முதலில் வந்தது எது கோழியா? முட்டையா? அறிவியல் சொல்லும் விடை என்ன?

ஒரு கோழி முட்டையிலிருந்து வருகிறது என்றால் அப்போது கோழி எப்படி வந்திருக்கும்? இப்படி மாறி மாறி கேள்வி எழுந்திருக்கும். பல தசாப்தங்களாக உலாவிக் கொண்டிருந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக விடை கண்டறியப்பட்டுள்ளது.
What came first - chicken or egg? The age-old puzzle is solved
What came first - chicken or egg? The age-old puzzle is solvedTwitter
Published on

முதலில் வந்தது கோழியா அல்லது முட்டையா? இந்த கேள்வி இளம் வயதினர் மட்டுமல்ல, காலங்காலமாகப் பழகிய அறிஞர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பல தசாப்தங்களாக உலாவிக் கொண்டிருந்த கேள்விக்கு அறிவியல் பூர்வமாக விடை கண்டறியப்பட்டுள்ளது.

ஒரு கோழி முட்டையிலிருந்து வருகிறது என்றால் அப்போது கோழி எப்படி வந்திருக்கும்? இப்படி மாறி மாறி கேள்வி எழுந்திருக்கும்.

கோழி தான் முதலில் வந்தது என்றால்?

கோழி முட்டையின் ஓடு உருவாதற்கு ovocledidin என்ற புரதச்சத்து தேவைப்படுகிறது. இது கோழியிலிருந்து மட்டும்தான் கிடைக்கிறது. எனவே கோழி இந்த புரதச்சத்தை உருவாக்கி கோழி முட்டையை உருவாக்கியிருக்குமோ?

What came first - chicken or egg? The age-old puzzle is solved
ஆண் துணையில்லாமல் இருந்த முதலை முட்டையிட்டது எப்படி? - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

முட்டை தான் முதலில் வந்தது என்றால்?

குரங்கிலிருந்து மனுஷன் வந்தான்’ என்பது போல கொஞ்சம் கொஞ்சமாக டி.என்.ஏ இரட்டிப்பாகி ஒரு புதிய உயிரினம் உருவாகலாம். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஓர் உயிரினத்தின் டி.என்.ஏ மாறுபட்டு புதிய உயிரினம் உருவாகிறது.

எடுத்துக்காட்டாக ஆண் - பெண் இணைந்து ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தை 100 சதவிகிதம் பெற்றோரின் DNA குணாதிசயத்தை பெற்றிருக்குமா? என்றால் இல்லை, 10 சதவீதம் வேறொரு குணாதிசயத்தைப் பெற்றிருக்கலாம்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கோழி போல் உருவம் கொண்டிருந்த ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ மாற்றமடைந்து, இப்போது நமக்குத் தெரிந்த கோழி இனமே உருவாகி இருக்கிறது.

What came first - chicken or egg? The age-old puzzle is solved
ஆண் துணையில்லாமல் இருந்த முதலை முட்டையிட்டது எப்படி? - அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்

கோழி போன்ற உயிரினத்திலிருந்து முழுவதுமான பரிணாம வளர்ச்சி பெற்ற முட்டை வந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் காணும் கோழி வந்துள்ளது. அப்படியானால் முட்டையிலிருந்து தானே கோழி வந்திருக்கிறது?

டார்வின் கொள்கைபடி குரங்கிலிருந்து மனிதன் வந்தான். குரங்கு டி.என்.ஏ.வில் இருந்து வேறுபட்டு, கருவிலிருந்து பிறக்கின்ற குழந்தையை, மனிதக் குழந்தை என்றுதானே அழைக்கிறோம். கருவை முட்டையாகவும், குழந்தையை கோழியாகவும் வைத்துக் கொள்வோம். அப்போது பல டி.என்.ஏ மாற்றங்கள் அடைந்து பிறக்கின்ற கோழியை, முட்டையிலிருந்து வந்தது எனக் கூறுவதுதான் சரியானதாக இருக்கும்.

இனி முதலில் வந்தது எது கோழியா? முட்டையா? என்று கேட்டால் சிரித்து சமாளிக்காமல் முட்டை தான் என்று சொல்லலாம்.

What came first - chicken or egg? The age-old puzzle is solved
"மனித உயிரை பறிக்க 15 நிமிடம் போதும்" - உலகின் மிக ஆபத்தான எறும்பு பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com