Nike: கேக்கின் மீது Resume பிரிண்ட் செய்து அனுப்பிய பெண் - வைரலான LinkedIn போஸ்ட்

இதனை தொடர்ந்து, கேக் ஒன்றின் மேல் தனது ரெஸ்யூமை அச்சடித்து நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார் கார்லி. இன்ஸ்டாகார்ட் என்ற டெலிவரி நிறுவனம் இந்த கேக்கை நைக்கிற்கு டெலிவரி செய்துள்ளது.
resume cake
resume cakelinkedin
Published on

கேக்கில் resumeஐ அச்சடித்து நைக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார் கார்லி என்ற பெண் ஒருவர். 

தற்காலத்தில் வேலை தேடிவருபவர்கள் தங்கள் கிரியேட்டிவிட்டியை பல விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். சோமாட்டோ ஊழியர் போல வேடமணிந்து டெலிவரி செய்யும் உணவு பாக்கெட்டில் இளைஞர் ஒருவர் ரெஸ்யூமை சேர்த்து அனுப்பியது சில நாட்களுக்கு முன் வைரலானது. 

resume cake
கேக்குடன் Resume கொடுத்து வேலை கேட்ட சொமேட்டோ ஊழியர் - எங்கே?

அதே போல இங்கும் ஒரு பெண் கேக்கின் மீது தனது ரெஸ்யூமை அச்சிட்டு பிரபல நைக் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். கார்லி பிளாக்பர்ன் என்ற பெண் தன் LinkedIn பக்கத்தில் கேக்கின் புகைப்படம் பகிர்ந்து, அவர் ஏன் கேக்கில் தன் ரெஸ்யூமை அச்சடித்து அனுப்பினார் எனவும் கூறியிருந்தார். 

நீண்ட நாட்களாக வேலை தேடி வரும் கார்லி, நைக் நிறுவனத்தில் வேலைக்கு சேரவேண்டும் என பல முறை முயற்சித்துள்ளார். அப்போது நைக் நிறுவனத்தின் Just Do It Today விழா நடப்பது குறித்து அறிந்துள்ளார். பெரும்புள்ளிகள் கலந்துகொள்ளவிருக்கும் இந்த நிகழ்வு தான் தனது திறமையை காட்ட சரியான தருணம் என நினைத்த அவர், நைக் நிறுவனத்தின் Valiant Labs என்ற பிரிவுக்கு விண்ணப்பிக்க நினைத்துள்ளார். என்ன செய்யலாம் என்று யோசித்த கார்லிக்கு, கேக்களின் மீது புகைப்படங்கள் அச்சடித்திருப்பதை பார்த்துள்ளார். 

இதனை தொடர்ந்து, கேக் ஒன்றின் மேல் தனது ரெஸ்யூமை அச்சடித்து நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார் கார்லி. இன்ஸ்டாகார்ட் என்ற டெலிவரி நிறுவனம் இந்த கேக்கை நைக்கிற்கு டெலிவர் செய்துள்ளது. 

கார்லியின் கேக்கை கொண்டு சேர்த்த இன்ஸ்டாகார்ட் ஊழியர், கார்லியின் இந்த யோசனையை வெகுவாக பாராட்டி, "நீங்கள் என்னை இன்ஸ்பையர் செய்துள்ளீர்கள். எனக்கு நான் பார்க்கும் வேலை அலுப்பாக இருக்கிறது. இரு குழந்தைகளுக்கு தாயான நான், எனக்குள் இருக்கும் திறனை நிரூபிக்க இந்த யுக்தி உதவியுள்ளது" என தெரிவித்தார். 

கார்லியின் இந்த ஐடியா LinkedIn பயனர்கள் பலரை கவர்ந்துள்ளது

resume cake
Resume நிராகரிப்பு: அதே நிறுவனத்தை மீண்டும் அழைக்க வைத்த பெண் - என்ன செய்தார் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com