நான்கு மணிநேரம் தனது மெசேஜ்க்கு பதிலளிக்காததால், தனது நண்பரின் வீட்டிற்கு ஆளில்லா விமானத்தை அனுப்பிய பெண்ணின் செயல் இணையவாசிகளிடையே கவனம் பெற்று வருகிறது.
வான் என்ற நண்பர், சமீபத்தில் இதயப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியிருந்தார்.
வான் ஓய்வில் இருந்ததால், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக பல குறுஞ்செய்திகளை அனுப்பிய தோழிக்கு பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
நான்கு மணிநேரமாக வான் தனது மெசேஞ்க்கு பதிலளிக்காததால், நண்பர் என்ன செய்கிறார் என்று தெரியாமல் தவித்த பெண், வான் வசிக்கும் இடத்திற்கு தனது ஆளில்லா விமானத்தை பறக்கவிட்டுள்ளார்.
வான் ட்ரோனைக் கண்டதும், ஆச்சரியத்துடன் தோழிக்கு ரிப்ளே செய்துள்ளார்.
இது குறித்து வான் சமூகவலைத்தளத்தில்,
என் தோழி என்னைப் பற்றி கவலைப்பட்டு, ஆளில்லா விமானத்தைப் பறக்கவிட்டு நான் என்ன செய்கிறேன் என்று சோதனை செய்துள்ளார்.
இது என்னை மிகவும் கவர்ந்தது, என்று அவர் கூறினார்.
அவர் எனக்கு நிறைய உதவியிருக்கிறார். சில சமயங்களில் எனக்கு சுவையான உணவைச் செய்து என்னுடன் பகிர்ந்து கொள்வார்" என்று வான் கூறினார்.
மனதைக் கவரும் வகையில் நடந்த இந்த செயல் நெட்டிசன்களை நெகிழ வைத்தது.
ஒரு சமூக வலைத்தள பயனர், "நீங்கள் உண்மையிலேயே உண்மையான நண்பர்கள். ஒரு நல்ல நண்பரைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
நீங்க உங்க நண்பர் மெசேஜ்க்கு ரிப்ளே செய்யவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust