சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஜீரோ கோவிட் நடவடிக்கை சீனாவில் பின்பற்றப்பட்டு வந்தாலும், அங்கு கடந்த சில நாட்களாக மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உருமாறியுள்ள BF.7 வைரஸ் வகை இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. பிடிஐயின் படி குஜராத்தில் இருவரும், ஒடிசாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த புதிய வகை BF.7 வைரஸ் BA.5.2.1.7 என்பதன் சுருக்கமாகும்.
இந்த புதியவகை வைரஸ், அமெரிக்கா, ஜப்பான், டென்மார்க் மற்றும் ஒரு சில ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வரும் நிலையில், இதுவரை உருமாறிய வைரஸ் வகைகளில் BF.7 வகை அதிவேகமாக பரவும் தன்மையுடையது என உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
மேலும் இது எளிதில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வைரஸ் எனவும், தொற்று பரவிய உடனே விரைவில் நோயை உண்டாக்கும் தன்மை உடையது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
தடுப்பூசிகள் போட்டிருந்தாலும், இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளது WHO.
சராசரியாக பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து 10 முதல் 18.6 பேர் வரை இந்த வைரஸ் பரவக் கூடிய தன்மையுடையது.
இது மூச்சுக்குழாயை முதலில் தாக்கும் என WHO தெரிவிக்கிறது. தவிர, காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மற்றும் சளி (running nose) ஆகிய அறிகுறிகள் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த புதிய வகை வைரஸ் இதே வேகத்தில் பரவினால் அடுத்த சில மாதங்களில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சீனாவில் அடுத்த மூன்று மாதங்களில் 60 சதவிகிதம் பேர் பாதிக்கப்படுவார்கள் எனவும், உலகளவிலும் கணிசமான பாதிப்பு இருக்கும் எனவும் சீன தொற்றுநோயியல் நிபுணர் எரிக் ஃபீகல்-டிங் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தளம் கூறுகிறது.
சீனாவில் கண்டறியப்பட்டுள்ள 3101 புதிய பாதிப்புகளில் 3049 பாதிப்புகள் உள்ளூரில் கண்டறியப்பட்டவை. கடந்த ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் அறிக்கைகள் கூறுகின்றன.
குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி பரவலுக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டவர்களுக்கு இந்த வகை வைரஸ் பரவுகிறது.
சீனாவில் இதுவரை 386276 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5242 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust