Facebook: கடனிலிருந்து தப்பிக்க இறந்துவிட்டதாக நாடகம்; வெளியான உண்மை - என்ன நடந்தது?

லீசா மாயாவிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் இந்த முறையும் கொடுக்கப்பட்ட கெடுவுக்குள் லீசா பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை.
Death
Deathcanva
Published on

இந்தோனேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் கடனை திருப்பித் தர முடியாததால் தான் இறந்தது போல நாடகமாடியுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒருவரிடம் இருந்து கடன் வாங்கிவிட்டு, ஒரு வேளை நம்மால் அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழல் ஏற்ப்பட்டால், கடன் கொடுத்தவரிடம் இருந்து தப்பிக்க பல யுக்திகளை கையாளுவோம்.

இங்கும் ஒரு பெண் தான் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால், வித்தியாசமான முறையில் சமாளித்திருக்கிறார்.

லீசா தேவி ப்ரமிதா என்ற அந்த பெண் மாயா குனாவன் என்ற பெண்ணிடம், கடன் பெற்றுள்ளார். இதனை நவம்பர் 20 அன்று லீசா திருப்பிக் கொடுக்க அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், குறிப்பிட்ட தேதிக்கு அவரால் பணத்தை திருப்பிக் கொடுக்க முடியவில்லை.

இதனால் லீசா மாயாவிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டுள்ளார். ஆனால் இந்த முறையும் கொடுக்கப்பட்ட அவகாசத்திற்குள் லீசா பணத்தை திருப்பிக்கொடுக்கவில்லை.

Death
இறந்துவிட்டதாக அடக்கம் செய்த திருடன் - 9 மாதங்களுக்கு பின் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி

இந்நிலையில், கடந்த டிசம்பர் 11 அன்று லீசாவின் ஃபேஸ்புக் பக்கத்தில், லீசாவின் மகள், அவளது தாயார் இறந்த புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாயா, லீசாவின் மகளிடம் இது குறித்து விசாரித்துள்ளார்.

லீசாவின் மகள் பேசியதில் சந்தேகமடைந்த மாயா, மீண்டும் ஃபேஸ்புக் பதிவுகளை சோதித்து பார்த்துள்ளார். அவற்றில் சில புகைப்படங்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டது.

லீசாவின் மகளிடம் விசாரித்த போது உண்மை வெளியாகியுள்ளது. தற்போது தலைமறைவாக இருக்கும் லீசாவை வலைவீசி தேடி வருகின்றனர்.

Death
Accident என நாடகம் : இன்சூரன்ஸ் பணத்துக்காக மனைவியை கார் ஏற்றி கொலை செய்த கணவர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com