சோயா பீன்ஸால் ஆண்மை குறைவு வருமா? ஆண்கள் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன? | Nalam 360

ஆரோக்கியமான உணவுகள் பாலியல் ஆரோக்கியத்துக்கும் உதவும் என்பது நாம் அறிந்ததே. அதே நேரம், ஆரோக்கியமற்ற உணவுகள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
Man Eating
Man EatingCanava

நாம் சாப்பிடும் உணவு இனப்பெருக்கத் திறனில் நேரடியான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிடும் ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றவர்களை ஒப்பிடுகையில் 25% வரை குறைவாக இருக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சில உணவுகள் பாலியல் ஆரோக்கியத்துக்கும் உதவும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஆரோக்கியமற்ற உணவுகள் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

என்னென்ன சாப்பிடக் கூடாது

துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகமுள்ள உணவுகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளும்போது ஆர்.ஓ.எஸ் (ROS - Reactive Oxidative Species) என்ற வேதிப்பொருள் உடலில் உற்பத்தியாகும். அந்த வேதிப்பொருள் விந்தணுக்களின் எண்ணிக்கையை நேரடியாக பாதிக்கும். பொதுவாக, கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளில் இது அதிகமாகக் காணப்படும்.

பிராய்லர்
பிராய்லர்Twitter

பிராய்லர் கோழிக்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்புண்டு. எனவே பிராய்லர் சாப்பிடுவதையும் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளில் இருக்கும் கொழுப்புகள் ஆபத்தானவை.

Man Eating
பீட்சா : இத்தாலிய ஏழைகளின் உணவு - உலகம் முழுவதும் பரவியது எப்படி? | Pizza History

சோயா சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு ஏற்படுமா?

சோயாவில் புரதச்சத்து இருக்கிறது. ஆனால், பதப்படுத்தப்பட்ட சோயாவில் அவை காணப்படாது. பொதுவாக சோயா உணவுகள் பதப்படுத்தப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. அவை நேரடியாக விந்தணுக்களின் உற்பத்தியைக் குறைக்கக் கூடியவை.

Soya Bean
Soya BeanTwitter

என்ன தான் சாப்பிடலாம்?

கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளைக் குறைத்து புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது தாம்பத்ய வாழ்க்கைக்கு நலம் பயக்கும்.

பால் பொருட்கள், பருப்பு வகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பச்சைக் காய்கறிகள், பழங்கள் ஆகியவை புரதச்சத்துகளை அதிகமாக அளிக்கும்.

அசைவ உணவில் மீன், நாட்டுக்கோழி, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றில் புரதச்சத்து அதிகமாகக் காணப்படும்.

Man Eating
காலை உணவுகள் : வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டியவை; சாப்பிட கூடாதவை

உணவு முறையை மாற்றுங்கள்

உட்கொள்ளும் உணவு மட்டுமின்றி உணவு முறையும் பாலியல் ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது. காலையில் அதிகம் சாப்பிடலாம். இரவில் குறைவாகத்தான் சாப்பிட வேண்டும். காலையில் சாப்பிடுவது செரித்துவிடும். ஆனால் இரவில் அதிகம் சாப்பிடும் உணவு உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

உணவு முறை
உணவு முறைTwitter

இரவு அதிக அளவில் சாப்பிடுவதால் ஜீரணத்தில் பிரச்னை ஏற்பட்டு, கெட்ட கொழுப்பு உடலில் சேர ஆரம்பிக்கும். கெட்ட கொழுப்பு சேரும்போது ஆண்களின் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டீரானின் உற்பத்தி குறையும். ஹார்மோன் உற்பத்தி குறைவதால், தாம்பத்தியத்தின் மீது நாட்டமில்லாமல் போகும். அதன் பிறகு விறைப்புத்தன்மை குறைந்து, பாலியல் வாழ்க்கையை பாதிக்கும்.

Man Eating
காதல், காமம், கொஞ்சம் உளவியல் : காம உணர்வை பெருக்கும் உணவுகள் - 11

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com