மீன் சமைத்து சாப்பிட்ட தம்பதி: மனைவி உயிரிழப்பு; கோமா ஸ்டேஜில் கணவர் - அப்படி என்ன மீன்?

கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த மீனை மதிய உணவிற்கு சமைத்துச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, அந்த மூதாட்டிக்கு உடல் நடுங்க ஆரம்பித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
Woman Dies, Husband In Coma After Eating Deadly Fish; Know All About Puffer Poisoning
Woman Dies, Husband In Coma After Eating Deadly Fish; Know All About Puffer PoisoningTwitter
Published on

மலேசியாவில் மூதாட்டி ஒருவர் பஃபர் மீன் உணவைச் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த உணவை சாப்பிட்ட கணவர் கோமா நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த மார்ச் 25ஆம் தேதி மலேசியாவின் ஜோஹோரில் இந்தச் சம்பவம் நடந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தம்பதியின் மகள் இது குறித்து கூறுகையில்,

" தனது தந்தை பஃபர் மீனை உள்ளூர் கடையில் வாங்கி வந்துள்ளார்.

என் பெற்றோர் பல ஆண்டுகளாக அதே மீன் வியாபாரியிடம் மீன் வாங்குவதால் அந்த மீன் குறித்து அவர்கள் யோசிக்கவில்லை

தன் தந்தை ”உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் இவ்வளவு கொடிய மீனைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் வாங்கிருக்க மாட்டார்" என்றார்.

கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த மீனை மதிய உணவிற்கு சமைத்துச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே, அந்த மூதாட்டிக்கு உடல் நடுங்க ஆரம்பித்து மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

அவரது கணவருக்கும் ஒரு மணிநேரத்திற்குப் இதேபோன்ற அறிகுறிகள் ஏற்பட்டன. உடனே தம்பதியரின் மகள் அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அன்று மாலையே மூதாட்டி இறந்துவிட்டார். கணவரும் இப்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜில் உள்ளார்.

Woman Dies, Husband In Coma After Eating Deadly Fish; Know All About Puffer Poisoning
நாம மீனை சாப்பிடுவோம், ஆனா நம்மளேயே சாப்பிடுற மீன்கள் பற்றி தெரியுமா?

பஃபர் மீன் என்றால் என்ன?

உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கூற்றுப்படி, டெட்ரோடோடாக்சின், அதிக நச்சுப் பொருள் பஃபர் மீன்களில் காணப்படுகிறது.

மிகவும் பிரபலமான சுவையான, பஃபர் மீனில் விஷத்தன்மை அதிகம் காணப்படுவதால், அந்த குறிப்பிட்ட விஷத்தன்மையை அகற்ற மீனவர்களுக்கு பயிற்சி தேவைப்படுகிறது.

பஃபர் மீனில் உள்ள நச்சுத்தன்மை நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியது. அதன் விளைவாக இதய செயலிழப்பு, சுவாச பிரச்சினையும் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கொடிய அறிகுறிகள்

இந்த மீனை நீங்கள் உட்கொண்டவுடன் தோன்றும் சில கொடிய அறிகுறிகள்;

வாயைச் சுற்றி உணர்வின்மை

கூச்ச உணர்வு

தொடர்ச்சியான உமிழ்நீர்

குமட்டல்

வாந்தி

உணர்வு இழப்பு

சுவாச செயலிழப்பு

இறப்பு

பஃபர் மீன் விஷத்திற்கான முதலுதவி

மீனை சாப்பிட்ட 3 மணி நேரத்திற்குள் அதனை வாந்தி எடுக்க வேண்டும்.

அவர்களை உயிருடன் வைத்திருக்கவும் பக்கவாதத்தைத் தவிர்க்கவும் செயற்கை சுவாசம் கொடுக்க முயற்சிக்கவும்

Woman Dies, Husband In Coma After Eating Deadly Fish; Know All About Puffer Poisoning
AquaDom: உலகின் மிகப்பெரிய மீன் தொட்டி வெடித்துச் சிதறல் - 1500 மீன்களின் நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com