Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகைசுற்றும் புவனிதரன் யார்?

வாழ்வில் அவ்வப்போது கிடைக்க வேண்டிய பரவசங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கான திருப்தியும் நிம்மதியும் முக்கியம்.
Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகை சுற்றும் புவனிதரன் யார்?
Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகை சுற்றும் புவனிதரன் யார்?Instagram @tamiltrekker
Published on

உலகிலேயே போதையான விஷயம் எது என்று கேட்டால் ஆங்கில வெப் சீரிஸ்களில் கேள்விப்பட்ட விதவிதமான ட்ரக்களின் பெயரைச் சொன்னீர்கள் என்றால் அது மிகவும் தவறு.

உண்மையில் பயணங்களைப் போல போதை ஏற்றுவது எதுவுமில்லை. போதை என்பதையும் தாண்டி பயணங்கள் நம் மனதுக்கு மாறி மாறித் தரும் கிளர்ச்சியும் அமைதியும் வரையறுக்க முடியாதவை.

வாழ்வில் அவ்வப்போது கிடைக்க வேண்டிய பரவசங்கள் எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கான திருப்தியும் நிம்மதியும் முக்கியம். இவை அனைத்தையும் பெறுவதற்கான வழி பயணங்கள் மட்டுமே. அதனால் தான் வெறும் 9ம் வகுப்பு மட்டுமே படித்திருக்கும் புவனி தரன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.

தமிழ் ட்ரெக்கர் என்று கூறினால் அவருக்கு அறிமுகமே தேவையில்லை.

புவனிதரன் பயணங்கள் மீது அளவில்லாத காதல் கொண்டவர்.

ஆப்பிரிக்காவின் பழங்குடி கிராமங்களுக்கு பதைபதைக்க வைக்கும் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

உலகில் இன்றும் இருக்கும் கொடூரமான பழங்குடி மக்களாக அறியப்படும் ஆப்ரிக்காவின் தான்சானியா நாட்டில் உள்ள புதர் மனிதர்களை சந்தித்து அவர்களுடன் பொழுதைக் கழித்துள்ளார்.

ஹசாப்பே பழங்குடி மக்களுடன் அம்பு எய்தி குரங்கு வேட்டைக்குச் சென்றுள்ளார்.

கென்யாவின் ஆபத்தான மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், சிங்கங்கள் வாழும் ஆபத்தான் காடுகளுக்கும் சென்றிருக்கிறார்.

பழங்குடி மக்களுடன் நடுக்காட்டுக்கு சென்று கழுதைப்புலிக்கு உணவளிக்கும் வீடியோவைப் பார்க்கும் போது பார்பவர்களுக்கும் திக் திக் என நெஞ்சு அடித்துக்கொள்ளும்.

சோமாலியா, சிரியா போன்ற போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளைப் பற்றிய வீடியோக்கள் நம்மைக் கண் கலங்க வைக்கும்.

ஆப்கானிஸ்தான் சென்று தாலிபான்களுடன் தேநீர் பருகி அவர்களின் மற்றொரு முகத்தை தமிழ் மக்களுக்கு காட்டியிருக்கிறார்.

ஆபத்தான நாடுகளுக்கு எப்போதுமே காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்புடன் தான் செல்கிறார் புவனி தரன் என்றாலும் அந்த பாதுகாப்பு அதிகாரிகளே பதட்டத்துடன் நுழையும் பகுதிகளையும் நமக்கு சுற்றிக்காட்டியிருக்கிறார்.

இந்தியாவிலேயே வேறு யாரும் செய்திராத சாகச பயணங்களை மேற்கொண்டுள்ளார் தமிழ் ட்ரெக்கர். இது எல்லாம் எப்படித் தொடங்கியது?

புவனிதரன் ஒரு தஞ்சாவூர்காரர்

இயல்பாகவே பயணங்களை விரும்பிய புவனிதரன், தான் முதன்முதலாக வாங்கிய ராயல் என்ஃபில்ட் பைக்கில் ஊட்டி, கல்லணை என வழக்கமான சிறுசிறு பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

அந்த பை ஒன்றரை ஆண்டுகளில் திருடு போகவே அவரால் பயணங்கள் மேற்கொள்ள முடியாமல் போனது. மாறாக அவர் உள்ளிருந்த பயணம் மீதான ஆர்வம் பல மடங்காக பெருகியது.

கவுச் சர்ஃபிங்க் என்ற பயணிகளுக்கான தங்குமிடம் வழங்கும் இணையதளத்தில் இணைந்து தஞ்சாவூர் வரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு தங்குமிடம் அளித்து உதவியிருக்கிறார்.

Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகை சுற்றும் புவனிதரன் யார்?
இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது: உலகிலேயே மகிழ்ச்சியான ஊரின் கதை!

அப்படி உதவியதன் மூலம் பயணம் செய்வது குறித்து பல விஷயங்களைத் தெரிந்துகொண்டவர், குறைந்த செலவில் பயணம் செய்யவும் கற்றுக்கொண்டார். அதனை யூடியூபில் அப்லோட் செய்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்பதும் அவருக்கு தெரிந்து இருந்தது.

