Pizza Hut: 68,000 துண்டுகள், 1,310 சதுரடி- உலகின் மிக பெரிய பீட்ஸாவை தயாரிக்கும் நிறுவனம்!

பீட்சா ஹட் ஊழியர்கள் பலர் இணைந்து, பீட்சா மாவை திரட்டி, அதன் மேல் தாக்காளி சாஸ், சீஸ் போன்ற அடிப்படை சாதனங்களை சேர்த்து வருகின்றனர். சுமார் 68,000 துண்டுகள், 1,310 சதுரடிக்கு இந்த பீட்சா தயாரிக்கப்படு வருகிறது.
Pizza Hut: 68,000 துண்டுகள், 1,310 சதுரடி- உலகின் மிக பெரிய பீட்ஸாவை தயாரிக்கும் நிறுவனம்!
Pizza Hut: 68,000 துண்டுகள், 1,310 சதுரடி- உலகின் மிக பெரிய பீட்ஸாவை தயாரிக்கும் நிறுவனம்!canva
Published on

உலகின் மிகப் பெரிய பீட்சாவை தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கும் முனைப்பில் இருக்கிறது பீட்சா ஹட் நிறுவனம்.

கின்னஸ் சாதனை படைப்பவர்கள் பல வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுக்கின்றனர். தனி மனிதராகவும், சில சமயங்களில் கூட்டு முயற்சியாகவும் கின்னஸ் சாதனைகள் படைக்கப்படுகின்றன.

அந்த வகையில், உலகின் மிகப் பெரிய பீட்சாவை தயாரிக்கிறது பீட்சா ஹட் நிறுவனம். ராய்ட்டர்ஸின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள மாநாட்டு மயத்தில் இந்த பீட்சாவை இவர்கள் தயாரிக்கின்றனர்.

பீட்சா ஹட் ஊழியர்கள் பலர் இணைந்து, பீட்சா மாவை திரட்டி, அதன் மேல் தாக்காளி சாஸ், சீஸ் போன்ற அடிப்படை சாதனங்களை சேர்த்து வருகின்றனர். சுமார் 68,000 துண்டுகள், 1,310 சதுரடிக்கு இந்த பீட்சா தயாரிக்கப்படு வருகிறது.

Pizza Hut: 68,000 துண்டுகள், 1,310 சதுரடி- உலகின் மிக பெரிய பீட்ஸாவை தயாரிக்கும் நிறுவனம்!
Guinness : 60 நொடிகளில் 1,140 கைத்தட்டல்கள் - வியக்க வைத்த இளைஞர் | வீடியோ

இவ்வளவு பெரிய பீட்சாவை தயாரிக்க ஓவன் இல்லை. அதனால், இதனை சமைக்கும் ஒரு தனி சாதனத்தை இவர்கள் பயன்படுத்தவுள்ளனர். அந்த இயந்திரம் பீட்சாவின் மீது முழுவதுமாக நகர்ந்து, வேகவைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பீட்சா என்பதால், இதனை சமைத்து முடிக்க வெகு நேரம் எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பீட்சா ஹட் நிறுவன தலைவர் டேவிட் கிரேவ்ஸ் இது குறித்து கூறுகையில், எந்த வகையிலும் உனவு வீணடிக்கப்படாது என்று உறுதியளித்தார். கின்னஸ் சாதனை படைத்த பின்னர், பீட்சாவையும் உணவுப் பொருட்களையும் அங்குள்ள உணவு வங்கிகளிடம் இவர்கள் ஒப்படைத்து விடுவார்கள்.

Pizza Hut: 68,000 துண்டுகள், 1,310 சதுரடி- உலகின் மிக பெரிய பீட்ஸாவை தயாரிக்கும் நிறுவனம்!
உலகிலேயே மிகச் சிறிய மர ஸ்பூன் - கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்!

“நாங்கள் தான் முதன்முதலில் பீட்சாவை வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்தவர்கள். முதன்முதலில் இணையம் மூலம் ஆர்டர்களை எடுத்துக்கொண்டவர்கள். பல சுவாரஸ்யமான விஷயங்களை நாங்கள் இதுவரை செய்திருக்கிறோம். இதனால் உலகின் மிகப் பெரிய பீட்சாவை தயாரித்து கின்னஸ் சாதனை படைக்கலாம் என்பது சரியான முடிவாக எங்களுக்கு தோன்றியது” என்றார் டேவிட்.

Pizza Hut: 68,000 துண்டுகள், 1,310 சதுரடி- உலகின் மிக பெரிய பீட்ஸாவை தயாரிக்கும் நிறுவனம்!
Guinness: 11 நாட்கள், 13,500 கி.மீ - இடைவிடாது பறந்து கின்னஸ் சாதனை படைத்த பறவை - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com