கோவிட் 19 : மீண்டும் காட்டுத் தீ போல பரவும் கொரோனா - என்ன நடக்கிறது சீனாவில்?

கோவிட் அலை முடிந்துவிட்டது என நாம் முன்பே கணித்துவிட்டோம். ஆனால், இது இன்னும் முடியவில்லை சீனாவில் இப்போது ஏற்பட்டிருக்கும் அலை பிற நாடுகளுக்கும் பரவலாம் என்கின்றனர் உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணர்கள்.
Covid 19
Covid 19Istock
Published on

கொரோனா மீண்டும் சீனாவில் காட்டுத் தீ போல பரவி வருகிறது. பத்து லட்சத்திற்கும் மேலான மரணங்கள் அங்கு பதிவாகும் என்ற செய்திகள் குடிசமூகத்திற்கு அச்சம் தருவதாக உள்ளது. உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது? மற்ற நாடுகளுக்கும் கொரோனா மீண்டும் பரவி இருக்கிறதா? 

அப்போது பதிவான மரணங்களும், கொரோனா சமூக முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளும் இன்றும் நம் நினைவில் கொடுங்கனவாகப் பதிவாகி உள்ளது.

கொரோனா மரணங்கள்

Covid 19
Covid 19Pexels

மீண்டும் கொரொனா 

நம் சமகாலத்தின் ஒரு துர்கனவாகவே இருக்கிறது 2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா. அப்போது பதிவான மரணங்களும், கொரோனா சமூக முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளும் இன்றும் நம் நினைவில் கொடுங்கனவாகப் பதிவாகி உள்ளது. இன்னும் அதிலிருந்து நாம் மீளாத இந்தச் சூழலில் கொரோனாவின் அடுத்த அலை என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. 

இப்படியான சூழலில்தான் மீண்டும் சீனாவில் கொரோனா மரணங்கள் பதிவாகத் தொடங்கி உள்ளன.

Covid 19
சீனா: கொரோனா ஊரடங்குக்கு எதிரான போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புகிறதா?- விரிவான தகவல்கள்
Covid 19
சீனா - செளதி அரேபியா 1500 ஆண்டுகால நட்பு: வணிகமும், வரலாறும் - ஒரு விரிவான பார்வை
Covid 19
செளதி அரேபியா சீனா நெருக்கம் அஞ்சும் அமெரிக்கா : என்ன நடக்கிறது அங்கே?

என்ன நடக்கிறது சீனாவில்?

சீனாவில் இப்போது என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்பதை எளிமையான 5 பாயிண்டுகளாக காண்போம்.

  1. சீனாவில் செவ்வாய்க்கிழமை 3101 புதிய கோவிட் தொற்றுகள் பதிவாகி உள்ளன. இதி திங்கட்கிழமை 2722 ஆக இருந்தது. இப்போது சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 386, 276.

  1. அரசாங்க கணக்கின்படி செவ்வாய்க்கிழமை 5 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். திங்கட்கிழமை இரண்டு பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். ஆனால், இது அரசாங்க கணக்குதான். உண்மை கணக்கு அதிகம் இருக்கும் என்கிறார் நிபுணர்கள்.

  1. அது என்ன உண்மை கணக்கு? சீன அரசு கொரோனா மரணங்களைப் பதிவு செய்யும் முறையில் பல சந்தேகங்களை எழுப்புகின்றனர் நிபுணர்கள்.

  2. கோவிட் அலை முடிந்துவிட்டது என நாம் முன்பே கணித்துவிட்டோம். ஆனால், இது இன்னும் முடியவில்லை சீனாவில் இப்போது ஏற்பட்டிருக்கும் அலை பிற நாடுகளுக்கும் பரவலாம் என்கின்றனர் உலக சுகாதார அமைப்பை சேர்ந்த நிபுணர்கள்.

  1. உண்மையில் பீதியூட்டுவதாக இருப்பது சீனாவை சேர்ந்த தொற்று நோயியல் நிபுணரின் ஒரு பதிவுதான். சீனாவின் மொத்த மக்கள் தொகையில்  அறுபது சதவீதம் பேரும், இந்த பூமியில் வாழும் மொத்த மக்கள் தொகையில் பத்து சதவீதம் பேரும் இந்த கொரோனா அலையால் பாதிக்கப்படலாம் என்கிறார் அவர்.

Covid 19
சீனா கொரோனா வைரஸ் பிரச்னையில் இருந்து மீளாதது ஏன்? ஜீரோ கோவிட் டு தடுப்பூசிகள்; ஓர் அலசல்
Covid 19
Airbus : சீனா, அமெரிக்காவிலிருந்து வரும் பாகங்கள் - விமானம் தயாரிக்கப்படுவது எப்படி?

சர்வதேச அளவில் நிலை என்ன?

அமெரிக்காவைச் சேர்ந்த சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகள் நிறுவனம், இதே நிலை தொடர்ந்தால் 2023ஆம் ஆண்டு  மட்டும் சீனாவில் பத்து லட்சம் பேர் கொரோனாவால் இறப்பார்கள் என்கிறது.

இந்த அலை  சீனாவில்  மட்டும் இப்போது இருந்தாலும், சர்வதேச பயணம் இப்போது கோவிட்டுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளதால், இது மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் உள்ளது. 

இன்னும் பெரிய கவலை என்னவென்றால், சீனாவில் அதிக அளவில் நோய்த்தொற்றுகள் பதிவாகி உள்ளன. இது வைரஸின் புதிய திரிபுக்குக் காரணமாக அமையலாம். 

அமெரிக்காவில் இது பண்டிகை காலம். இதன் காரணமாக மக்கள் கூட்டம் கூடுவது அதிகமாகி உள்ளது. இதனால் அங்கு கோவிட் பரவுவதும் அதிகம் ஆகி உள்ளது.

வாஷுங்டன் போஸ்ட் தரும் ஒரு தகவலின் படி, கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கோவிட் எண்ணிக்கை அங்கு அதிகரித்துள்ளது, இப்போது 35000 பேர் அங்கு கொரோனாவுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covid 19
ஓமன் : ஓர் அரபு நாட்டின் அசுர வளர்ச்சி - வியக்க வைக்கும் சுவாரஸ்ய வரலாறு
Covid 19
ரஷ்யா நாட்டில் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் செளதி - இதுதான் காரணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com