இப்படியாக அவர் செய்த முதல் பயணம் தஞ்சாவூர் டு மணாலி. வெறும் 7 நாட்கள் பயணமாக திட்டமிட்டு மேற்கொண்ட இந்த பயணத்தை 60 நாட்களுக்கு பிறகு தான் முடித்தார்.

அந்த நாட்களில் ஜெய்பூர், டெல்லி என பல இடங்களை சுற்றிப்பார்த்திருக்கிறார்.

மணாலியில் அவருக்கும் தங்கும் செலவு வெறும் 230 ரூபாய் தான் ஆகியிருக்கிறது. வேடிக்கையான விஷயம் என்னவென்றால் இப்போது உலகை சுற்றும் இந்த வாலிபருக்கு மணாலி பனியில் ஷூ அணிவது கட்டாயம் என்பது கூட அப்போது தெரியவில்லை. செருப்பு அணிந்து சென்றவர் அங்கே தான் ஷூ வாங்கியிருக்கிறார்.

ஜெய்பூரில் இருந்து திரும்பு வர பணம் இல்லாததால் லிஃப்ட் கேட்டே வந்திருக்கிறார்.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையை ஆண்டில் ஒரு முறை நம்மால் கடக்க முடியும். அது குருத்வாரா கோவிலுக்கு செல்வதற்காக... அந்த நாளில் பாகிஸ்தான் சென்று அங்கு இந்தியர்களை வரவேற்கும் பாகிஸ்தானிகளைப் பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.

பாகிஸ்தான் தான் அவரது முதல் சர்வதேச பயணம். அடுத்ததாக மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பயணித்தவர் 28 நாட்கள் பயணச் செலவு உள்பட அனைத்திற்கும் 54,000 ரூபாய் தான் செலவுச் செய்திருக்கிறார்.

ஆப்ரிக்கா ஒரு அதிசய கண்டம்

ஆப்ரிக்காவிலுள்ள கென்யா நாட்டுக்கு இந்தியர்கள் பயணிக்க முடியும் என அறிந்தவர் ஒரு மாத பயணத்துக்கு திட்டமிட்டிருக்கிறார்.

ஆனால் கென்யாவைத் தாண்டி, உகாண்டா, எத்தியோப்பியா, துபாய், உஸ்பெகிஸ்தான், தான்சானியா, எகிப்து ஆகிய நாடுகளுக்குப் பயணித்து 8 மாதங்கள் 20 நாட்கள் ஆப்ரிக்காவில் செலவிட்டுள்ளார்.

ஆப்ரிக்காவின் மசாய் மாரா மக்கள் மாட்டின் கழுத்தில் அம்பால் அடித்து அதன் ரத்தத்தைப் பருக கொடுத்த போது குடித்து விட்டு பால் போல இருப்பதாக கூறியது எல்லாம் வாழ்வில் மறக்க முடியாத தருணம் என்கிறார்.

Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகை சுற்றும் புவனிதரன் யார்?
Travel : வீட்டை விற்று கப்பலிலேயே வாழும் வயதான தம்பதி - எப்படி சாத்தியம்?

இன்றும் பண்டமாற்று முறையை பயன்படுத்தும் பழங்குடி மக்களுடன் கழித்த நாட்கள் தான் தனது வாழ்க்கையை மாற்றியது எனக் கூறியிருக்கிறார் புவனி தரன்.

புவனி தரனின் யூடியூப் சேனல் மற்ற ட்ராவல் சேனல்களுடன் முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.

அதிலிருந்து வரும் வருமானத்தின் பெரும்பகுதியை பயணங்களுக்கே மீண்டும் செலவு செய்கிறார்.

Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகை சுற்றும் புவனிதரன் யார்?
Travel: சஹாரா முதல் தார் வரை - உலகின் மிக அழகான பாலைவனங்கள்

ரஷ்யாவிலிருக்கும் உலகிலேயே குளிர்சியான பகுதிக்கு செல்வது தான் அவரது அடுத்த இலக்காம்.

பயணம் செய்ய விரும்பும் இளைஞர்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியமான அறிவுரை, பயணம் செய்யும் முன் உங்கள் கம்ஃபோர்ட் சோனை விட்டு வெளியே வாருங்கள் என்பது தான்.

உண்மையில் பயணம் செய்வதைத் தவிர மனதுக்கு கம்ஃபோர்ட் சோன் எதுவும் இல்லை என்பது புவனி தரனின் வீடியோக்களைப் பார்க்கும்போது தெரிகிறது.

Tamil Trekker: ஆப்ரிக்காவில் பபூன் வேட்டை; தாலிபான்களுடன் டீ- உலகை சுற்றும் புவனிதரன் யார்?
Travel: புலிகட் ஏரி டு தலகோனா நீர்வீழ்ச்சி - சென்னையை சுற்றியுள்ள 5 வீக்-எண்ட் ஸ்பாட்ஸ்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com