” ஒரு பைசா கூட வேண்டாம்” உலகம் முழுவதும் பயணம் செய்து மோசமான வீடுகளை சுத்தம் செய்யும் பெண்

இப்போது உலகம் முழுவதும் பயணம் செய்து, அசுத்தமான வீடுகளை சுத்தம் செய்வதில் மக்களுக்கு உதவுகிறார். அவர் தனது வாடிக்கையாளர்களிடம் ஒரு பைசா கூட வசூலிப்பதில்லை என்பது தான் இதில் ஆச்சரியமே!
Woman
WomanTwitter

நம்மில் பெரும்பாலோருக்கு, வீட்டை சுத்தம் செய்வது என்பது பிடிக்காத ஒன்றாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு பெண்ணுக்கு வீடுகளை சுத்தம் செய்வது வாழ்க்கையில் ஒரு கனவாக இருக்கிறது.

இவர் உலகம் முழுவதும் இலவசமாக வீடுகளை சுத்தம் செய்வதற்காக மேலாளர் வேலையை விட்டுள்ளார்.

29 வயதான Auri Katariina என்ற பெண் வீடுகளை சுத்தம் செய்வதை மிகவும் விரும்புகிறார். இவர் 2021 கோடையில் ஒரு துப்புரவு நிறுவனத்தில் சேவை மேலாளராக இருந்தார்.

ஆனால் அந்த வேலையை விட்டுவிட்டார். இப்போது உலகம் முழுவதும் பயணம் செய்து, அசுத்தமான வீடுகளை சுத்தம் செய்வதில் மக்களுக்கு உதவுகிறார். அவர் தனது வாடிக்கையாளர்களிடம் ஒரு பைசா கூட வசூலிப்பதில்லை என்பது தான் இதில் ஆச்சரியமே!

ஆன்லைனில் வரும் கோரிக்கைகளில் இருந்து எந்த வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை ஆரி தேர்வு செய்கிறார்.

ஆனால் அவர் பெரும்பாலும் மிகவும் மோசமான வீடுகளை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார். இது குறித்த வீடியோக்களை டிக்டாக்கில் பதிவிட்டு வருகிறார்.

Woman
சிதைந்த டைட்டானிக் கப்பலை நேரில் பார்க்க ஆசை; 2 கோடி செலவு- 30 ஆண்டுகள் பணம் சேமித்த பெண்!

Auri Katariina டிக்டோக்கில் 7.8 மில்லியன் பின்தொடர்பவர்களைக் குவித்துள்ளார். அவர் தனது வீடுகளை சுத்தம் செய்யும் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம், டிக்டோக்கில் 7.8 மில்லியன் பின்தொடர்பவர்களைக் குவித்துள்ளார்.

ஃபின்லாந்தின் தம்பேரைச் சேர்ந்த அவுரி, தான் வீடுகளை இலவசமாகச் சுத்தம் செய்வதாகவும், அவருடைய சேவைகளை நீங்கள் பெறலாம் என்றும், யாரிடமும் தங்கள் வீட்டைச் சுத்தம் செய்ய கட்டணம் வசூலிக்க மாட்டார் என்று ஆரி குறித்து கூறுகிறார்.

"உலகம் முழுவதையும் இலவசமாக சுத்தம் செய்வதும், மக்களுக்கு உதவுவதும் எனது கனவு" என்று ஆரி கூறியுள்ளார்.

Woman
ஈரான்: "ஜாம்பி ஏஞ்சலினா" சிறைதண்டனைக்கு பின் உண்மை முகத்தை வெளிக்காட்டிய பெண்- யார் இவர்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com