உலக வெப்பநிலை உயர்வு காரணமாக பனிப்பாறைகள் மற்றும் பெர்மாஃப்ரோஸ்ட் உருகி, பல ஆண்டுகளாக பனிக்குள் சிக்கியுள்ள பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.
உருகிய பனிக்கட்டியிலிருந்து புத்துயிர் பெற்ற அமீபா வைரஸ்களில் ஒன்றான ஜாம்பி வைரஸை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
ஜாம்பி வைரஸ்கள் பனிக்கட்டிக்குள் சிக்கியதால் பல வருடங்களாக செயலற்ற நிலையில் இருந்து பனி உருகிய பின் உயிர்பெற்று வருகின்றன.
48,500 ஆண்டுகளுக்குப் பிறகு ஜாம்பி வைரஸாக மாறிய செயலற்ற அமீபா வைரஸை ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வுகளின்படி, பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்து உயிர்ப்பிக்கும் உறைந்த வைரஸ்கள் மூலம் சுகாதார அச்சுறுத்தல் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அனைத்து ஜாம்பி வைரஸ்களும் மனிதர்களுக்கு தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இது மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கலாம். இந்த நுண்ணுயிரிகள் உயிரினங்களுக்கு ஆபத்தான நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
ஜோம்பி வைரஸுடன், விஞ்ஞானிகள் சைபீரிய ஓநாய் குடல் மற்றும் மாமத் கம்பளி ஆகியவற்றையும் கண்டுபிடித்துள்ளனர்.
மாமத் கம்பளி என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த யானை இனம்.
1911 ஆம் ஆண்டில் கிழக்கு ஐரோப்பாவில் பிறந்த பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டில் தனது 84-வது வயதில் இறந்து போனார். இறந்து போகும் போது அவருக்கு இலட்சக்கணக்கில் சீடர்கள் இருந்தனர்.
அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பிறகு அவர் பல்வேறு உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே சொன்னதாக பல தகவல்கள் இணையம் முழுவதும் வலம் வருகின்றன.
சுனாமி, அணு ஆயுதப் போர் போன்றவை பாபா வாங்கா கணிப்புகளில் நடந்த நிகழ்வுகள், மேலும் 2023ல் பெரிய உலக நாடுகள் உயிரியல் ஆயுதங்களைப் பயன்படுத்தி சிறிய நாடுகளைத் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கோவிட்டுக்கு அடுத்த வைரஸ் தொற்று நோய் விரைவில் வருமாம். அந்த வைரஸ் ஏற்கனவே தோன்றி சைபீரியாவின் பனியில் உறைந்து மறைந்திருக்கிறது என்றெல்லாம் கணித்திருந்தார்.
இதனால் நெட்டிசன்கள் பலரும் இது அந்த வைரஸாக இருக்குமோ என்று அச்சப்படுகின்றனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செயலற்ற நிலையில் உள்ள வைரஸ்களுக்கு பயன்படுத்தப்படும் சொல் தான் இந்த ஜாம்பி.
ஜாம்பி வைரஸ்கள் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் நோய்களை ஏற்படுத்தக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust