Schengen Visa : இந்த விசா வைத்திருந்தால் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாம்!

ஷென்கென் விசாவில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்கினால், அது சட்டப்படி குற்றமாகும். இதனால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படலாம், அவரை டீபோர்ட் செய்யலாம், அல்லது எதிர்காலத்தில் அந்த நாட்டுக்கு வர தடை விதிக்கப்படலாம்.
Schengen Visa என்றால் என்ன? இதை வைத்து இந்த நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாமா!
Schengen Visa என்றால் என்ன? இதை வைத்து இந்த நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாமா!Canva

நாம் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டுக்கு செல்ல தேவையான ஆவணங்களில் ஒன்று விசா. அயல்நாட்டுக்கு செல்ல அதுவே நமக்கு நுழைவுச்சான்று.

இந்த விசாக்களில் பல வகைகள் இருக்கிறது. டூரிஸ்ட் விசா, பிசினஸ் விசா, எச் 1 பி விசா, Visa on Arrival உள்ளிட்ட வகைகள்.

இதில் மற்றுமொரு வகையும் உள்ளது. அது தான் ஷென்கென் விசா. இது ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் குறிப்பிட்ட நாடுகளுக்கு பயணிக்க, ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள் பெறக் கூடிய விசாவாகும்.

இந்த ஷென்கென் விசாவை பற்றி விரிவாக தெரிந்துகொள்ளலாம்

ஐரோப்பாவில் மொத்தம் 27 நாடுகள், ஷென்கென் நாடுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. இந்த 27 நாடுகளுக்கும் எல்லைக் கட்டுபாடுகள் கிடையாது. அதே சமயத்தில் இந்த நாடுகளுக்கு பயணிக்க பாஸ்போர்ட் தேவையில்லை.

இந்த ஷென்கென் விசாவிலும், டூரிஸ்ட் விசா, பிசினஸ் விசா போன்ற வகைகள் இருக்கிறது. நாம் இந்த நாடுகளுக்கு என்ன நிமித்தமாக செல்கிறோம் என்பதனை விசா பெறும் அலுவலகத்தில் கூறுகையில், வகைப்படுத்தி விசா வழங்கப்படும்.

இந்த ஷென்கென் விசா ஷார்ட் ஸ்டேக்களை அனுமதிக்கிறது. அதாவது, குறைந்த காலத்திற்கு தங்க அனுமதிக்கிறது. ஷென்கென் விசா இருந்தால், அந்த நாடுகளில் 90 முதல் 180 நாட்கள் வரை நம்மை தங்க அனுமதிக்கிறது

இந்த ஷென்கென் விசாவிற்கு விண்ணப்பிப்பவர்கள், தூதரகத்திற்கு விண்ணப்பம் ஒன்றினை சமர்பிக்கவேண்டும். அதில் எந்த நாட்டிற்கு முதலில் செல்கிறீர்கள் அல்லது அங்கு எவ்வளவு நாட்கள் வசிக்க போகிறீர்கள் என்பதனை குறிப்பிடவேண்டும். ஒரு சில வாரங்களுக்கு முன்னரே விண்ணப்பித்து கொள்வது வசதியாக இருக்கும்.

ஷென்கென் விசாவிற்கு தேவையான ஆவணங்கள்:

  • தகவல்கள் நிரப்பப்பட்ட விசா விண்ணப்பம்

  • பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்

  • பாஸ்போர்ட்

  • சுற்றுலா திட்டம் (itinerary)

  • தங்கும் இடத்திற்கான சான்று

  • பயண காப்பீடு

  • நிதி ஆதாரம் மற்றும்

  • உங்கள் பயணத்தின் நோக்கத்தை விளக்கும் கடிதம்

Schengen Visa என்றால் என்ன? இதை வைத்து இந்த நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாமா!
இந்தியர்களுக்கு விசா இல்லாமலும் அனுமதி அளிக்கும் கஜகஸ்தான் - சாகச பயணத்துக்கு ரெடியா?

ஷென்கென் விசா பெற 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. இலவசமாக வழங்கப்படுகிறது.

6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு, ஒருவருக்கு, ரூ.3,300 மற்றும், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.6,600 கட்டணமாக பெறப்படுகிறது.

இந்த கட்டணம் திருப்பிச் செலுத்த முடியாத கட்டணமாகும், (non-refundable fee). இந்த கட்டணம், அந்த அந்த நாடுகளுக்கு ஏற்றவாறு மற்றும், நாம் விண்ணப்பிக்கும் விசா வகையை பொறுத்து மாறுபடுகிறது.

ஷென்கென் விசாவில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் தங்கினால், அது சட்டப்படி குற்றமாகும். இதனால் அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்படலாம், அவரை டீபோர்ட் செய்யலாம், அல்லது எதிர்காலத்தில் அந்த நாட்டுக்கு வர தடை விதிக்கப்படலாம்.

ஆகையால், உங்கள் பயணத்தை முன்பே சரிவர திட்டமிட்டுக் கொள்ளுங்கள்

Schengen Visa என்றால் என்ன? இதை வைத்து இந்த நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கலாமா!
தாய்லாந்து முதல் ஹாங் காங் வரை: எந்தெந்த நாடுகளில் எல்லாம் கோல்டன் விசா Cheap?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com