அரியவகை பனிச்சிறுத்தையைக் காண 165 கி.மீ கால்நடை பயணம் - சாதித்த பெண் புகைப்பட கலைஞர்

இந்த பனிச் சிறுத்தைகளை 'மலைகளின் பேய்' என அழைக்கின்றனர். இதுவரை வெகு சில மலையேற்றம் செய்பவர்களும் புகைப்படக்காரர்களும் மட்டுமே இதனைப் பார்த்திருக்கின்றனர். இதற்காக கரடுமுரடான இமயமலைப் பாதைகளில் 165 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார் இந்த பெண். புகைப்படங்கள் உள்ளே...
அரியவகை பனிச்சிறுத்தையைக் காண 165 கி.மீ கால்நடை பயணம் - சாதித்த பெண் புகைப்பட கலைஞர்
அரியவகை பனிச்சிறுத்தையைக் காண 165 கி.மீ கால்நடை பயணம் - சாதித்த பெண் புகைப்பட கலைஞர்Kittiya Pawlowski
Published on

மிக மிக அரியஉயிரினமான பனிச் சிறுத்தையை புகைப்படம் எடுக்க நேபாள இமயமலைத் தொடர்களில் 165 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார் கித்தியா பௌலோஸ்கி ( Kittiya Pawlowski ) என்ற பெண் வனவிலங்கு புகைப்படக்கலைஞர்.

இந்த பனிச் சிறுத்தைகள் அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் உள்ளன. எனவே இவற்றை பார்ப்பது மிக மிகக் கடினமான ஒன்று. எனினும் மிகுந்த சிரமத்தை எடுத்து இதனைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார் கித்தியா பௌலோஸ்கி.

இந்த பெண் புகைப்படக் கலைஞர் தனது 3 வயதிலிருந்தே புகைப்படங்கள் எடுக்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டுள்ளார்.

2005ம் ஆண்டு முதல் வன விலங்கு புகைப்படத்துறையில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை பல சர்வதேச போட்டிகளை வென்று பல விருதுகளை வாங்கியிருக்கிறார். எனினும் அவரது நீண்ட நாள் ஆசையான பனிச்சிறுத்தைகளை புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு அவருக்கு எளிதாக கிடைக்கவில்லை.

இந்தியா நேபாளம் பூடான் இடையிலான பகுதிகளில் இந்த சிறுத்தைகளை காண முடியும். இவை மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் வசிக்கின்றன. ஒட்டு மொத்தமாக 10,000 பனிச் சிறுத்தைகள் மட்டுமே உலகில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அரியவகை பனிச்சிறுத்தையைக் காண 165 கி.மீ கால்நடை பயணம் - சாதித்த பெண் புகைப்பட கலைஞர்
'இரவில் ஒளிரும் காடு' - மேற்கு தொடர்ச்சி மலையின் அதிசயக் காடு - அறிவியல் சொல்வது என்ன?

இந்த பனிச் சிறுத்தைகளை அடையாளம் காண்பது கடினமான ஒன்று. இவற்றை மலைகளின் பேய் என அழைக்கின்றனர். இதுவரை வெகு சில மலையேற்றம் செய்பவர்களும் புகைப்படக்காரர்களும் மட்டுமே இதனைப் புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.

இதற்காக கரடுமுரடான இமயமலைப் பாதைகளில் 165 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளார் இந்த அமெரிக்கப் பெண். இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள முதல் புகைப்படத்தில் பனிச் சிறுத்தையை எவ்வளவு தூரத்திலிருந்து பார்க்கிறார் என்பதைக் காணலாம்.

அரியவகை பனிச்சிறுத்தையைக் காண 165 கி.மீ கால்நடை பயணம் - சாதித்த பெண் புகைப்பட கலைஞர்
'காட்டுக்குள் கண்ணாமூச்சி' : நிலானை வேட்டையாட பதுங்கும் புலி - என்ன நடந்தது? | வீடியோ

இந்த புகைப்படத்தில் ஏதோ சிறிய கல் இருக்கிறது என்று தான் நினைத்திருக்கிறார். ஆனால் உற்று பார்த்ததில் தான் மலைச் சரிவில் பனிச் சிறுத்தை இருப்பது தெரியவந்துள்ளது.

உடனடியாக தனது டெலி லென்ஸில் (தொலைவில் இருப்பதை புகைப்படம் எடுக்கும் லென்ஸ் வகை) கண்களைப் பறிக்கும் பனிச் சிறுத்தையின் புகைப்படத்தை எடுத்திருக்கிறார்.

அவரது வாழ்க்கையிலேயே மிகவும் சவாலான புகைப்படத்தை எடுத்துள்ளதாக மெச்சித்துள்ளார் பௌலோஸ்கி.

அரியவகை பனிச்சிறுத்தையைக் காண 165 கி.மீ கால்நடை பயணம் - சாதித்த பெண் புகைப்பட கலைஞர்
நாகாலாந்து மலைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது பெரிய புள்ளி சிறுத்தை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com