கடந்த 1582ஆம் வருடத்தின் நாள்காட்டியில், அக்டோபர் மாதத்தில் 10 நாட்களை காணவில்லை. இந்த விஷயம் அனைவரையும் குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
உலகெங்கிலும் விசித்திரமான விஷயங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டு வருகிறது. இது சமூக வலைத்தளங்களில் பரவி, அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. அப்படி தற்போது இணையவாசிகளை கவர்ந்துள்ள விஷயம், சற்று குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
1582 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் வெறும் 21 நாட்களே இருப்பது நெட்டிசன்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
எதேர்ச்சியாக ஃபேஸ்புக்கில் ஒருவர் இது பற்றிய பதிவு ஒன்றை வெளியிட அது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என அனைத்து தளங்களிலும் பரவ தொடங்கியது.
“நீங்கள் உங்கள் காலண்டரில் சென்று 1582ஆம் வருடத்திற்கு பின்னோக்கி சென்றால், அதில் 10 நாட்கள் இடம்பெற்றிருக்காது.” என்று அந்த பதிவு கூறுகிறது. அக்டோபர் 4 ஆம் தேதிக்கு பிறகு, 15 ஆம் தேதி தான் அந்த நாள்காட்டியில் தோன்றுகிறது.
இதை பார்த்தவுடன், முதலில், தொழில்நுட்ப கோளாறு என்று நாம் யோசித்தாலும், உண்மையிலேயே அந்த வருடத்தில் அக்டோபர் மாதத்தில் 10 நாட்களை காணவில்லை. இதற்கு என்ன காரணம் என இணையத்தில் பலரும் விவாதித்து வரும் நிலையில், நீல் டைசன் என்பவர் இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறார்.
அதாவது 1582ஆம் வருடத்தில் ஜூலியன் காலண்டரிலிருந்து மக்கள் க்ரிகேரியன் காலண்டர் முறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் Leap Yearன் காரணமாக 10 நாட்கள் அதிகரித்துள்ளது.
அதிகரித்த 10 நாட்களை சமன் செய்ய அக்டோபர் மாதத்தில் பத்து நாட்கள் நீக்கப்பட்டதாகவும் ப்ரிட்டானிக்கா தளம் தெரிவிக்கிறது. இந்த மாற்றத்தை கொண்டுவந்தது போப் கிரிகெரி. பத்து நாட்கள் நீக்கப்படும் நிலையில், எந்த ஒரு கிறிஸ்துவ பண்டிகை நாளும் இதில் வந்துவிடக் கூடாது என்பதற்காக அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த காலண்டர் மாற்றத்தை இத்தாலி, போர்சுகல், போலந்து, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே முதலில் மேற்கொண்டன. பின்னர் 1752ல் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் 11 நாட்களையும், ஜப்பான் 1872ல் 12 நாட்களையும் குறைத்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust