கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சமூக வலைத்தள செயலியான வாட்ஸ் அப் முடங்கியுள்ளது. இதனால் பலரும் டிவிட்டரில் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இது தான் உலகளவில் ஏற்பட்ட மிக நீளமான செயலிழப்பு என NDTV செய்தி தளம் தெரிவித்துள்ளது.
மெடா நிறுவனத்திற்கு சொந்தமான செயலி வாட்ஸ் அப். இது குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர, ஃபோன் கால், வீடியோ கால் பேச இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இணையம் வழியாக இயங்கும் இந்த செயலி, மக்களுக்கு இலவச பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் தளம் முடங்கியுள்ளது.
செயலிழப்புகளை கண்டறியும் தளமான DownDetector, வாட்ஸ் அப் உலகளவில் உள்ள பயனர்களுக்கு வேலை செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப் செயலியை மொபைல் ஃபோன் மட்டுமல்லாமல், வாட்ஸ் அப் வெப் என்ற பெயரில் கணினிகளிலும் பயன்படுத்தலாம். இதுவும் முடங்கியிருந்தது. கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியன்று மெடா நிறுவனத்தின் செயலிகளான வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மற்றும் முக நூல் மூன்றும் முடங்கியது. தற்போது ஏற்பட்ட இந்த வாட்ஸ் அப் முடக்கம் அதற்கு அடுத்ததாக ஏற்படும் முதல் பெரிய பாதிப்பு என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தெரிவிக்கிறது.
தங்களுக்கு மட்டும் தான் வாட்ஸ் அப் செயல்படவில்லையா என்ற சந்தேகத்துடன் பலரும் டிவிட்டரில் இது குறித்து விவாதங்களை எழுப்பினர். இதனால் டிவிட்டரில் #whatsappdown என்ற ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்த பாதிப்பை சரி செய்ய தங்களது தொழில்நுட்ப வல்லுனர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மெடா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், டிவிட்டரில் வாட்ஸ் அப் செயலிழந்ததை மீம்களாக மக்கள் பகிர்ந்து வருகின்றனர்
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust