மனுஷங்க - 1: விபத்தில் காதலி, இமைபோல் காக்கும் காதலன் | கரூர் தினேஷ் - கண்மணி காதல் கதை

பத்து நிமிடம் பேசினால் அம்பது முறையாவது கண்மணியின் பெயரை தவறாமல் உச்சரித்து விடுகிறார் தினேஷ்குமார்.கரூர் மாவட்டம் வெள்ளாலபட்டி சேர்ந்த தினேஷ், அவரது காதலியான கண்மணியின் சிகிச்சைக்காக போராடி வருகிறார்
கரூர் தினேஷ் - கண்மணி

கரூர் தினேஷ் - கண்மணி

Newssense

(இந்த நவயுக காலத்தில் உலகத்தின் அனைத்து மூலைகளில் நடக்கும் விஷயங்களும் நமக்கு சுலபமாக கிடைத்துவிடுகிறது. ஆனால், நம் பக்கத்துவீட்டில், நம் தெருவில் இருக்கும் சக மனிதர்களின் கதைகளை தவிர… அப்படியான கதைகளை உங்களிடம் வந்து சேர்க்கும் சிறு முயற்சி இது. 10 பாகங்களாக வர இருக்கும் இந்த தொடரின் முதல் பகுதி இங்கே)

சிறுவயதிலேயே அம்மாவை இழந்த கண்மணிக்கு அப்பாவின் ஆதரவும் கிடையாது. ஒரே தங்கை காயத்ரியோடு தன் பாட்டியின் அரவணைப்பின் வளர்ந்து இளங்கலை விலங்கியல் முடித்த கண்மணிக்கு வாழ்க்கையை குறித்த நிறைய கனவுகள், தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விரைவில் தீர்வு கிடைக்கும் என நிறைய கனவுகளோடு வாழ்க்கையை கடக்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த கண்மணிக்கு அந்த நாள் அப்படி விடிந்திருக்கவே கூடாது.

வீட்டில் கழிவறை வசதி இல்லாததால் வீட்டை வெளியே வந்த கண்மணி சாலையில் தடுமாறி விழ,அதன் பிறகு இன்று வரை பேச்சு வரவில்லை ,சரி வர நடக்கவும் முடியவில்லை கண்மணிக்கு,பாட்டியும் சமீபத்தில் இறந்துபோக இருபத்தி ஒரு வயதான கண்மணிக்கு இப்போது எல்லாமுமாக இருக்கிறார் அவரது காதலன் தினேஷ் குமார்.

கரூர் தினேஷ் - கண்மணி

கரூர் தினேஷ் - கண்மணி

Newssense

கடந்து போகா காதல்

“எல்லா ஆஸ்பத்திரிக்கும் போயிட்டு வந்துட்டேன், எந்த ஆஸ்பத்திரிலயும் என்ன பிரச்சனைன்னே தெரியல்லன்னு கை விரிச்சுட்டாங்க. எனக்கு சொத்து சுகம் எதும் வேணாம் சார் , என் கண்மணி எனக்கு திரும்ப கிடைச்சுட்டாலே போதும். இதுக்கு மேல எனக்கும் வைத்தியத்துக்கு போயி பார்க்க சக்தி இல்ல, இப்படியே கூட எங்க வாழ்க்கைய கடைசி வரைக்கும் கொண்டு போயிட்டா போதும்னு மனநிலைக்கு வந்துட்டேன் சார்”

பத்து நிமிடம் பேசினால் அம்பது முறையாவது கண்மணியின் பெயரை தவறாமல் உச்சரித்து விடுகிறார் தினேஷ்குமார்.

கரூர் மாவட்டம் வெள்ளாலபட்டி சேர்ந்த தினேஷ், அவரது காதலியான கண்மணியின் சிகிச்சைக்காக போராடி வருகிறார்.

கரூர் தினேஷ் - கண்மணி

சித்துவிடம் திருமணமான விஷயத்தை சுந்தரி மறைத்தது ஏன்?

ஆறு வருட காதல்

ஆறு வருட காதல்

Newssense

ஆறு வருட காதல்

“கண்மணியும் நானும் ஆறு வருஷமா காதலிக்கிறோம், கண்மணி ஆறாவது படிக்கும்போதே அம்மா இறந்துட்டாங்க. அப்பாவும் தன்னோட முதல் மனைவி கூட போயிட்டாங்க. நானும் கண்மணியும் இதே ஊரு தான் . சின்ன வயசுல இருந்தே கண்மணிய எனக்கு நல்லா தெரியும் , முதல் முதலா கண்மணிய லவ் பண்றேன்னு போயி சொன்னப்போ கண்மணி ஏத்துக்கவே இல்ல. ஏற்கனவே அம்மா அப்பா இல்லாத பொண்ணு, பாட்டிக்கு ஏதும் கெட்ட பேரு வந்துரும் இதெல்லாம் எனக்கு வேணாம்னு சொன்னாங்க, ஆனாலும் ஒரு கட்டத்துல என்ன புரிஞ்சுக்கிட்டாங்க. எங்க நண்பர்களுமே நீதாண்டா கண்மணிக்கு சரியான ஜோடின்னு சொல்லுவாங்க,” என்கிறார்

மேலும் அவர், “என்னோட அப்பா தூய்மைப்பணியாளரா இருக்காங்க, எனக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க.எங்க வீட்டுக்குமே எங்க காதல் தெரிஞ்சது, முதல்ல படிப்பை முடிச்சு நல்ல வேலைக்கு போடா கல்யாணம் பண்ணிக்கலாம்னு பச்சைக்கொடி காட்டுனாங்க, ஆனால் எல்லாமே தலைகீழா மாறி எங்கள சிதைச்சுருச்சு அந்த ஒரு நாள்.”

கரூர் தினேஷ் - கண்மணி

கரூர் தினேஷ் - கண்மணி

Newssense

“கண்மணி கீழ விழுந்த அப்போ எனக்கு அவுங்க தெருவுல இருந்த ஒரு அண்ணன் தான் தகவல் சொன்னாரு. போயி பார்த்தா மோட்டு வாய் எங்கேயே வச்சுட்டு தனியா சிரிச்சுக்கிட்டு இருந்தாங்க கண்மணி. எல்லாரும் கண்மணிக்கி பேய் பிடிச்சுருச்சுன்னு தான் சொன்னாங்க, அப்றம் பக்கத்துல இருந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டி போனேன். குளுக்கோஸ் போட்டு ரெண்டு ஊசி போட்டு அரை மணி நேரம் கழிச்சு கூட்டி போக சொன்னாங்க. ஆனா கண்மணியால நடக்கவே முடியல. அப்போவே ஆஸ்பத்திரிலயே உடைஞ்சுட்டேன்,அடுத்த நாள் கரூர் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு நரம்பியல் துறைல செக் பண்ணாங்க, நரம்புல எந்த பிரச்சனையும் இல்லனு சில டெஸ்ட் எல்லாம் எடுக்க சொன்னாங்க. அப்றம் உளவியல் ஆலோசகர் கிட்ட கூட்டி போக சொன்னாங்க. என் சக்திக்கு மீறி தனியார் ஆஸ்பத்திரிக்கும் கூட்டிப்போனேன் .எல்லாமே டெஸ்ட்டும் எடுத்தாச்சு, எல்லா டாக்டரையும் பார்த்துட்டேன்,” என தினேஷ் சொல்ல சொல்ல அவரி அறியாமலேயே கண்ணீரி கொட்ட ஆரம்பிக்கிறது .

கரூர் தினேஷ் - கண்மணி

அபுதாபி : வணிகத்தில் கொடிகட்டி பறக்கும் இந்திய வம்சாவளி பெண் ஆலியாவின் வெற்றி கதை

கரூர் தினேஷ் - கண்மணி

கரூர் தினேஷ் - கண்மணி

Newssense

என்ன ஆனாலும் பரவாயில்லை

எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை கண்மணி எப்படியாவது பழைய நிலைக்கு வரணும் இது மட்டும் தான் என் மனசுல இருக்க ஒரே யோசனையா இருக்கு என்கிறார் பெரும் நம்பிக்கையுடன்.

“பாட்டி இறந்த பிறகு கண்மணியும் அவுங்க தங்க்சச்சி காயத்ரியும் அவுங்க வீட்டுல தான் இருக்காங்க, என்னோட அம்மாவும் என்னய கல்யாணம் பண்ணிக்க சொல்றாங்க, ஆனா இப்போ நான் கல்யாணம் பண்ணி கூட்டி வந்தா எங்க வீட்டுல இருக்கிறதுக்கு அவ்ளோ இட வசதி இல்ல, ஒரு வீட்டை கட்டிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன், நான் எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சுருக்கேன், எனக்கான பொருள் தேவையை தாண்டி கண்மணியோட மருத்துவத்துகாக வேலை தேடி போக வேண்டிய சூழல்ல இருக்கேன்,” என்கிறார் அவர்.

ஒவ்வொரு ஆஸ்பத்ரிலையும் ஒவ்வொரு மாதிரி சொல்றாங்க. ஆனா கடைசில என்ன காரணம் தெரியலைன்னு சொல்லிடுறாங்க, காது மூக்கு தொண்டை ஆஸ்பத்திரி போனேன், தண்டு வடத்துல பிரச்சனை இருக்கும் அங்க போயி பாருங்கன்னு சொன்னாங்க, பேச்சு பயிற்சி குடுக்குற டாக்டர் கிட்ட போங்கன்னு சொன்னாங்க. , மனநல மருத்துவர பாருங்கன்னு சொன்னாங்க. இப்படி எல்லா டாக்ர்டரையும் பார்த்துட்டேன், இப்போ கடைசியா என்ன சொல்றாங்கன்னா, வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிலையோ அல்லது பெங்களூர் மாதிரி பெரு நகரத்துல உள்ள ஆஸ்பத்திரிக்கு கூட்டி போக சொல்றாங்க. அங்க எல்லாம் கூட்டி போனா எவ்வளவு பொருட் செலவு ஆகும்ணு தெரில.. இந்த பிரச்சனைக்கும் முன்னால இங்க பக்கத்துல ஒரு கொசு வலை செய்ற கம்பெனில வேலைக்கு போயிட்டு இருந்தேன். இப்போ முழு நேரமும் கண்மணி கூடதான் இருக்கேன், பகல் முழுதும் கண்மணி கூட இருப்பேன். ராத்திரி எங்க வீட்டுக்கு போயிருவேன்.

தங்கையுடன் கண்மணி

தங்கையுடன் கண்மணி

Newssense

வாழ்க்கை மீதான பெரும் நம்பிக்கை

எங்களுக்குன்னு ஒரு வீடு , எனக்குன்னு ஒரு வேலை, கண்மணி தங்கச்சி காயத்ரிய கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டு நான் கல்யாணம் பண்ணனும். இந்த வாழ்க்கை மீது இன்னமும் எனக்கு நம்பிக்கை இருக்கு , என் கண்மணி திரும்ப கிடைச்சுருவாங்கன்னு உள் மனசும் சொல்லுது,அப்படி எல்லாம் நடந்தா இந்த உலகத்துல என்ன விட ஒரு சந்தோசமான மனுஷன நீங்க பார்க்கவே முடியாது .

கரூர் தினேஷ் - கண்மணி

கரூர் தினேஷ் - கண்மணி

Newssense

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com