"என்ன தான் காசு பணம் நிறைய இருந்தாலும், அதனால சந்தோஷத்த வாங்கமுடியாது" என்று சினிமா ஹீரோக்கள் பல படங்களில் வசனம் பேசியிருப்பார்கள். நாமும் கூட அதனை பல இடங்களில் பயன்படுத்தியிருப்போம்.
ஆனால், உண்மையில் பணம் என்ற ஒரு விஷயம் மனிதனுக்கு சந்தோஷத்தை தரக்கூடியது தான் என்று பொருளாதார வல்லுநர் ஒருவர் தன் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
தி வாஷிங்க்டன் போஸ்ட்டின் அறிக்கைப்படி, வருமானம் அதிகமாவதற்கு ஏற்றாற்போல், ஒருவரது மகிழ்ச்சியின் அளவும் கூடுகிறது என்று இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.
நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் டேனியல் கான்மேன் மற்றும் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மேத்யூ கில்லிங்ஸ்வொர்த் ஆகியோர் நடத்திய ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது இந்த புதிய கண்டுபிடிப்பு. இந்த ஆராய்ச்சி அமெரிக்கர்களை கொண்டு நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு டேனியல் கான்மேன் நடத்திய இதே ஆய்வில், இந்த சந்தோஷத்தின் அதிகரிப்பு விகிதம் ஒருவரது வருமானம் 75,000 டாலர்களை தொட்டவுடன் நின்றுவிடுவதாக கண்டறியப்பட்டது.
அந்த சமயத்தில் இந்த ஆய்வு குறித்து அறிந்த ஒரு கிரெடிட் கார்ட் நிறுவனத்தின் நிறுவனர், தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு, தன் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 70,000 டாலர்களாக உயர்த்தினார் என்று என்டிடிவி தளம் கூறுகிறது
18 முதல் 65 வயது வரையிலான மக்கள், சுமார் 33,391 பேர் இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். இவர்களது வருமானம் ஆண்டிற்கு 10,000 டாலர்கள்.
ஆராய்ச்சியாளர்கள், ஒரு ஸ்மார்ட்போன் செயலி மூலமாக சீரற்ற (random) இடைவெளிகளில் இவர்களின் உணர்வுகளைப் பற்றி கேட்டறிந்து அதன் பதில்களை பதிவு செய்துகொண்டனர். பதில்கள், வெரி பேட் என்பதில் தொடங்கி வெரி குட் என்பது வரை கணக்கிடப்பட்டது.
சிபிஎஸ் செய்தி தளத்தின் அறிக்கைப்படி, இரண்டு முடிவுகள் இந்த ஆராய்ச்சியில் எட்டப்பட்டது. வருடத்திற்கு 500,000 டாலர்கள் வரை வருமானம் அதிகரித்தால் அது மகிழ்ச்சியை மேம்படுத்துவதாக ஒரு முடிவு இருந்தது. மற்றொரு புறம், 15 சதவிகிதத்தினரின் பதில்கள் சந்தோஷத்திற்கும் பணத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதை குறிப்பதாக இருந்தது.
ஆராய்ச்சியாளர் கான்மேன், பணம் என்பது மகிழ்ச்சிக்கான காரணிகளில் ஒன்றாக தான் இருக்கிறது எனவும், அதுவே முழுக்காரணம் அல்ல எனவும் குறிப்பிட்டிருந்தார்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust