தென் அப்பிரிக்காவின் துறைமுக நகரமான டர்பன். இதனை லிட்டில் இந்தியா என்று அழைக்கின்றனர்.
உலக நாடுகள் பலவற்றிலும் இந்தியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஃபாரினில் இருக்கிறேன் என்று சொன்னாலே துபாய் அல்லது அமெரிக்கா என்று சொல்லிக்கொண்டிருந்த நாட்கள் போய், ஆப்பிரிக்கா, லண்டன், இலங்கை என இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வாழும் நாடுகளை நாம் பட்டியலிடலாம்.
அவற்றில் தென் ஆப்பிரிக்காவின் டர்பனும் ஒன்று. இந்தியாவிற்கு பிறகு அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள கொண்ட நகரம் இந்த டர்பன்.
இங்கு பிழைப்புக்காக குடிபெயர்ந்த இந்தியர்கள், அங்கேயே வாழத் தொடங்கி, இந்தியாவின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் ஒரு பிரதிநிதியாகவே இந்நகரத்தை மாற்றிவிட்டனர் எனலாம். தென் ஆப்பிரிக்காவின் குவாசுலு நடால் மாகாணத்தில் அமைந்திருக்கிறது.
ஆனால், ஆரம்பத்தில் இந்த நகரத்திற்கு இடம்பெயர்ந்த இந்தியர்கள், வலுக்கட்டாயமாக அங்கு அழைத்து செல்லப்பட்டனர் என்பது தான் வரலாறு.
சுமார் 19ஆம் நூற்றாண்டு வாக்கில் இந்தியாவிலிருந்து பலரும் ஒப்பந்த அடிப்படையில் கூலி வேலையாட்களாக அங்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்கள் சர்க்கரை ஆலைகள், நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் ரயில்வேக்களில் வேலை செய்ய பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளால் நியமிக்கப்பட்டவர்கள்
நாள்பட, இங்கேயே இந்தியர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கிக்கொள்ள தொடங்கினர்.
இது இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.
இந்தியாவிலிருந்து முற்றிலுமாக வேறு ஒரு நாட்டுக்கு மாறியவர்களுக்கு பல சவால்கள் இருந்தும் அதனை எதிர்கொண்டு மெல்ல இந்திய சமூகம் டர்பனில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது என்றே சொல்லலாம்.
டர்பனில் இந்தியாவின் பெருமையை உரக்கச் சொல்லும் முக்கிய அம்சம் உணவு. இந்திய மசாலாக்கள், காய்கறிகள் விற்கும் கடைகள் முதல் இந்திய உணவுகள் கிடைக்கும் உணவகங்கள், ஸ்ட்ரீட் ஃபுட் ஷாப்கள் இங்கு ஏராளம்.
இந்திய ஆப்பிரிக்க க்யுசீனின் கலப்பு இங்குள்ள உணவுகளின் சுவையை கூட்டுகிறது.
டர்பனில் இந்திய பண்டிகைகளும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்தியா என்றவுடனே நினைவுக்கு வரும் ஒளிகளின் பண்டிகையான தீப ஒளித்திருநாள் அதிக பிரசித்தி.
இதை தவிர ஈத், கிறிஸ்துமஸ், ஹோலி, நவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகளும் கொண்டாடப்படுகிறது.
இங்குள்ள இந்தியர்கள் அனைவருமே அனைத்து பண்டிகைகளையும் ஒருமித்து கொண்டாடுவது தான் இவற்றின் சிறப்பே.
ஸ்ரீ ஸ்ரீ ராதா ராதாநாதர் கோயில், ஸ்ரீ மாரியம்மன் கோயில் மற்றும் ஸ்ரீ அம்பலவாணர் ஆலயம் ஆகியவையும் உள்ளன. இக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமின்றி ஆண்டு முழுவதும் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளை நடத்துகின்றன.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust