செண்ட்ரல் அமெரிக்காவின் கோஸ்டா ரிகா நாட்டில், ஆண் முதலையின் துணையில்லாமல் கர்ப்பம் தரித்து முட்டையிட்டுள்ளது பெண் முதலை ஒன்று. முதலை இனங்களில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செயல்பாட்டை, வர்ஜின் பர்த், எனக் குறிப்பிடுகின்றனர். இதனை அறிவியில் மொழியில், Facultative Parthogenisis என்று அழைக்கின்றனர். அதாவது ஒரு பெண் உயிரினம், ஆணின் துணையில்லாமல் முட்டையிடுவது, அல்லது குழந்தை/குட்டியை ஈன்றெடுப்பது
இதற்கு முன், இந்த பார்த்தொஜெனிசிஸ் செயல்பாடு மீன், பல்லி மற்றும் பாம்புகளில் இருந்ததது குறிப்பிடத்தக்கது. ஆனால், முதலைகளில் இதனை முதன்முறையாக கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள், ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்
ஆராச்சியாளர்கள் இது பற்றி கூறுகையில், அந்த முதலை உயிரியல் பூங்காவில் ஆண் துணையில்லாமல் வைக்கப்பட்டிருந்தது.
சுமார் 16 ஆண்டுகளாக அந்த உயிரியல் பூங்காவில் தான் இருக்கிறது அந்த முதலை. அந்த முதலையின் முட்டைகள் ஒன்றில், முழுதும் உருவான கருவை கண்டறிந்தனர் ஆராய்ச்சியாளர்கள். அந்த கருவானது, இந்த பெண் முதலையோடு 99.9 சதவிகிதம் ஒத்துப்போனதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த ஆராய்ச்சி குறித்த அறிக்கை பயாலஜி லெட்டர்ஸில், ”Discovery of facultative parthenogenesis in a new world crocodile" என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. இதில், அந்த முதலை புதியதொரு இனப்பெருக்க யுக்தியை கையாண்டிருக்கிறது எனவும், இந்த பரிணாம வளர்ச்சியானது டைனோசர்களுடன் தொடர்புடையது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வு, முதலைகள் மற்றும் பறவைகளின் அழிந்துபோன ஆர்கோசோரியன் உறவினர்கள், குறிப்பாக ப்டெரோசாரியா மற்றும் டைனோசவுரியாவில் கண்டறியப்பட்ட இனப்பெருக்க திறன்களைப் பற்றிய ஆழமான நுண்ணறிவுகளை வழங்குகிறது" என்று வர்ஜீனியா டெக்கின் பரிணாம உயிரியலாளர் வாரன் பூத் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவிக்கின்றன.
முதலையின் முட்டையை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆண் துணையில்லாமல் இனப்பெருக்கம் செய்யக்கூடிய தன்மை முதலைகளில் நமக்கு தெரியாமலேயே நடந்துக் கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆண் முதலைகளோடு சேர்ந்து வாழும் பெண் முதலைகள் இனப்பெருக்கம் செய்திருந்த சமயத்தில் கூட இந்த பார்த்தோஜெனிசிஸ் முறை நடந்திருக்கலாம், அது நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust