Chat GPT: ”காதல் கடிதம் தீட்டவே” லவ்வரிடம் காதலை சொல்ல ஏ ஐ உதவியை நாடும் இந்திய இளைஞர்கள்

நான்கில் ஒருவர், அதாவது 26 சதவிகிதம் பேர் தங்கள் காதலர்களுக்கு லவ் லெட்டர் எழுத, தங்கள் மனதிற்குள் இருப்பதை வெளிப்படுத்த இந்த ஏ ஐ பாட் வசதியை பயன்படுத்த விருப்பம் தெரிவித்தனர்.
Chat GPT: ”காதல் கடிதம் தீட்டவே” லவ்வரிடம் காதலை சொல்ல ஏ ஐ உதவியை நாடும் இந்திய இளைஞர்கள்
Chat GPT: ”காதல் கடிதம் தீட்டவே” லவ்வரிடம் காதலை சொல்ல ஏ ஐ உதவியை நாடும் இந்திய இளைஞர்கள்twitter
Published on

சுமார் 62 சதவிகித இந்தியர்கள் தங்கள் இணைக்கு காதல் கடிதம் எழுத சாட் ஜிபிடி யின் உதவியை நாடுவதாக புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், McAfee நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், இந்தியர்கள் லவ் லெட்டர் எழுத சாட் ஜிபிடியை தேர்ந்தெடுத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சாட் ஜிபிடி என்பது தற்போது பயன்பாட்டில் இருக்கும் மெய்நிகர் நுண்ணறிவு தொழில்நுட்பமாகும்.

நான்கில் ஒருவர், அதாவது 26 சதவிகிதம் பேர் தங்கள் காதலர்களுக்கு லவ் லெட்டர் எழுத, தங்கள் மனதிற்குள் இருப்பதை வெளிப்படுத்த இந்த ஏ ஐ பாட் வசதியை பயன்படுத்த விருப்பம் தெரிவித்தனர்.

44 சதவிகிதம் பேர் இதனை பயன்படுத்த மறுத்தனர். 31 சதவிகிதம் பேர் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரியாது என்பதை ஒப்புக்கொண்டனர்.

காதலைச் சொல்ல சாட் ஜிபிடியை தேர்ந்தெடுத்தவர்களில் அதிகபட்சமாக ஆண்களே இருந்தனர். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், 62 சதவிகிதம் பேர் இந்தியர்கள்

Chat GPT: ”காதல் கடிதம் தீட்டவே” லவ்வரிடம் காதலை சொல்ல ஏ ஐ உதவியை நாடும் இந்திய இளைஞர்கள்
ChatGPT யை பயன்படுத்தி வழக்குக்கு தீர்ப்பளித்த நீதிபதி - எங்கே?

இதனை தொடர்ந்து McAfee நிறுவனம் ஒரு காதல் கடிதத்தை கொடுத்து, இது மனிதனால் எழுதப்பட்டதா அல்லது இயந்திரம் எழுதிய கடிதமா என்பதை கண்டறியச் சொன்னது. 78 சதவிகித இந்தியர்களால் வித்தியாசத்தை கண்டறிய முடியவில்லை.

ஏன் சாட் ஜிபிடி கடிதம்?

பெரும்பாலானோர் தங்கள் காதலை எழுத்துகளால் வெளிப்படுத்த தயங்குகின்றனர். சாட் ஜிபிடி தொழில்நுட்பம் சரியான வார்த்தை பயன்பாடு மற்றும் கோர்வையை கொடுக்கும் என்று இவர்கள் நம்புகின்றனர்.

இதனை தேர்ந்தெடுக்க மற்றொரு காரணம் நேரமின்மை. தவிர, இது எளிதான மற்றும் வேகமாக வேலையை முடிக்க சிறந்த வழி என்றும் இவர்கள் கருதுகின்றனர்.

ஆனால் 57 சதவிகிதம் பேர், தங்கள் காதலர் கைப்பட எழுதாமல், இயந்திரத்தின் உதவியை நாடியது தெரியவந்தால் அது அவர்களை மனமுடையச் செய்யும் என்பதையும் ஒப்புக்கொண்டனர்

உங்கள் காதலன்/காதலிக்கு எப்படி நீங்கள் காதலை வெளிப்படுத்தவுள்ளீர்கள்?

Chat GPT: ”காதல் கடிதம் தீட்டவே” லவ்வரிடம் காதலை சொல்ல ஏ ஐ உதவியை நாடும் இந்திய இளைஞர்கள்
Chat GPT vs Google Bard: மோதும் AI தொழில்நுட்பம் - இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com