அமெரிக்க மாகாணங்களின் பெயர்களில் இல்லாத ஒரே ஒரு ஆங்கில எழுத்து என்ன? ஓர் அடடே தகவல்

இந்த கேள்வியை அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அதற்கு சிலர் தங்களின் பதில்களையும் தெரிவித்திருந்தனர்
அமெரிக்க மாகாணங்களின் பெயர்களில் இல்லாத ஒரே ஒரு ஆங்கில எழுத்து என்ன? ஒரு அடடே தகவல்
அமெரிக்க மாகாணங்களின் பெயர்களில் இல்லாத ஒரே ஒரு ஆங்கில எழுத்து என்ன? ஒரு அடடே தகவல்Canva
Published on

உலகில் அதிகமாக பேசப்படும் மொழி ஆங்கிலம். சுமார் 1.452 பில்லியன் மக்கள் இந்த மொழியை பேசுகின்றனர். இதற்கு ஆங்கிலேயர்கள் உலகின் பல நாடுகளில் தங்களின் காலனித்துவ ஆட்சியை செய்தனர் என்பதை ஒரு காரணமாக சொல்லாம்.

ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக சீன மொழியை அதிகமாக உலகில் பேசுகின்றனர்.

அதிகமாக பேசப்படும் மொழியான ஆங்கிலத்தில் இருப்பது என்னவோ 26 எழுத்துக்கள் தான்.

இந்த 26 எழுத்துகள் தான் பல்வேறு வார்த்தைகளை உருவாக்கி தந்துள்ளன. ஆங்கில எழுத்துகள் A-வில் இருந்து Z வரை ஒரே வாக்கியத்தில் பயன்படுத்தி வார்த்தை ஜாலம் எல்லாம் கேள்விப்பட்டிருப்போம்.

ஆனால், உலகின் ஆதிக்க நாடுகளில் ஒன்றின் மாகாணங்களின் பெயர்களில் ஒரே ஒரு ஆங்கில எழுத்து மட்டும் இல்லை!

அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இந்த மாகாணங்களின் பெயர்களில் ஆங்கில எழுத்துகள் பலவும் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் கவனித்திருப்போம்.

ஆனால் இதில் ஒரே ஒரு ஆங்கில எழுத்தை மட்டும் நம்மால் எந்த மாகாணத்தின் பெயரிலும் பார்க்க முடியாது.

இந்த கேள்வியை அமெரிக்க தூதரகத்தின் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அதற்கு சிலர் தங்களின் பதில்களையும் தெரிவித்திருந்தனர். அவர்கள் பெரும்பாலும் சரியான விடையையே தந்திருந்தனர்

அமெரிக்க மாகாணங்களின் பெயர்களில் இல்லாத ஒரே ஒரு ஆங்கில எழுத்து என்ன? ஒரு அடடே தகவல்
America உண்மையில் பணக்கார நாடா?

இந்த கேள்வினை சாதாரணமாக யாரிடம் கேட்டாலும் நாம் கணிக்கும் எழுத்துகள் Z அல்லது X என்று கூறியிருப்போம். அடுத்தபடியாக J என்ற எழுத்தை சொல்லுவோம். ஏனெனில் இவை தான் அரிதாக பெயர்களில் பயன்படுத்தப்படும் ஆங்கில எழுத்துகள்.

இந்த எழுத்துகள் கூட அமெரிக்க மாகாணங்களின் பெயர்களில் உள்ளன - Arizona, Mexico, New Jersey...

ஆனால், Q என்ற எழுத்து மட்டும் எந்த மாகாணத்தின் பெயரிலும் இல்லை. மேலும், B, F, P போன்ற எழுத்துகள் கூட ஓரிரு முறை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு எந்த விதமான காரணமும் முன்வைக்கப்படவில்லை என்றாலும் அமெரிக்க மாகாணத்தின் எந்த பெயரிலும் Q என்ற எழுத்து இல்லை

அமெரிக்க மாகாணங்களின் பெயர்களில் இல்லாத ஒரே ஒரு ஆங்கில எழுத்து என்ன? ஒரு அடடே தகவல்
America: பணம் மனிதனுக்கு மகிழ்ச்சி தருமா? ஆய்வில் வெளியான புதிய தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com