அழிவின் விளிம்பில் இருக்கும் தீவு நாடு - விஞ்ஞானிகள் சொல்வதென்ன?

1996 ஆம் ஆண்டு தென் பசிபிக் பிராந்திய சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், துவாலுவின் பருவநிலை மாற்றம், குறிப்பாக உயரும் கடல் மட்டங்கள் பற்றி விளக்கினர்.
அழிவின் விளிம்பில் இருக்கும் தீவு நாடு - விஞ்ஞானிகள் சொல்வதென்ன?
அழிவின் விளிம்பில் இருக்கும் தீவு நாடு - விஞ்ஞானிகள் சொல்வதென்ன?Canva

பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு தான் துவாலு. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன.

இது சுமார் 12,000 குடியிருப்பாளர்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. துவாலு உலகின் மிகக் குறைவான வருகை கொண்ட நாடு என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. துவாலு உலகளவில் சிறிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. மேலும் நாடு அதன் சொந்த நாணயத்தைக் கொண்டுள்ளது.

இந்த தீவு நாடு கடல் மட்டத்திலிருந்து 15 அடிக்கு மேல் உயரத்தில் உள்ளது. உலகின் நான்காவது சிறிய தேசமான துவாலு, எதிர்காலத்தில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவுள்ளது.

உயரும் கடல்மட்டத்தாலும், காலநிலை மாற்றத்தாலும் இந்த தீவுகள் படிபடியாக மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சில தசாப்தங்களுக்குள் துவாலு வசிக்கத் தகுதியற்றதாக அல்லது முற்றிலும் மறைந்துவிடும் என கணிக்கப்பட்டுள்ளது.

1996 ஆம் ஆண்டு தென் பசிபிக் பிராந்திய சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஜப்பான் அரசாங்கத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், துவாலுவின் பருவநிலை மாற்றம், குறிப்பாக உயரும் கடல் மட்டங்கள் பற்றி விளக்கினர்.

அழிவின் விளிம்பில் இருக்கும் தீவு நாடு - விஞ்ஞானிகள் சொல்வதென்ன?
பூனை தீவு: ஜப்பானில் பூனைக்கு கோவில்கட்டிய மக்கள் - இந்த இடம் பூனைகளின் உலகமானது எப்படி?

மற்ற சுற்றுச்சூழல் நெருக்கடிகளைப் போலல்லாமல், துவாலுவின் இக்கட்டான நிலை புதைபடிவ எரிபொருட்களின் எரிப்பு, வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுவது, புவி வெப்பமடைதலுக்கு பங்களிப்பது போன்ற உலகளாவிய நடவடிக்கைகளின் விளைவாகும் என்று நம்பப்படுகிறது.

துவாலு தீவுவின் 10,000 குடியிருப்பாளர்களும் உண்மையில் குறிப்பிடத்தக்க சவால்களுடன் போராடுகிறார்கள் என்பது தெளிவாகிறது.

அழிவின் விளிம்பில் இருக்கும் தீவு நாடு - விஞ்ஞானிகள் சொல்வதென்ன?
சென்டினல் தீவு : கால்வைத்த வெளிநபர்கள் உயிருடன் திரும்பியதில்லை - ஒரு திக்திக் பயணம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com