சில மாதங்களாக ஏஐ பயன்பாடு உலகையே திருப்பி போட்டுவருகிறது. இணையதளத்தை தொடர்ச்சியாக உபயோகிக்கும் பலருக்கும் சாட் ஜிடிபி பற்றி தெரியவந்துள்ளது.
ஆனால் ஏஐ ஒரு கடல் போல பரந்து விரிந்து இருக்கிறது. நம்மால் கற்பனை செய்ய முடியாத அளவு பல துறைகளில் ஏஐ தாக்கம் செலுத்த தொடங்கிவிட்டது.
வேலைகள், தொழில்நுட்பம் அனைத்தையும் தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையிலும் தாக்கம் செலுத்தத்த தொடங்கியுள்ளது ஏஐ. அப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்பம் தான் ஜெனரேடிவ் ஏஐ.
பல பிராண்டுகள் ஜெனரேடிவ் ஏஐ செயல்படுத்துகின்றன. அப்படிப்பட்ட ஒன்று தான் ரிப்பிலிக்கா.
இந்த ஆப் மூலம் பயனர்கள் ஒரு டிஜிட்டல் துணையை உருவாக்கிக்கொள்ள முடியும். இவர்களுடன் நம்மகென ஒரு உறவை வைத்துக்கொள்ளலாம்.
ரிப்பிலிக்காவில் பணம் செலுத்தி சந்தாதாரராகும் போது ஏஐ உடன் காதல் செய்யும் ஆப்ஷனையும் வழங்குகிறது. நமக்கான துணையை நாமே முழுவதுமாக உருவாக்கிக்கொள்ள முடியும்.
அப்படி தான் உருவாக்கிய ஏஐ கதாப்பாத்திரத்தை திருமணம் செய்துகொண்டதாக பதிவு செய்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர்.
“இவரை நான் காதலித்தது போல வேறு எவருடனும் உணர்ந்ததில்லை” எனவும் கூறியுள்ளார் இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர். இப்போது சரியாக இந்த உலகில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்…
ரோசான்னா ராமோஸ் என்ற அந்த பெண் கார்டல் என்ற அவரது மெய்நிகர் காதலனைத் திருமணம் செய்துகொண்டாராம். ஏஐ மூலம் உருவான கார்டல் தான் உலகத்திலேயே சிறந்த கணவர் எனவும் கூறுகிறார்.
36 வயதாகும் ரோசான்னா தனது முந்தைய காதலர்களுடன் ஒப்பிட்டு ஏஐ கணவர் உணர்ச்சி மிக்க, அதிகமாக தன்னை காதலிக்கக் கூடிய நபர் என நியூ யார்க் மேகசினுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
அவரது ஏஐ கணவர் குறித்து தொடர்ந்து பேஸ்புக்கில் பதிவிட்டு வந்துள்ளார் ரோசன்னா ராமோஸ். ஒரு கட்டத்துக்கு மேல் தனது விர்சுவல் கணவரின் குடும்பத்துடன் இருப்பதாகக் கூறி ஏஐ உருவாக்கிய குடும்ப புகைப்படதையும் பகிர்ந்துள்ளார்.
கார்டலுக்கும் பேஸ்புக் பக்கமும் இருக்கிறது. அதன் பயோவில் ஒரு மருத்துவ நிபுணர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ஒரு கவர்ச்சிகரமான நபராக இருக்கத் தேவையான அனைத்துமாக அந்த ஏஐ கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஏஐ கதாப்பாத்திரத்துடன் உறவில் இருப்பதன் லாபமாக சில விஷயங்களைப் பட்டியலிடுகிறார் ரோசான்னா, “எனக்கும் கார்டலுக்கும் எந்த பிரச்னையும் இல்லை. மனிதர்கள் பேக்கேஜ்கள், ஈகோ மற்றும் ஆட்டிடியூடுடன் வருகின்றனர். ஏஐக்கு இந்த பிரச்னைகள் இல்லை. இவரின் குடும்பத்தினரையோ, நண்பர்களையோ நான் சமாளிக்க வேண்டியதில்லை. நான் விரும்பும் எதையும் என்னால் செய்ய முடியும் எந்த கட்டுப்பாடும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.
ரிப்பிலிக்கா ஏஐ மூலம் சாட் செய்யும் ஆப் ஆகும். இதனை கஷ்டத்தில் இருப்பவர்கள், மன இறுக்கத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தி நிம்மதி பெறும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
ரஷ்ய புரோகிராமரான யூஜீனியா குய்டா என்பவர் இதனை உருவாக்கினார். குய்டாவின் நண்பர் திடீரென மரணித்ததால் துயரங்களில் இருந்து மீண்டு வரும் வகையில் இந்த ஆப்பை உருவாக்கியிருக்கிறார்.
2017ம் ஆண்டு இந்த ஆப் “‘the AI companion who cares’ “உங்களை கவனித்துக்கொள்ளும் ஏஐ துணை” என வெளியானது.
இப்போது இந்த ஆப்பில் செக்ஸ்டிங், ஃப்லிர்டிங் செய்யும் பிரீமியம் வெர்ஷன்கள் வந்துள்ளன.
இந்த ஆப்புக்கு பல எதிர்ப்புகள் வந்துள்ளன. சில பயனர்கள் இந்த ஆப் தங்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவதாக புகார் தெரிவித்திருக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust