என்னதான் நல்ல படிப்புகளை எடுத்துப் படித்தாலும் அதற்கு ஏற்ற நல்ல வேலை கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் நல்ல சம்பளம் கிடைப்பதில்லை. ஏதோ கிடைத்த வேலையில் கிடைத்த சம்பளத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.
குறிப்பாகப் படித்த இளைஞர்கள் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் வேலை பார்த்து வருகின்றனர். ஸ்விக்கி, சொமோட்டோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களில் ஏராளமான படித்த இளைஞர்கள் பார்ட் டைமில் வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் இங்கு ஒரு இளைஞர் வித்தியாசமாக யோசித்து சொமேட்டோவில் வேலை செய்யும் ஊழியரைப் போன்று பல கம்பெனிகளுக்கு சென்று வேலை தேடி உள்ளார்.
எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்..? இது தொடர்பாக அந்த இளைஞர் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “சொமேட்டோ டெலிவரி பாய் போல சென்று என்னுடைய resume-ஐ pastry பாக்ஸில் வைத்து பல நிறுவனங்களுக்கு கொடுத்திருக்கிறேன்” எனக் குறிப்பிட்டு தனது linkedin profile-யையும் ஷேர் செய்திருக்கிறார்.
அதில் உள்ள ஃபோட்டோவில் ”பொதுவாக எல்லா resumeகளும் குப்பைக்குத்தான் போகும். ஆனால் எண்ணுடையது உங்கள் வயிற்றுக்குப் போகும்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனைக் கண்ட இணையவாசிகள் அவரது யோசனைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் லுகாஸ் என்ற இளைஞர் ஒருவர் அந்நாட்டில் பிரபலமான டெலிவரி நிறுவனமான postmates-ன் டி-ஷர்ட்டை அணிந்து donutகளை டெலிவரி செய்வது போன்று அதில் தனது resume-ஐ வைத்து வேலை கேட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust