரக்கூன் நாய்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டதாகவும் அந்த வகையான நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றிதழ்கள் கிடைத்து இருப்பதாகவும் சர்வதேச நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அசோசியேட்டட் பிரஸ் கருத்துப்படி,

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், "தொற்றுநோய் எவ்வாறு தொடங்கியது என்பதற்கு இந்தத் தரவுகள் உறுதியான பதிலை வழங்கவில்லை, என்றாலும் இது போன்ற ஒவ்வொரு தரவுகளும் முக்கியம்" என்று கூறினார்.

ரக்கூன் நாய்கள் என்றால் என்ன?

ரக்கூன் நாய்கள் கேனிட் குடும்பத்தைச் சேர்ந்தவை, இவை பார்ப்பதற்கு, நரியை போன்றிருக்கும். குளிர்காலத்தில் உறங்கும் ஒரே கேனிட்கள் என்று கூறப்படுகிறது.

ஸ்லேட்டின் கூற்றுப்படி, இரண்டு வகையான ரக்கூன் நாய்கள் உள்ளன

--->நைக்டெரீட்ஸ் புரோசியோனாய்டுகள், ரக்கூன் நாய் (வுஹான் சந்தையில் இருந்த இனம்)

---> நைக்டெரியூட்ஸ் விவர்ரினஸ்,ஜப்பானிய ரக்கூன் நாய்

கிட்டதட்ட 16 பவுண்டுகள் எடையுள்ள இந்த விலங்குகள் பெர்ரி போன்ற உணவுகளை விரும்பி உண்ணுகின்றன.

கோடையில் அவை மெல்லியதாகத் தோன்றினாலும், குளிர்காலத்தில் அவற்றின் ரோமங்கள் தடிமனாக மாறும்.

இவை பெரும்பாலும் ஜோடியாக வாழ்வதாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

What Are Raccoon Dogs And How Are They Linked To Coronavirus Pandemic?
சீனா கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து மீளாதது ஏன்? ஜீரோ கோவிட் டு தடுப்பூசிகள்; ஓர் அலசல்

ரக்கூன் நாய்கள் எங்கே காணப்படுகின்றன?

ரக்கூன் நாய்கள் முதலில் கிழக்கு ஆசியாவைச் சேர்ந்தவை. பொதுவாக சீனா, கொரியா மற்றும் ஜப்பான் பகுதிகளில் காணப்படுகின்றன. அங்கு அவை தனுகி என்று அழைக்கப்படுகின்றன.

அவை ஐரோப்பாவிலும் காணப்படுகின்றன. அங்கு முதன்முதலில் 1920 களில் ஃபர் வர்த்தகர்களால் கொண்டு வரப்பட்டன. இன்று, ரக்கூன் நாய்கள் ஐரோப்பாவில் உள்ள உள்ளூர் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுகின்றன.

வுஹானில் ரக்கூன் நாய்கள் ஏன் விற்கப்பட்டன?

பல தசாப்தங்களாக, இந்த விலங்குகள் தங்கள் ரோமங்களுக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த ரோமங்கள் பீல்ட் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. பீல்ட் என்பது குளிர்காலத்தில் நாம் அணியும் சுவட்டர் போன்ற ஒரு பொருள்.

இந்த தயாரிப்புகளில் பெரும் பங்கை அமெரிக்கா வாங்குவதாக ஸ்லேட் தெரிவித்துள்ளது.

இந்த பெரிய தேவையை பூர்த்தி செய்ய, விற்பனையாளர்கள் ரக்கூன் நாய்களை வளர்க்கிறார்கள்

அதே நேரத்தில் அவற்றை சிறிய கூண்டுகளில் கொண்டு செல்கிறார்கள். பெரும்பாலும் மற்ற விலங்குகளுடன் அடுக்கி வைக்கிறார்கள். இது பல்வேறு நோய்கள் பரவுவதற்கு வழிவகுக்கிறது.

What Are Raccoon Dogs And How Are They Linked To Coronavirus Pandemic?
கொரோனா வைரஸ் : சீனாவை நெருங்கும் ஒரு முக்கிய ஆபத்து, அஞ்சும் அரசு - என்ன நடக்கிறது அங்கே?

ரக்கூன் நாய்கள் மற்ற நோய்களுடன் தொடர்புடையதா?

NPRல் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

2003 இல் சீனாவில் ஒரு நேரடி விலங்கு சந்தையில் உணவுக்காக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களில், அந்த நேரத்தில் மனிதர்களில் காணப்பட்ட கொரோனா வைரஸ் இவைகளுக்கும் இருப்பது கண்டறியப்பட்டது

2022 ஆம் ஆண்டு சீனாவில் 18 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த சுமார் 2,000 விலங்குகளின் மாதிரிகளை எடுத்த பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ரக்கூன் நாய்கள் உட்பட்ட விலங்குகளில் 102 வெவ்வேறு வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டன. அவற்றில் 21 வைரஸ் மனிதர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக ரக்கூன் நாய்களில் கண்டறியப்பட்ட வைரஸ், மனிதர்களில் காணப்படும் மரபணு ரீதியாக ஒத்தவை என NPR குறிப்பிடப்பட்டுள்ளது.

ரக்கூன் நாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதா?

ரக்கூன் நாய்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதா? அல்லது மனிதர்களுக்கு இந்த நாய்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் வன விலங்குகளிடம் இருந்து தான் வைரஸ் பரவியிருக்கலாம் என்று தரவுகள் அமைவதாக ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

What Are Raccoon Dogs And How Are They Linked To Coronavirus Pandemic?
சீனா : சிட்டுக்குருவிகளை கொல்ல ஆணையிட்ட மாவோ, ஏன் தெரியுமா? - நடுங்க வைக்கும் வரலாறு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com