கடல், மணல், பனி: மூன்றும் ஒரே இடத்தில்! இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம் - எங்கே?

கடந்த சில நாட்களாக இந்த கடலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வலது புறத்தில் வெண்ணிற பனி, நடுவில் மணல் பரப்பு, அடுத்ததாக இடது பக்கம் ஆழமான நீலக் கடல் அமைந்திருக்கிறது.
கடல், மணல், பனி: மூன்றும் ஒரே இடத்தில்!
கடல், மணல், பனி: மூன்றும் ஒரே இடத்தில்! instagram
Published on

இயற்கை எவ்வளவு அழகானதோ, அதே அளவு அதிசயங்களும் மர்மங்களும் நிறைந்தது. மனிதனின் மூளைக்கு எட்டாத அமைப்புகளும் படைப்புகளும் நம்மை இயற்கை என்ற போர்வையில் மறைத்திருக்கிறது.

அப்படி பார்ப்பவர்களை வியக்க வைக்கும் ஓரிடம் தான் ஜப்பானில் அமைந்துள்ள இந்த கடல். இங்கு கடல், மணல், பனி ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் காட்சியளிக்கின்றன. இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை

கடந்த சில நாட்களாக இந்த கடலின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வலது புறத்தில் வெண்ணிற பனி, நடுவில் மணல் பரப்பு, அடுத்ததாக இடது பக்கம் ஆழமான நீலக் கடல் அமைந்திருக்கிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்த கடலின் புகைப்படத்தை ஹிசா என்ற ஜப்பானிய புகைப்பட கலைஞர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்திருந்தார்.

இந்த புகைப்படத்தை பார்த்து வியந்த பலரும், ஜப்பானில் இந்த கடல் எங்கு அமைந்திருக்கிறது என்று தேடி வந்தனர். ரெட் இட் என்ற சமூக வலைத்தள பக்கத்திலும் இந்த புகைப்படம் பகிரபட்டது.

கடல், மணல், பனி: மூன்றும் ஒரே இடத்தில்!
”இது வேற்றுகிரகம் இல்லை” இரவில் ஒளிரும் கடற்கரை - எங்கு இருக்கிறது? அறிவியல் காரணமென்ன?

அப்போது ரெட் இட் பயனர் ஒருவர், இந்த கடல் அமைந்திருக்கும் இடத்தை பற்றி பகிர்ந்திருந்தார். மேற்கு ஜப்பானில் உள்ள San'in Kaigan UNESCO குளோபல் ஜியோபார்க் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த அதிசயக் கடல்.

2008 ஆம் ஆண்டு இந்த இடம் ஜப்பானிய ஜியோபார்க்காக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2010ஆம் ஆண்டு இதை யுனெஸ்கோவின் குளோபல் ஜியோபார்க் என்று அறிவிக்கப்பட்டது.

கியோட்டோவின் கிழக்கு கியோகாமிசாகி கேப் முதல் டோட்டோரியின் மேற்கு ஹகுடோ கைகன் கடற்கரை வரை நீள்கிறது இந்த கடல். இங்கு ரியா வகை கடற்கரைகள், மணல் குன்றுகள், மணல் கட்டிகள், எரிமலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் போன்ற புவியியல் அம்சங்கள் அமைந்துள்ளன.

இந்த பன்முகத்தன்மையின் காரணமாக, ஜியோபார்க்கில் சூடோலிசிமாச்சியான் ஆர்னட்டம், ரானுகுலஸ் நிப்போனிகஸ் மற்றும் சிகோனியா பாய்சியானா போன்ற அரிய வகை தாவரங்களும் இங்கு உள்ளன

இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து, இன்னும் சில இடங்களிலும் இது போன்ற கடல்கள் அமைந்துள்ளதாக இணையவாசிகள் தெரிவித்தனர்.

மாசசூட்டஸ் பகுதியில் அமைந்துள்ள சத்தம் லைதவுஸ் பீச்சிலும் இப்படி கடல், மணல், பனி என மூன்றும் ஒரே இடத்தில் பார்க்கமுடியும்.

இந்த ஜப்பான் கடற்கரையின் புகைப்படம் பகிரப்பட்டதிலிருந்து 19ஆயிரம் லைக்குகள் பெற்றுள்ளது. பலரும், ஜப்பானுக்கு அவர்கள் அடுத்த முறை செல்லும்போது இந்த இடத்தை சென்று பார்க்கவேண்டும் என ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடல், மணல், பனி: மூன்றும் ஒரே இடத்தில்!
அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com