'ஆர்கானிக்' ஸ்ட்ராபெர்ரி பழங்களிலிருந்து ஹெபாடிடிஸ் நோய் பரவுவதாக அமெரிக்கா மற்றும் கனடா உணவு துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவில் ஹெபாடிடிஸ் நோயால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோய் பரவுவதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழத்தைச் சாப்பிட்டு உள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதனால் அந்த ஆர்கானிக் ஸ்ட்ராபெர்ரி பழத்திலிருந்து பரவி இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தீவிரமாக விசாரணையில் அடுத்தகட்ட ஆய்வில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் கனடாவின் பொதுச் சுகாதார நிறுவனம் இறங்கியுள்ளனர்.
ஹெபடைடிஸ் நோய் கல்லீரலை நேரடியாகப் பாதிகக்கூடியது. கல்லீரல் திசுக்களில் அழற்சியை ஏற்படுத்தும், கல்லீரல் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.
இந்த நோய் தொடக்கத்தில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. தீவிர நிலையை எட்டியபிறகே, அதன் அறிகுறிகள் முழுமையாக வெளிப்படும்.
அப்போது, பாதிக்கப்பட்டவர் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியிருப்பார். இந்த நோயினை விரைவில் கண்டறிந்து உரியச் சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்தலாம்.
ஹெபாடிடிஸ் வைரஸ்களில் 5 வகைகள் உள்ளன.
அவை ஏ, பி, சி, டி, இ.
இதில் ஏ மற்றும் இ வகை ஹெபடைடிஸ் வைரஸ்கள் அசுத்தமான நீர் மற்றும் உணவு வழியாகப் பரவுகின்றன.
ஹெபடைடிஸ் பி வைரஸ் பாலியல் உறவு மூலம் ஒருவரிடம் இருந்து ஒருவருக்குப் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவரின் ரத்தத்தை செலுத்துவதன் மூலமும் பரவுகிறது. பாதிக்கப்பட்ட தாயிடம் இருந்து குழந்தைக்குப் பரவும்.
ஹெபடைடிஸ் சி வைரஸ் பாதிக்கப்பட்ட ரத்தத்தின் வழியாகப் பரவுகிறது. ஏற்கனவே ஹெபடைடிஸ் பி வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெபடைடிஸ் டி பாதிப்பு ஏற்படும்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust